Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 28th December 2022

Daily Current Affairs

Here we have updated 28th December 2022 current affairs notes. This notes will helpful for those who are preparing competative exams like TNPSC, TRB and Police Exams.

தமிழக செய்தி

  • தேசிய அளவில் பதிவான தற்கொலை நிகழ்வுகளில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளதாக தரவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
    • தமிழகத்தில் இதுவரை 18,925 தற்கொலைகள் நடந்துள்ளன.
    • முதலிடம்மகாராஷ்டிரா (22,207 தற்கொலைகள்)
    • இத்தரவுகளை சென்னை இன்ஃபோசிட்டி ரோட்டரி சங்கம் வெளியிட்டுள்ளது.
  • தமிழகத்தில் அரசு சேவைகளை விரைவாக அளிக்கும் வகையில் குடிமக்களுக்கான தனி அடையாள எண் வழங்கும் வகையில் மென்பொருள் தயாரிப்புக்கான அடிப்படை பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
  • பொள்ளாச்சியைச் சேர்ந்த இளம் எழுத்தாளர் ப.காளிமுத்துவிற்கு தமிழ் மொழிப் பிரிவில் “தனித்திருக்கும் அரளிகளின் மதியம்” என்னும் கவிதை தொகுப்பிற்காக “சாகித்திய யுவ புரஸ்கார் விருது” வழங்கப்பட்டுள்ளது.
  • தமிழக நகர்புற மேம்பாட்டு வளர்ச்சிக்காக மத்திய அரசு ஆசிய வளர்ச்சி வங்கியுடன் ரூ1,040 கோடி கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
    • இவ்வொப்பந்தம் மதுரை, கோவை, தூத்துக்குடி போன்ற நகரங்களில் வெள்ளத்தடுப்பு, குடிநீர், கழிவு நீர் சேவைகளை மேம்படுத்த உதவும்.

தேசிய செய்தி

  • கடந்த செப்டம்பர் வரையிலான காலத்தில் மத்திய அரசின் கடன் ரூ.147 லட்சமாக அதிகரித்துள்ளது என அரசின் கடன் மேலாண்மைக் குறித்த அறிக்கையை மத்திய நிதி அமைச்கம் அறிவித்துள்ளது.
    • ஏப்ரல் முதல் ஜூன் வரை 145.72 லட்சம் கோடி
    • ஜூலை முதல் செப்டம்பர் வரை 147.19 லட்சம் கோடி
  • மலைப் பிரதேசங்களில் அதிகம் பாதிப்புக்குள்ளாகக் கூடிய நீர் மின் திட்டங்கள், மின்சார நிலையங்கள் ஆகியவற்றுக்கு விரிவான முன்னறிவிப்பு முறையை உருவாக்க மத்திய எரிசக்கதித் துறையும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்  (டிஆர்டிஓ) புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
  • சூரியனுக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரத்திற்கு முன்னாள் பிரதமரான வாஜ்பாய் அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • மத்திய அரசின் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (FSSAI) உத்திர பிரதேசத்தின் புலந்த்ஷெகர் சிறை உணவுக்கு 5 நட்சத்திர அந்தஸ்து வழங்கியது.
    • FSSAI – 2008 September 5-ல் உருவாக்கப்பட்டது.

முக்கிய தினம்

  • தமிழ் ஆட்சி மொழி சட்டம் நிறைவேற்றப்பட்ட தினம். (டிசம்பர் 28)
    • 1956 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.
  • உலக சினமா தினம். (டிசம்பர் 28)
  • தேசிய காங்கிரஸ் 138வது நிறுவன தினம். (டிசம்பர் 28)
    • 1885 தொடங்கப்பட்டது
    • நிறுவனர் – ஆலன் ஆக்டேவியன் ஹீயூம்

Dec 24-25 Current Affairs | Dec 26-27 Current Affairs

Leave a Comment