Daily Current Affairs
Here we have updated 28-29th March 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தமிழகச் செய்தி
- பொது மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் மாதம் ஒருமுறை ஏதேனும் ஒரு வட்டார அலுவலகத்தில் மேயர் நேரடியாக மனுக்களை பெறும் வகையில் “மக்களைத் தேடி மேயர் திட்டம்” செயல்படுத்தப்படுமென சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார்
- பெண்களின் உயர்கல்வியை உறுதி செய்வதற்காக செயல்படுத்தப்பட்டு வரும் புதுமைப் பெண் திட்டத்தை தினமும் கண்காணிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
- புதுமைப் பெண் திட்டம் – 05.09.2022
- மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் தொகை திட்டம் “மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்” எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- இத்திட்டத்தில் பெண்களின் உயர் கல்வி படிப்பிற்காக மாதம் 1000 ரூபாய் வழங்கப்படுகிறது
- நம்ம ஊரு பள்ளி – 19.12.2022
- பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த செயல்படுத்தப்பட்டது.
- சிற்பி திட்டம் – 14.09.2022
- மாணவர்களை நல்வழிப்படுத்த செயல்படுத்தப்பட்டது.
- பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத்திட்டம் – 01.02.2023
- அரசு பள்ளிகளை சீரமைத்தல், புதிய வகுப்பறைகள் மற்றும் இதர வசதிகளை ஏற்படுத்த செயல்படுத்தப்பட்டது.
- புதுமைப் பெண் திட்டம் – 05.09.2022
- உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் இந்தியாவின் தலைநகரமாக தமிழகம் விளங்குகிறது.
- தமிழக அரசின் மூளைச்சாவு உறுப்பு மாற்று சிகிச்சை திட்டம் 05.09.2008-ல் தொடங்கப்பட்டது.
- தொடர்ந்து 6 முறை உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலத்துக்காக மத்திய அரசின் விருதினை தமிழகம் பெற்றுள்ளது.
- இந்தியாவிலேயே முதல்முறையாக விடியல் எனும் முழு தானியங்கி செயலி மூலம் உறுப்பு தான பதிவு நடைமுறை தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- சென்னையில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் அமெரிக்கக் கடற்படையின் “மேத்யூ பெர்ரி” கப்பலின் பராமரிப்புப் பணி நிறைவடைந்து அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- அமெரிக்க கடற்படையின் கப்பலான “மேத்யூ பெர்ரி” சென்னை அருகே உள்ள காட்டுப்பள்ளி எல்அனட்டி கப்பல் கட்டும் நிறுவனத்தில் பழுது மற்றும் பராமரிப்பு பணிக்காக மார்ச் 11-ம் தேதி அனுமதிக்கப்பட்டது.
- இதற்கு முன்பு “சார்லஸ் ரூட்” எனும் அமெரிக்கக் கடற்படை கப்பல் கடந்த 2022 ஆகஸ்டில் அனுமதிக்கப்பட்டு பழுது பார்க்கபட்டது குறிப்பிடத்தக்கது.
- உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்க புறப்பட்டு செல்லும் தமிழகத்தைச் சேர்ந்த மலையேற்ற வீராங்கனை என்.முத்தமிழ் செல்விக்கு நிதியுதவியாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அளித்துள்ளார்.
தேசிய செய்தி
- உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான காசநோய் பாதிப்பைக் கொண்ட நாடாக இந்தியா (28%) உள்ளது.
- சர்வதேச அளிவில் காசநோயை 2023-ம் ஆண்டுக்குள் ஒழிக்க உலக சுகாதர அமைப்பு இலக்கு நிர்ணயித்துள்ளது.
- காசநோயை 2025-ம் ஆண்டுக்குள் முற்றிலுமாக ஒழிக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது
விளையாட்டுச் செய்தி
- கேரளத்தில் நடைபெறும் இந்தியன் கிராண்ட் ப்ரீ 2 தடகள போட்டிகளில் மகளிருக்கான 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் தமிழக வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன் தங்கம் வென்றுள்ளார்.
- 84வது சீனியர் தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் ஜி.சத்யன், மகளிர் பிரிவில் ஸ்ரீஜா அகுலா ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.
முக்கிய தினம்
- சர்வதேச வலிப்பு நோய் விழிப்புணர்வு நாள் (or) ஊதா தினம்