Daily Current Affairs
Here we have updated 28-29th January 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
12வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு
- 2025 மே மாதத்தில் சென்னையில் 12வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தர் தலைமையில் நடைபெற உள்ளது.
- இம்மாநாடானது உலக மொழிகளில் தமிழின் ஆளுமையும், தாக்கமும் என்ற தலைப்பில் நடைபெற உள்ளது.
இரத்தப்பை விநியோகம்
- ஒடிசா, கோர்தா மாவட்டத்தில் அமைந்துள்ள பொது சுகாதார மையத்திற்கு புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ட்ரோன் மூலம் இரத்தப்பை கொண்டு செல்லப்பட்டுள்ளது.
- நாட்டிலேயே முதன் முறையாக ட்ரோன் மூலம் இரத்தப்பை விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
பஜ்ஜெட் தாக்கல்
- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 6வது முறையாக மத்திய பஜ்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
- மத்திய நிதி நிலை அறிக்கை (பஜ்ஜெட்) – 112 விதி
தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவின் அதிகமுறை பஜ்ஜெட் தாக்கல் செய்தவர் – மொராஜி தேசாய் (10 முறை)
- 9 முறை பஜ்ஜெட் தாக்கல் செய்தவர் – ப.சிதம்பரம்
- சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்தவர் – சண்முகம் செட்டி
- குடியரசு இந்தியாவின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்தவர் – ஜான் மேத்தாய்
அகில இந்திய அவை தலைவர்கள் மாநாடு
- மகாராஷ்டிராவின் மும்பையில் 84வது அகில இந்திய அவை தலைவர்கள் மாநாடு நடைபெற்றது.
தொடர்புடைய செய்திகள்
- மக்களவை சபாநாயகர் – 93 விதி
- மாநில சட்டமன்ற சபாநாயர் – 178 விதி
ப்ரீத்தி ரஜாக்
- இந்திய ராணுவத்தின் முதல் பெண் சுபேதாராக ப்ரீத்தி ரஜாக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்திய உச்சநீதிமன்றம்
- ஜனவரி 28-ல் இந்திய உச்ச நீதி மன்றத்தின் 75வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
- 28.01.1950 முதல் ஆண்டு தோறும் ஜனவரி 28-ல் இந்திய உச்ச நீதிமன்ற தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஜம்மு – காஷ்மீர்
- இந்திய ராணுவமானது இந்தியா செல்ஃபி பாயின்டை ஜம்மு – காஷ்மீரில் தொடங்கியுள்ளது.
நிதிஷ் குமார்
- பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் பதவியேற்றுள்ளார்.
- 9வது முறையாக முதல்வராக பதவியேற்றுள்ளார்.
- துணை முதல்வராக சாம்ராட் செளத்ரி, விஜய்குமார் சின்ஹா பதவியேற்றுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
- ஐக்கிய ஜனதா தள கட்சி – அம்பு (தேர்தல் சின்னம்)
- முதலமைச்சரை தலைவராகக் கொண்ட அமைச்சரவை ஆளுநருக்கு தேவைப்படும் உதவி, ஆலோசனை வழங்கல் – 163(1)
- முதலமைச்சர் நியமனம் – 164(1)
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி – எகிப்து
- ஆடவர் 10மீ ஏர்ரைஃபிள் பிரிவில் திவ்யன்ஷ் சிங் தங்கம் வென்றுள்ளார்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி – மெல்போர்ன்
- ஆடவர் ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் ஜானிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்று தனது முதலாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.
- ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.
- ரோகன் போபண்ணா (43 வயது) கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற வயதான வீரர் என்ற பெருமையையும், இரட்டையர் தரவரிசையில் முதலிடம் பிடித்த வயதான வீரர் என்ற பெருமையையும் படைத்துள்ளார்.
- ரோகன் போபண்ணாவின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.
- மகளிர் ஒற்றையர் பிரிவில் பெலாரஸின் அரியனா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்று தனது இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.
கேலோ இந்தியா
- ஆடவர் வாலிபால் போட்டியில் தமிழ்நாடு தங்கம் (சாம்பியன்) வென்றுள்ளது.
- மகளிர் வாலிபால் போட்டியில் தமிழ்நாடு வெண்கலம் வென்றுள்ளது.
- ஆடவர் சைக்கிளிங் ரோட் ரேஸ் போட்டியில் கிஷோர் தங்கம் வென்றுள்ளார்.
- மகளிர் 100 மீ பேக்ஸட் ரோக் நீச்சல் போட்டியில் தீக்ஷா சிவக்குமார் தங்கம் வென்றுள்ளார்.
ஹாக்கி ஃபைவ்ஸ் உலகக் கோப்பை போட்டி
- மகளிருக்கான இப்போட்டியில் நெதர்லாந்து அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
- இந்திய அணி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது
உலக தொழுநோய் தினம் (World Leprosy Day) – Jan 28
- கருப்பொருள்: Beat Leprosy
- ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் அனுசரிக்கப்படுகிறது.
தரவு தனியுரிமை தினம் (Data Privacy Day) – Jan 28
- கருப்பொருள்: Be Privacy Conscious
இந்திய செய்தித்தாள் தினம் (Indian Newspaper Day) – Jan 29
January 25 Current Affairs | January 26 Current Affairs