Daily Current Affairs
Here we have updated 28th December 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
விஜயகாந்த்
25.08.1952 – 28.12.2023
- தேசிய முற்போக்கு திராவிட கழகத்தலைவரான விஜயகாந்த் காலமானார்
- 2011ஆம் ஆண்டில் எதிர்கட்சித் தலைவராக செயல்பட்டுள்ளார்
- 14.09.2005-ல் தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சி தொடங்கிய இவர் 2006ஆம் ஆண்டில் விருத்தாச்சல தொகுதியிலும், 2011-ல் ரிஷிவந்தியம் தொகுதியில் வெற்றி வெற்றி பெற்றுள்ளார்
- 2001ஆம் ஆண்டு கலைமாமணி விருதும், 2011ஆம் ஆண்டு மதிப்புறு முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
ஜெ.என்.1 கரோனா பாதிப்பு
- தமிழகத்தில் ஜெ.என்.1 கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
- திருச்சி, மதுரை, கோவை, திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
கிக் தொழிலாளர் – நலவாரியம் அமைப்பு
- தமிழக அரசானது கிக் தொழிலாளர்களுக்காக தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர் நல வாரியத்தை (Tamilnadu Platform Gig Worker Welfare Board) அமைத்துள்ளது.
உத்திரபிரதேசம், அயோத்தி
- டிசம்பர் 30-ல் உத்திரபிரதேசம், அயோத்தியில் நாட்டின் முதல் அம்ரித் ரயிலானது துவக்கப்பட உள்ளது
- இந்த இரயிலை பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளார்.
துணை தூதரகம்
- நியூசிலாந்து நாட்டின் ஆக்ஸ்லாந்தில் இந்திய துணை தூதரகம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
உத்திரகண்ட்
- உத்திரகண்டில் அம்மாநில முதல்வர் புஷ்ர்கர் சிங் தாமி வெட் இன் இந்தியா (Wed In India) திட்டத்தை செயல்படுத்தினார்.
தலைமைச் செயலர்கள் மாநாடு
- டிசம்பர் 28 முதல் தில்லியில் நடைபெற உள்ள 3வது தலைமைச் செயலர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்
- இம்மாநாடானது டிசம்பர் 28 முதல் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.
புதுதில்லி
- காயின்ஸ் ஸ்விட்ச் (Coin Swich) வெளியிட்டுள்ள இந்தியாவின் கிரிப்டோகரன்சி முதலீட்டு அறிக்கையில் புதுதில்லி முதலிடம் பிடித்துள்ளது.
மேற்கூரை சூரிய சக்தி நிறுவப்பட்ட திறன்
- மேற்கூரை சூரிய சக்தி நிறுவப்பட்ட திறன் பட்டியலில் குஜராத் முதல் இடத்தையும், மகாராஷ்டிரா இரண்டாவது இடத்தையும், ராஜஸ்தான் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது.
பாகிஸ்தான்
- பல ஏவுகணைகளை சரமாரியாக ஏவும் திறனுடைய பட்டா-2 தளவாடத்தை பாகிஸ்தான் வெற்றிகரமாக சோதித்துள்ளது.
- 400 கி.மீ. தொலைவு வரையிலான இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டவை.
- இதற்கு முன்னோட்டமாக பட்டா-1 ஏவுகணைத்தளவாடம் கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் சோதிக்கப்பட்டது.
சர்வதேச பாலின சமத்துவ பரிசு
- சர்வதேச பாலின சமத்துவ பரிசானது ஆப்கானிஸ்தான் பெண்கள் திறன் மையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது
- பெண்கள் உரிமைகளை மேம்படுத்து பாதுகாக்க போராடியதற்காக வழங்கப்பட்டுள்ளது.
மல்யுத்த சம்மேளனம்
- இந்திய மல்யுத்த சம்மேளத்தினை நிர்வகிக்க இந்திய வுஷு சங்கத் தலைவரான பிபூந்தர் சிங் பஜ்வா தலைமையில் 3 நபர் குழு ஒன்றை இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமித்துள்ளது.
- இதன் உறுப்பினர்களாக முன்னாள் ஹாக்கி வீரரான எம்.எம்.சோமய்யாவும், முன்னாள் பாட்மின்டன் வீராங்கனையான மஞ்சுஷா கன்வரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கேலோ இந்தியா பாரா விளையாட்டு போட்டி
- கேலோ இந்தியா பக்கப்பட்டியலில் 105 பதக்கங்களுடன் ஹரியானா முதலிடத்தையும், உத்திரப்பிரதேசம் 62 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தையும், தமிழ்நாடு 42 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
December 26 Current Affairs | December 27 Current Affairs