Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 28th December 2024

Daily Current Affairs

Here we have updated 28th December 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

ஜனனி நாராயணன்

Vetri Study Center Current Affairs - Janane Narayanan

  • தமிகழத்தினை சேர்ந்த சிறுமியான ஜனனி நாராயணனுக்கு (14வயது) குழந்தைக்களுக்கான பால் புரஸ்கார் விருதினை வென்றுள்ளார்
  • வீர்பால் திவாஸ் தினத்தினை முன்னிட்டு வழங்கப்படும் இவ்விருது இவருடன் 17பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • வீர்பால் திவாஸ் – டிசம்பர் 26

டார்ஜிலிங் வன உயிரியல் பூங்கா

  • மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் வன உயிரியல் பூங்காவிற்கு நெதர்லாந்து நாட்டிலிருந்து இரு அரிய வகை சிவப்பு பாண்டா கரடிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

மக்களைவைத் தேர்தல்

  • நிகழாண்டு மக்களவைத் தேர்தலில் ஆண் வாக்காளர்கள் 65.55%மும் பெண் வாக்காளர்கள் 65.78%மும் வாக்களித்துள்ளனர்.

ராஷ்ட்ரபவ் செயலி

  • நாட்டில் நடைபெறும் விழாக்களை அறிந்து கொள்ள ராஷ்ட்ரபவ் செயலியை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • பரிதி செயலி – ஜவுளித்துறை
  • அன்னசக்ரா & ஸ்கேன் செயலி – PDS துறை
  • இ டாக்கிள் செயலி – நுகர்வோர் பாதுகாப்பு

சுபோஷித் பஞ்சாயத்து

  • கிராமப்புறங்களில் ஊட்டசத்தினை மேம்படுத்த சுபோஷித் பஞ்சாயத்து திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய அணை

Vetri Study Center Current Affairs - Emerald Dam

  • உலகின் மிகப்பெரிய அணை சாங்போ ஆற்றின் குறுக்கே கட்டப்பட உள்ளது.
  • இந்த அணையை சீனா கட்ட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • திபெத்தில் உள்ள மானசரோவர் ஏரியின் கிழக்கே கைலாஷ் மலைத் தொடரில் செம்மாயுங்டங் என்ற பனியாற்றில் 5150 மீ உயரத்தில் உற்பத்தியாகிறது.
  • பிரம்புத்திரா ஆறு திபெத் பகுதியில் சாங்போ என அழைக்கப்படுகிறது.
  • சாங்போ என்பதற்கு தூய்மை என பொருள்படுகிறது.
  • இதன் நீளம் 2900 கி.மீ. இதில் 900 கி.மீ மட்டும் இந்தியாவில் பாய்கிறது.
  • அருணாச்சலப்பிரதேசத்தின் திகாங் என்ற மலை இடுக்கின் வழியாக இந்தியாவிற்குள் நுழைகிறது.
  • இதன் துணை ஆறுகள்: திஸ்டா, மானாஸ், பராக், சுபான்ஸ்ரீ

அழைக்கப்படும் விதம்

 

  • திபெத் பகுதி – சாங்போ
  • இந்தியா – பிரம்மபுத்திரா
  • வங்கதேசம் – ஜமுனா
  • கங்கை ஆற்றுடன் இணையும் போது – மேக்னா

மார்பர்க் வைரஸ்

  • ருவாண்டா நாட்டில் மார்பர்க் வைரஸ் தொற்று முடிவுக்கு வந்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்நோய்தொற்று பழந்திண்ணி வெளவாலால் ஏற்படுகிறது.

ஹாக்கி இந்தியா லீக்

  • ஹாக்கி இந்தியா லீக் ஒடிசாவின் ரூர்கேலாவில் நடைபெற்றது.

 

Related Links

Leave a Comment