Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 28th February 2024

Daily Current Affairs

Here we have updated 28th February 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

களஞ்சியம் செயலி (Kalanjiyam)

Vetri Study Center Current Affairs - Kalanjiyam

  • தமிழ்நாடு நிதித்துறையானது களஞ்சியம் செயலி (Kalanjiyam) என்னும் செயலியை அறிமுகம் செய்துள்ளது.
  • இச்செயலியானது தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு மற்றும் பே சிலிப் வரையிலான பணிப் பலன்களை எளிதாக்குகிறது.
  • இணையதளம்: www.karuvoolam.tn.gov.in/ta/

வாக்காளர் விழிப்புணர்வு

  • வரும் மக்களவை தேர்தலில் ஒட்டுப்பதிவு சதவீதத்தை அதிகரிப்பதற்காக வங்கிகள், தபால் நிலையங்களில் வாக்காளார் விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • தேர்தல் ஆணையம் – 24.01.1950
  • தேசிய வாக்காளர் தினம் – ஜனவரி 25
  • தேர்தல் ஆணையம் விதி – 324 – 329

விண்வெளிக்கு செல்லும் வீரர்கள்

Vetri Study Center Current Affairs - Gaganyaan

  • ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்ல உள்ள 4 வீரர்களை பிரதமர் மோடி தேர்வு செய்துள்ளார்.
  • 2025-ல் 4 வீரர்களும் விண்ணிற்கு செல்ல உள்ளனர்.

விண்வெளிக்கு செல்லும் வீரர்கள்

  1. அஜித் கிருஷ்ணன் (தமிழ்நாடு)
  2. பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் (கேரளா)
  3. அங்கத் பிரதாப் (உத்திரப்பிரதேசம்)
  4. சுபான்ஷூ சுக்லா (உத்திரப்பிரதேசம்)

தொடர்புடைய செய்திகள்

  • விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர் – ராகேஷ் சர்மா
  • விண்வெளிக்கு சென்ற இரண்டாவது இந்தியர் – கல்பனா சாவ்லா

நாட்டுக்காக எனது முதல் வாக்கு

  • நாட்டில் முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தேர்தல் ஆணையமானது நாட்டுக்காக எனது முதல் வாக்கு என்ற பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது.
  • முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் – 1.85 கோடி

விலங்கு மீட்பு மையம்

  • குஜராத்தின் ஜாம் நகரில் உலகின் மிகப்பெரிய விலங்கு மீட்பு மையத்தினை ஆனந்த் அம்பானி திறந்து வைத்துள்ளார்.

ஏ.எம்.கான்வில்கர்

Vetri Study Center Current Affairs - A.M.Khanwilkar

  • முன்னாள் உச்ச நீதி மன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் லோக்பால் அமைப்பின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஸீவீடன்

  • வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் (NATO) 32வது உறுப்பினராக ஸ்வீடன் இணைந்துள்ளது.
  • NATO –  North Atlantic Treaty Organization – 04.04.1949
  • தலைமையகம் – பிரசெல்ஸ் பெல்ஜியம்

உலக வர்த்தக அமைப்பு அமைச்சர்கள் மாநாடு

  • 13வது உலக வர்த்தக அமைப்பு (WTO) அமைச்சர்கள் மாநாடானது அபுதாபியில் நடைபெற்றுள்ளது.
  • WTO – World Trade Organization – 1995
  • தலைமையகம் – ஜெனிவா, சுவிட்சர்லாந்து

பிபிசி தலைவர்

Vetri Study Center Current Affairs - Samir Shah

  • இந்தியாவின் வம்சாவளியைச் சேர்ந்த சமீர் ஷா பிபிசி (BBC) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • BBC – British Broadcasting Corporation – 18.10.1922

டி20 கிரிக்கெட் – அதிவேக சதம்

Vetri Study Center Current Affairs - Jan Nicol Loftie Eaton

  • நமீபிய கிரிக்கெட் வீரரான ஜேன் நிகோல் லாஃப்டி ஈட்டன் 33 பந்துகளில் அதிவேகமாக சதம் அடித்து சாதனை புரிந்துள்ளார்.
  • நேபாளத்தின் குஷால் மல்லா 34 பந்துகளில் சதம் அடித்ததே சாதனையாக இருந்து வந்தது.

தேசிய அறிவியல் தினம் (National Science Day) – பிப் 28

Vetri Study Center Current Affairs - National Science Day

  • 28.02.1928-ல் சி.வி.ராமன் ராமன் விளைவைக் கண்டு பிடித்த நாளானது தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது.
  • இதற்காக 1930 நோபல் பரிசு பெற்றுள்ளார்.
  • கருப்பொருள்: Indigenous Technologies for Vikist Bharat

 

February 25-26 Current Affairs  | February 27 Current Affairs

Related Links

Leave a Comment