Daily Current Affairs
Here we have updated 28th February 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
பெயர் சூட்டல்
- அரக்கோணத்தில் உள்ள CISF ஆட்சேர்ப்பு பயிற்சி மையத்திற்கு ராஜ ஆதித்த சோழன் பெயர் சூட்டப்பட்டது.
- CISF (Central Industrial Security Force) – மத்திய தொழில் காவல்படை
- CISF உருவாக்கப்பட்ட நாள்: 10.03.1969
மறுவாழ்வு மையம்
- தமிழக அரசு தொடங்கியுள்ள போதை ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு மையத்திற்கு கலங்கரை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- விழுதுகள் – மாற்றுத்திறனாளிகளுக்காக தொடங்கப்பட்ட திட்டம்
ஐஐடி மெட்ராஸ்
- இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் டெஸ்ட் டிராக்கை ஐஐடி மெட்ராஸ் அறிமுகம் செய்துள்ளது.
ஜூமோயர் நடனம்
- அசாம் மாநிலத்திலுள்ள சதான் என்ற தேயிலை பழங்குடியினரின் நாட்டுப்புற நடனம் ஆகும்.
தொடர்புடைய செய்திகள்
இந்திய நாட்டுப்புற நடனங்கள்
மாநிலம் | புகழ்பெற்ற நடனம் |
தமிழ்நாடு | பரதநாட்டியம், கரகாட்டம், ஒயிலாட்டம், கும்மி, தெருக்கூத்து, பொம்மலாட்டம், புலியாட்டம், கோலாட்டம், தப்பாட்டம் |
கேரளா | கதகளி, தெய்யம், மோகினியாட்டம் |
பஞ்சாப் | பாங்க்ரா |
குஜராத் | கார்பா, தாண்டியா |
ராஜஸ்தான் | கல்பேலியா, கூமர் |
உத்திரப்பிரதேசம் | ராசலீலா |
உத்திரகண்ட் | சோலியா |
அசாம் | சத்ரியா, பீஹு |
ஆந்திரப்பிரதேசம் | குச்சிப்புடி |
கர்நாடகா | யக்சகானம் |
ஒடிசா | ஒடிசி |
மணிப்பூர் | மணிப்புரி |
வட இந்தியா | கதக் |
ஜம்மு காஷ்மீர் | தும்ஹல் |
கோல்டு கார்டு திட்டம்
- அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்காக தொடங்கப்பட்ட திட்டம் ஆகும்.
- இத்திட்டத்தின்படி அமெரிக்காவில் குடியேறுபவர்கள் 5 மில்லியன் டாலர் கொடுத்து அமெரிக்க குடியுரிமை பெற முடியும்.
காலி நிதி
- ரோமில் நடைபெற்ற COP 16-ல் காலி நிதி (Cali Fund) தொடங்கப்பட்டது.
COP-17
- உயிரியல் பன்முகத்தன்மை தொடர்பான ஐ.நா.மாநாடு COP-17 அர்மேனியாவின் யேரிவன் நகரில் நடைபெற உள்ளது.
முக்கிய தினம்
தேசிய அறிவியல் தினம் (National Science Day) – பிப்ரவரி 28
- 1986-முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.
- சர்.சி.வி.ராமனால் ராமன் விளைவை கண்டுபிடித்த நாளை முன்னிட்டு கொண்டாடப்படுகிறது.
- சர்.சி.வி.ராமனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு 1930-ல் கிடைத்துள்ளது.
உலக புரத தினம் (World Protein Day) – பிப்ரவரி 28