Daily Current Affairs
Here we have updated 28th January 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
சி.நாராயணசாமி நாயுடு விருது 2025
- தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முருகவேல் என்பவருக்கு சி.நாராயணசாமி நாயுடு விருது 2025 வழங்கப்பட்டுள்ளது.
- இவ்விருதானது அதிக நெல் உற்பத்தி செய்பவர்களுக்கு வழங்கப்படுகிறது
கோட்டை அமீர் விருது 2025
- ராமநாதபுரத்தை சேர்ந்த அமீர் அம்சார் என்பவருக்கு கோட்டை அமீர் விருது 2025 வழங்கப்பட்டுள்ளது.
- மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டவருக்கு வழங்கப்படுகிறது.
அண்ணா பதக்கம் 2025
- சென்னை அடையாற்றில் சிக்கிய சிறுவர்களை காப்பாற்றிய வெற்றிவேல் என்பவருக்கு அண்ணா பதக்கம் 2025 வழங்கப்படுகிறது.
- வீரதீர செயல்கள் புரிபவர்களுக்காக வழங்கப்படுகிறது.
சிறந்த காவல் நிலைய விருது
- மதுரை, திருப்பூர், திருவள்ளூர் ஆகிய முறையே முதல் மூன்று இடத்திற்கான விருதினை பெற்றுள்ளன.
அலங்கார ஊர்தி விழா
- இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, காவல்துறை, இந்து சமய அறநிலையத்துறை ஆகிய முறையே முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.
பொதுசிவில் சட்டம்
- உத்திரகாண்ட் மாநிலமானது பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- பொதுசிவில் சட்டம் – விதி 44
- சுந்திரத்திற்கு பின்பு பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலம் – உத்திரகாண்ட்
- சுந்திரத்திற்கு முன்பே பொதுசிவில் சட்டமானது கோவாவில் அமலில் உள்ளது.
சம்மன் சஞ்சீவினி
- ஹரியானா மாநிலம் சம்மன் சஞ்சீவினி செயலியை உருவாக்கியுள்ளது.
- பெண்கள் மற்றும் கிஷோரி சம்மான் யோஜனா திட்டத்தின் கீழ் 10-45 வயது வரையுள்ள பெண்களுக்கு வழங்கப்படும் சானிட்டரி நாப்கின் முறையாக வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்ய உருவாக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா ஓப்பன் பட்டம் 2025
- ஆண்கள் பிரிவு – ஜானிக் சின்னர்
- பெண்கள் பிரிவு – மேடிசன் கீசன்
முக்கிய தினம்
தரவு பாதுகாப்பு தினம் (Data Protection Day) – ஜனவரி 28