Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 28th November 2023

Daily Current Affairs

Here we have updated 28th November 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

பெயர் மாற்றம்

Vetri Study Center Current Affairs - National Medical Commission

  • தேசிய மருத்துவ ஆணையத்தின் இலச்சினையில் இருந்த இந்தியா என்ற பெயர் பாரத் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • மேலும் தன்வந்திரியின் உருவமும் சேர்க்கப்பட்டுள்ளது.
  • தன்வந்தரி என்பது உடல் நலம் வேண்டி வழிபடும் தெய்வமாகும்.

ஜோதிபா பூலே

Vetri Study Center Current Affairs - Jyotiba Poole

  • ஜோதிராவ் புலே நினைவு தினம் இன்று (28.11.2023) அனுசரிக்கப்படுகிறது.
  • பிறப்பு : 11.04.1827
  • 1873-ல் சத்யசோதக் சமாஜம் அமைப்பை தொடங்கியுள்ளார்.
  • குலாம்கிரி என்னும் நூலினையும் எழுதியுள்ளார்.
  • இவருக்கு காந்தியடிகளுக்கு முன்பே மகாத்மா என்னும் பட்டமும் வழங்கப்பட்டுள்ளது.
  • இவரின் மனைவியான சாவித்திரிபாய் புலே முதல் பெண் ஆசிரியர் ஆவார்.

எம்க்யூ9பி ப்ரிடேட்டர் ட்ரோன்கள்

Vetri Study Center Current Affairs - MQ 9B Predator Drones

  • இந்தியா 2024 மார்ச்சுக்குள் 31 எம்க்யூ9பி ப்ரிடேட்டர் ட்ரோன்கள் (ஆளில்லா விமானம்)-ஐ அமெரிக்காவிடம் இருந்து வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
  • நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு எதிராக போர் புரிதல், கடல் பரப்பில் கண்காணிப்பு உள்பட பல்வேறு பணிகளை எம்க்யூ9பி ப்ரிடேட்டர் ட்ரோன்கள் மேற்கொள்கின்றன.

புலிகள் காப்பகம்

Vetri Study Center Current Affairs - Tiger Reserve

  • இந்தியாவின் மிகப்பெரிய புலிகள் காப்பகமானது மத்தியபிரதேசத்தில் தாமோ மாவட்டத்தில் அமைய உள்ளது.
  • நெளராதேகி வனவிலங்கு சரணாலயம், ராணி துர்காவதி வனவிலங்கு சரணாலயம் இணைந்து உருவாக்கப்பட்ட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • சர்வதேச புலிகள் தினம் – ஜூலை 29
  • தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA – National Tiger Conservation Authority) – 1972
  • புலி தேசிய விலங்கு – 1972
  • இந்தியாவில் புலிகள் காப்பக எண்ணிக்கை – 54
  • 54வது காப்பகம் – வீராங்கனை துர்காவதி புலிகள் காப்பகம், மத்திய பிரதேசம்

பால் உற்பத்தி

Vetri Study Center Current Affairs - Milk production

  • இந்தியாவின் அதிக பால் உற்பத்தி செய்யும் மாநிலாக உத்திரபிரதேசம் திகழ்கிறது.
  • இராஜஸ்தான், மத்தியபிரதேசம் அடுத்ததடுத்த இடங்களை பிடித்துள்ளன.

முட்டை உற்பத்தி

Vetri Study Center Current Affairs - Egg production

  • இந்தியாவின் முட்டை உற்பத்தியில் ஆந்திரபிரதேசம் முதலிடத்தில் உள்ளது.
  • தமிழ்நாடு, தெலுங்கானா அடுத்தடுத்த இடங்களில் திகழ்கின்றன.

ரைத்து பந்து திட்டம்

Vetri Study Center Current Affairs - Raithu Bandu Project

  • தெலுங்கானாவில் விவசாயிகளுக்கு வருடம் இருமுறையாக ரூ.5,000 வழங்கும் ரைத்து பந்து திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
  • தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருப்பதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
  • ரைத்து பந்து திட்டம் (Rythu Bandhu Scheme) – 2018
  • தெலங்கானா சட்டமன்ற தொகுதிகள் – 119

நியூசிலாந்து

Vetri Study Center Current Affairs - Christopher Luxon

  • நியூசிலாந்தின் 42வது பிரதமராக கிறிஸ்டோஃபர் லக்ஸ்ன் பொறுப்பேற்றுள்ளார்.

மலேசியா அனுமதி

Vetri Study Center Current Affairs - Passport

  • இந்தியர்கள் நுழைவுஇசைவு (VISA) இல்லாமல் செல்ல மலேசிய அரசு அனுமதித்துள்ளது.
  • இந்த அனுமதி டிசம்பர் 1 முதல் 30 நாட்கள் அமலில் இருக்குமென மலேசிய பிரதமர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
  • தாய்லாந்து, இலங்கையை தொடர்ந்து மலேசியா நுழைவு இசைவினை வழங்கியுள்ளது.

புக்கர் பரிசு 2023

Vetri Study Center Current Affairs - Paul Lynch

  • அயர்லாந்து எழுத்தாளர் பால் லிஞ்சுக்கு புக்கர் பரிசு 2023-ஆனது வழங்கப்பட்டுள்ளது.
  • பால் லிஞ்சு எழுதிய ப்ரோஃபெட் சாங் என்ற நாவலுக்காக வழங்கப்பட்டது.
  • 2022-ல் புக்கர் பரிசு வென்றவர் – ஷெஹான் கருண திலக (இலங்கை எழுத்தாளர்)

தொடர்புடைய செய்திகள்

  • 1997 – அருந்ததி ராய் – தி காட் ஆப் சுமால் திங்ஸ் (The God of Small Thing)
  • 2006 – கிரண் தேசாய் – தி இன்ஹெரிட்டன்ஸ் ஓஃப் லாஸ் (The Inheritance of Loss)
  • 2008 – அரவிந்த் அடிகா – தி ஒயிட் டைகர் (The White Tiger)

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி-மலாகா

Vetri Study Center Current Affairs - Davis Cup Tennis Tournament

  • 111வது சீசன் டேவிஸ் கோப்பை ஆடவர் டென்னிஸ் போட்டியில் இத்தாலி அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
  • இத்தாலி அணியானது இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
  • ஆஸ்திரேலிய அணி 2-ஆம் இடம் பிடித்துள்ளது.

சிவப்பு கோள் தினம் (Red Planet Day) – Nov 28

Vetri Study Center Current Affairs - Red Planet Day

 

November 26 Current Affairs | November 27 Current Affairs

Related Links

Leave a Comment