Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 28th September 2023

Daily Current Affairs

Here we have updated 28th September  2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

மொழிபெயர்ப்பு விருதுகள்

Vetri Study Center Current Affairs - Arutselvar Na.Mahalingam Centenary

  • அருட்செல்வர் நா.மகாலிங்கம் நூற்றாண்டு விழாவில் அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
  • முதல் பரிசினை அசாதாவால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள நிலத்தின் விளிம்புக்கு என்ற நூல் பெற்றுள்ளது.
  • 2வது பரிசானது  கருங்குன்றம் என்ற ஆங்கில நூலினை தமிழில் மொழிபெயர்த்த கண்ணையன் தட்சிணா மூர்த்திக்கும், கே.சதாசிவன் எழுதிய ஆங்கில வரலாற்று ஆய்வு நூலை தமிழகத்தில் தேவதாசிகள் என்ற பெயரில் மொழிபெயர்த்த கமலாயலயனுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய பொலிவுறு நகரங்கள் மாநாடு

Vetri Study Center Current Affairs - Polivuru Cities Conference

  • 2023-ம் ஆண்டுக்கான இந்திய பொலிவுறு நகரங்கள் மாநாடானது மத்திய பிரதேசத்தின் இந்தூரில் நடைபெற்றுள்ளது. இந்திய குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு கலந்து கொண்டார்.
  • பொலிவுறு நகரங்கள் பட்டியிலில் முதலிடம் இந்தூர், இரண்டாவது இடம் சூரத், மூன்றாவது இடம் ஆக்ரா ஆகியவை பிடித்துள்ளன.
  • பொலிவுறு மாநிலங்கள் பட்டியிலில் முதலிடம் மத்தியப்பிரதேசம், இரண்டாவது இடம் தமிழ்நாடு, மூன்றாவது இடம் ராஜஸ்தான் மற்றும் உத்திரபிரதேசம் ஆகியவை பிடித்துள்ளன.

இந்திய ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை

Vetri Study Center Current Affairs - 2018 Everyone Is A Hero

  • 2023-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது தேர்வுக்கு இந்தியா சார்பில் 2018:எவ்ரிஒன் இஸ் எ ஹீரோ (2018: Everyone Is A Hero) திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வீராங்கனை துர்காவதி புலிகள் காப்பகம் (Veerangana Durgavati Tiger Reserve)

Vetri Study Center Current Affairs - Veerangana Durgavati Tiger Reserve

  • இந்தியாவின் 54வது புலிகள் காப்பகமான வீராங்கனை துர்காவதி புலிகள் காப்பகம் மத்திய பிரதேசத்தில் துவங்கப்பட்டுள்ளது.
  • 2,339 சதுர கிலோ மீட்டர் பரப்ளவு கொண்டது.
  • இது மத்திய பிரதேசத்தின் 7வது புலிகள் காப்பகம் ஆகும்.
  • கன்ஹா, பாந்தவர்கர், சத்புரா, பென்ச், பன்னா மற்றும் சய்சய்-துப்ரி ஆகிய 6 பூங்காக்கள் உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

தமிழகத்திலுள்ள புலிகள் காப்பகங்கள்

காப்பகங்கள் அமைவிடம்நிறுவப்பட்ட ஆண்டு
முதுமலை புலிகள் காப்பகம்நீலகிரி1940
ஆனைமலை புலிகள் காப்பகம்கோயம்புத்தூர்1976
முண்டந்துறை புலிகள் காப்பகம்களக்காடு1988
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்ஈரோடு2008
மேகமலை புலிகள் காப்பகம்திருவில்லிபுத்தூர்2021

நூர்-3 செயற்கைக்கோள் (Noor-3 Satellite)

Vetri Study Center Current Affairs - Noor-3 Satellite

  • விண்வெளியிலிருந்து படம் எடுக்கக்கூடிய தொலை உணர்வு செயற்கைக்கோளான நூர்-3 செயற்கைக்கோளை ஈரான் விண்ணில் செலுத்தியுள்ளது.

யூத் அபியாஸ் (YUDH ABHYAS)

Vetri Study Center Current Affairs - YUDH ABHYAS

  • இந்தியா-அமெரிக்கா இடையேயான கூட்டு 19வது இராணுவப் பயிற்சியானது அலாஸ்காவில் தொடங்கியுள்ளது.
  • 18வது இராணுவப் பயிற்சியானது உத்திரகாண்டின் அவுலி என்னுமிடத்தில் நடைபெற்றிருந்தது.

தொடர்புடைய செய்திகள்

  • இந்தியா மற்றும் பிரிட்டன் இடையேயான கூட்டு இராணுவ பயிற்சியானது அஜய வாரியன் என்னும் பெயரில் நடைபெற்றது.
  • இந்தியா மற்றும் மாலத்தீவு இடையேயான இராணுவப் பயிற்சி எக்ஸ் எகுவெரின் என்ற பெயரில் நடைபெற்றது.
  • ஆஸ்திரேலியாவின் சிட்டினி நகரில் க்வாட் நாடுகள் பங்கேற்கும்  பல தரப்பு கடற்படை பயிற்சியானது மலபார் என்னும் பெயரில் நடைபெற்றது.

ஜப்பானிய கிராண்ட் பிரிக்ஸ் போட்டி (Japanese Grand Prix)

Vetri Study Center Current Affairs - Max Verstappen

  • ரெட்புல் அணியை சேர்ந்த மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் (நெதர்லாந்து) சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
  • மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் 2023-ல் வென்ற 13வது சாம்பியன் பட்டமாகும்.
  • 2வது இடத்தை லாண்டோ நோரிஸ், 3வது இடத்தை ஆஸ்கார் பியாஸ்ட்ரி பிடித்துள்ளனர்

ஆசிய டி20 கிரிக்கெட்

Vetri Study Center Current Affairs - Asian Games - Nepalam Criker Team

  • சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் நேபாளம் அணி 314 அடித்து உலகச் சாதனை படைத்துள்ளது. கடந்த 2019-ல் ஆப்கானிஸ்தான் அணி 278 அடித்ததே உலகச்சாதனையாக இருந்து வந்துள்ளது. தற்போது அச்சாதனையை நேபாளம் அணி முறியடித்துள்ளது.
  • மங்கோலிய அணியை 41 ரன்களில் சுருட்டி 273 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை வெற்றியும் பெற்றுள்ளது.
  • மேலும் ஒரு இன்னிங்சில் அதிக சிக்கரும் (26) அடிக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது
  • சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் நேபாள அணி வீரரான குஷால் மல்லா 34 பந்துதுகளின் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் இந்தியாவின் ரோஹித் சர்மா 35 பந்துகளில் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது.
  • சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் நேபாள அணியின் மற்றொரு வீரரான தீபேந்திர சிங் அய்ரி 9 பந்துதுகளின் அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் இந்தியாவின் யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரைசதம் அடித்ததே சாதனையாக இருந்தது.

ஆசிய கோப்பை போட்டி-சீனா

Vetri Study Center Current Affairs - Asian Games

  • பாய்மரப்படகு போட்டியின் ஆடவர் டிஞ்ஜி ஐஎல்சிஏ-7 பிரிவில்  விஷ்ணு சரண் (தமிழ்நாடு) வெண்கலம் வென்றுள்ளார்.
  • துப்பாக்கி சுடுதல் போட்டியின் 50மீ ரைபிள் 3 பொசிஷன் மகளிர் தனிநபர் பிரிவில் சிஃப் கெளர் சர்மா தங்கமும், ஆஷி சோக்ஷி வெண்கலமும் வென்றுள்ளனர்.
  • துப்பாக்கி சுடுதல் போட்டியின் 50மீ ரைபிள் 3 பொசிஷன் மகளிர் அணிகள் பிரிவில் மனினி கெளசிக், சிஃப் கெளர் சர்மா தங்கமும், ஆஷி சோக்ஷி வெள்ளி வென்றுள்ளனர்.
  • 25மீ ரேபிட் பிஸ்டல் மகளிர் அணிகள் பிரிவில் ஈஷாசிங், மானு பாக்கர், ரிதம் சங்வான் தங்கம் வென்றுள்ளனர்.
  • 25மீ ரேபிட் பிஸ்டல் மகளிர் தனி நபர் பிரிவில் ஈஷாசிங் வெள்ளி வென்றுள்ளார்.
  • ஸ்கீட் ஆடவர் அணிகள் பிரிவில் அனந்த் ஜீட் சிங் நருஹா, ஜோத் சிங் காங்குரா, அங்கத் வீர் சிங் பாஜ்வா வெண்கலம் வென்றுள்ளனர்.
  • ஸ்கீட் ஆடவர் தனி நபர் பிரிவில் அனந்த் ஜீட் சிங் நருஹா வெள்ளி வென்றுள்ளார்.

உலக ரேபிஸ் தினம் (World Rabies Day) – Sep 28

TNPSC Current Affairs - World Rabies Day

  • கருப்பொருள்: “All for 1. One Health for all”

உலக கடல்சார் தினம் (World Maritime Day) – Sep 28

Vetri Study Center Current Affairs - World Maritime Day

  • கருப்பொருள்: “MARPOL at 50 – Our Commitment goes on”
  • ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் கடைசி வியாழக்கிழமை அன்று கடைபிடிக்கப்படுகிறது.

உலகளாவிய அணுக்களுக்கான சர்வதேச தினம் (International Day for Universal Access to Information) – Sep 28

Vetri Study Center Current Affairs - Asian Games

September 25 Current Affairs | September 26 Current Affairs

Leave a Comment