Daily Current Affairs
Here we have updated 29th November 2022 current affairs notes. This notes will helpful for those who are preparing competative exams like TNPSC, TRB and Police Exams.
தமிழக செய்தி
- நவம்பர் 27-ல் தமிழகத்தில் 6 முதல் 8 வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களின் கணிதம், அறிவியல் ஆர்வத்தை தூண்டும் விதமாக 13210 அரசு பள்ளிகளில் “வானவில் மன்றம்” என்ற திட்டத்தினை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.
- “எங்கும் அறிவியில் – யாதும் கணிதம்” என்பதனை அடிப்படையாக கொண்டு செயல்படும்.
- மேலும் இந்த திட்டத்தின் ஒருபகுதியாக 100 நடமாடும் அறிவியல் ஆய்வகங்கள் மற்றம் இருசக்கர வாகனங்களில பயிற்சி அளிக்க செல்லும் தன்னார்வலர்களையும் கொடியசைத்து வழி அனுப்பினார்.
- தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட “ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு முறைப்படுத்தும் சட்ட மசோதோ-2022” கலாவதி ஆனது.
- அக்டோபர் 28-ல் தமிழக அரசால் கவர்னக்கு இம்மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.
- அரசியல் சாசன சட்டப் பிரிவு 213(2)யின் அடிப்படையில் சட்டசபை கூடிய நாளில இருந்து 6 வாரங்களுக்குள் கவர்னர் ஒப்புதல் அளிக்காவிட்டால் அம்மசோதா தானேகவே காலாவதி ஆகிவிடும்.
- ரூ.1.14 கோடி மதிப்பீட்டிலான மாற்றத்திறனாளிகளுக்கான நடைபாதையை மெரினா கடற்கரையில் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- இத்திட்டமானது “சிங்கார சென்னை 2.0” என்ற திட்டதின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.
- 263 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலும், தரையிலிருந்து 1 மீட்டர் உயரமும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது
- மதுரை மாவட்டத்தினை சேர்ந்த விநாயக முருகன் டெல்லியில் உள்ள இலங்கை தூதரகத்தின் இலங்கை தோட்ட கலை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் “பனை அபிவிருத்தி சபை”யின் பிராண்ட் அம்பாசிடராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தேசிய செய்தி
- இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பி.டி.உஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- ஒலிம்பிக் சங்க தலைவராக நியமிக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமையினை பெற்றுள்ளார்.
- லான்செட் மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் 75 சதவீதத்திற்கும் அதிமானோருக்கு கட்டுபாடற்ற இரத்த அழுத்தம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
- 2023 பிப்ரவரி 13 முதல் .17 வரை ராணுவ துறை சார்பில் நடத்தப்படும் “14வது சர்வதேச விமான கண்காட்சி” பெங்களூர் எலஹங்காவில் உள்ள விமான படைதளத்தில் நடைபெற உள்ளது.
- இக் கண்காட்சி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.
- 1996-ல் முதல் சர்வதேச கண்காட்சி நடத்தப்பட்டது.
- நவம்பர் 28 முதல் டிசம்பர் 11 வரை ராஜஸ்தானின் மகாஜன் ஃபீல்ட் ஃபைரிங் ரேஞ்சில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ராணுவங்களுக்கு இடையேயான “Austra Hind 22” இருதரப்பு பயிற்சியின் முதல் பதிப்பு நடைபெறுகிறது.
- நவம்பர் 28 முதல் டிசம்பர் 12 வரை வனப்பகுதிகளில் பல்வேறு ராணுவ நடவடிக்கைகளைத் திட்டமிட்டு செயல்படுத்தும் முறையை மேம்படுத்துவதற்கான அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் மலேசியாவின் க்லுவாங்கில் இந்தியா மற்றும் மலேசியா கூட்டு ராணுவ பயிற்சியான “ஹரிமாவு சக்தி” பயிற்சி நடைபெறுகிறது.
- உலகச் செய்தி
- டிசம்பர் 14-ல் ஐ.நா. தலைமையகத்தின் வட பகுதியில் மகாத்மா காந்தியின் சிலை திறக்கப்பட உள்ளது.
- டிசம்பர் மாதத்தில் ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைமை பொறுப்பினை ஏற்க உள்ள நிலையில் மாகாத்மா காந்தியின் சிலை ஐ.நா.வுக்கு இந்தியா பரிசளித்தது.
- புகழ்பெற்ற சிற்பியான ராம் சுதர் (பத்மஸ்ரீ விருது) சிலையை வடிவமைத்தார்
விளையாட்டு செய்தி
- டேவிஸ் கோப்பை டென்னிஸ் சாம்பியன்ஷிப் -2022 போட்டியில் கனடா கோப்பையை வென்றது.
- கனடாவில் முதல் டேவிஸ் கோப்பை இதுவே.
முக்கிய தினம்
- பாலஸ்தீன மக்களுடனான சர்வதேச ஒற்றுமை தினம். (நவம்பர் 29).
Nov 27 – Current Affairs | Nov 27-28 Current Affairs