Daily Current Affairs
Here we have updated 29th December 2022 current affairs notes. This notes will helpful for those who are preparing competative exams like TNPSC, TRB and Police Exams.
தமிழக செய்தி
- தமிழ்நாட்டின் மாநில விலங்கான நீலகிரி வரையாட்டினை பாதுகாக்கவும், அதன் வாழ்விடங்களை மேம்படுத்தவும் “நீலகிரி வரையாடு திட்டம்” ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- ரூ.25.14 கோடி செலவில் 2027-வரை இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
- வரையாடு தினம் – அக்டோபர் 07
- டிசம்பர் 28 முதல் தமிழகத்தில் இரத்தத்தில் ஓவியம் வரையும் “பிளட் ஆர்ட்” தொழிலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- பொள்ளாச்சியைச் சேர்ந்த இளம் எழுத்தாளர் ப.காளிமுத்துவிற்கு தமிழ் மொழிப் பிரிவில் “தனித்திருக்கும் அரளிகளின் மதியம்” என்னும் கவிதை தொகுப்பிற்காக “சாகித்திய யுவ புரஸ்கார் விருது” வழங்கப்பட்டுள்ளது.
- தமிழக நகர்புற மேம்பாட்டு வளர்ச்சிக்காக மத்திய அரசு ஆசிய வளர்ச்சி வங்கியுடன் ரூ1,040 கோடி கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- இவ்வொப்பந்தம் மதுரை, கோவை, தூத்துக்குடி போன்ற நகரங்களில் வெள்ளத்தடுப்பு, குடிநீர், கழிவு நீர் சேவைகளை மேம்படுத்த உதவும்.
தேசிய செய்தி
- சீரம் நிறுவனம் மத்திய அரசுக்கு 2கோடி கோவிஷீலட் தடுப்பூசியை இலவசமாக வழங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
- மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் பொறுப்பு ஆணையராக பிரவீன் குமார் ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார்.
- உலகில் முதன் முதலாக மூக்கு வழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்தான இன்கோவக் மருந்தினை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது.
- இணைய வழி விளையாட்டுகளை நிர்வகிக்கும் பொறுப்பினை மத்திய இளைஞர் நலன் விளையாட்டு அமைச்சகத்திடம் இருந்து மத்திய மின்னணு-தகவல் தொழில் நுட்ப அமைச்சத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
- வனவிலங்களிடமிருந்து பயிர்களை காக்க இந்திய வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் ஹெர்போலிங் மருந்து திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
- ஒடிசா மாநிலத்தில் ரூர்கேலாவில் கட்டப்பட்டுள்ள புதிய ஹாக்கி மைதானத்திற்கு “பிர்சா முண்டா”வின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
- IOC தீவிர காசேநாய் ஒழிப்பு திட்டத்தை உத்திரபிரதேசம் சத்தீஸ்கரில் தொடங்கியுள்ளது.
- லோக்ஆயுக்தா மசோதா முதன் முதலாகமகாராஷ்டிரா மாநிலத்தில் நிறைவேற்றபட்டுள்ளது.
- இந்தியா புதிய தூதரகங்களை மாலத்தீவு, லிதுவேனியாவில் தொடங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
உலக செய்தி
- தென் கொரியாவில் மூளையை உண்ணும் அமீபாவான “நெக்லேரியா ஃபோலேரி” கண்டுபிடிக்கப்பட்டள்ளது.
முக்கிய தினம்
- மங்கோலியா சுதந்திர தினம். (டிசம்பர் 29)
- அயர்லாந்து அரசியலமைப்பு தினம். (டிசம்பர் 29)