Daily Current Affairs
Here we have updated 29th to 31st December 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
விருதுகள் அறிவிப்பு
- தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் வழங்கப்படும் 2024ஆம் ஆண்டிற்கான கலைஞர் பொற்கிழி விருதுகள் 6பேருக்கு வழங்கப்பட உள்ளது.
- உரைநடை – பேராசிரியர். ஆ.சிவசுப்பிரமணியன்
- நாவல் – எழுத்தாளர் தமிழ்மகன்
- சிறுகதை – எழுத்தாளர் அழகிய பெரியவன்
- கவிதை – கவிஞர். உமா மகேஸ்வரி
- மொழிபெயர்ப்பு – மயிலை பாலு
- நாடகம் – வேலு. சரவணன்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
- செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் கட்டிமுடிக்கப்பட்ட பேருந்து முனையமானது தற்போது (டிசம்பர் 31) பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
- இப்பேருந்து நிலையத்திற்கு கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பேருந்து முனையம் என பெயரிடப்பட்டது.
வைக்கம் போராட்ட நூற்றாண்டு மலர்
- செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்ட குழு தயாரித்த வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் வைக்கம் போராட்டம் (1924-2023) நூற்றாண்டு மலர் வெளியிடப்பட்டுள்ளது.
- இவ்விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பிரனாய் விஜயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ் மன்றம்
- தமிழகத்தில் 6,218 அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு தமிழ்மொழியின் தொன்மை, இலக்கண இலக்கியங்கள் மீது பற்றும், ஆர்வமும் ஏற்படுத்தவும், தமிழறிஞர்களை பற்றி அறிந்து கொள்ளவும் முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ் மன்றம் அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தெலுங்கானா
- தெலுங்கானா மாநிலத்தில் பிரஜா பலனா (Praja Palana) திட்டத்தினை தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தொடங்க வைத்தார்.
- இத்திட்டமானது மக்களின் குறைகளை தீர்க்க தொடங்கப்பட்டது
எக்ஸ்போசாட் செயற்கைக்கோள்
- ஜனவரி 1-ல் ஸ்ரீஹரிகோட்டாவில் பிஎஸ்எல்வி சி58 ராக்கெட் மூலம் எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் ஏவப்பட உள்ளது.
- வானியல் ஏற்படும் துருவ முனைப்பின் அளவு மற்றும் கோணம், நியூட்ரான் நட்சத்திரங்கள் ஆய்வினை மேற்கொள்வதற்காக ஏவப்பட உள்ளது.
அனிஷ் தயாள் சிங்
- மத்திய ரிசர்வ் காவல் படையின் (CRPF) தலைமை இயக்குநராக அனிஷ் தயாள் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
- CRPF (Central Reserve Police Force) அமைப்பானது 1939-ல் உருவாக்கப்பட்டது.
நீனா சிங்
- மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் (CISF) முதல் பெண் தலைமை இயக்குநராக நீனா சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
- CISF (Central Industrial Security Force) அமைப்பானது 1969-ல் உருவாக்கப்பட்டது.
ராகுல் ரேஸ்கோத்ரா
- இந்தோ திபத்திய காவல் படைத் தலைவராக (ITBP) ராகுல் ரேஸ்கோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
- ITBP (Indo-Tibetan Border Police) அமைப்பானது 1962-ல் உருவாக்கப்பட்டது.
விவேக் ஸ்ரீ வஸ்தவா
- தீயணைப்பு, சிவில் பாதுகாப்பு, ஊர்க் காவல் படை தலைமை இயக்குநராக விவேக் ஸ்ரீ வஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார்.
பெயர் மாற்றம்
- உத்திரப்பிரதேசம், அயாத்தியிலுள்ள விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகி விமான நிலையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ்
- அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் இரு வழித்தடங்களில் தொடங்கப்பட உள்ளது.
- இந்தியாவின் முதல் வழித்தடம் – அயோத்தி (உத்திரப்பிரதேசம்) – தர்பங்கா (பீகார்)
- இந்தியாவின் இரண்டாவது வழித்தடம் – மால்டா டவுண் (மேற்கு வங்கம்) – பெங்களூரு (கர்நாடகம்)
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
இந்தியாவில் புதிதாக 6 வழித்தடங்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
- அயோத்தி – ஆனந்த் விகார் முனையம்
- ஸ்ரீ மாதா வைஷ்னோ தேவி கத்ரா – புது டெல்லி
- அமிர்தசரஸ் – டெல்லி
- கோயம்புத்தூர் – பெங்களூரு
- மங்களூர் – மட்கான்
- ஜல்னா – மும்பை
சவிதா லாடேஜ்
- இங்கிலாந்தின் வேதியியலுக்கான ராயல் சங்கம் சார்பில் பேராசிரியர் சவிதா லாடேஜ்க்கு நைஹோம் பரிசு (Nyholm Prize) வழங்கப்பட்டுள்ளது.
- வேதியியல் கல்விக்கான பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் இப்பரிசானது வழங்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா
- பங்கு சந்தை முதலீட்டில் மகாராஷ்டிரா (1.48 கோடி), உத்திரப்பிரதேசம் (89.5 லட்சம்), குஜராத் (76.5 லட்சம்) போன்ற மாநிலங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.
- பங்கு சந்தை முதலீட்டில் இந்தியர்களின் எண்ணிக்கையானது 22.4% அதிகரித்துள்ளது.
எஃகு உற்பத்தி
- எஃகு உற்பத்தியில் சீனா முதலிடமும், இந்தியா இரண்டாவது இடமும் வகிக்கின்றன.
- இந்தியாவின் எஃகு நகரமாக ஜார்க்கண்ட்டின் ஜாம்ஜெட்பூர் திகழ்கிறது.
உலக எண்ம போட்டி தன்மை தரவரிசை 2023
- 2023ஆம் ஆண்டிற்கான உலக எண்ம போட்டி தன்மைக்கான தரவரிசையில் அமெரிக்கா, நெதர்லாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகள் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளன.
- இத்தரவரிசையில் இந்தியா 49வது இடத்தை பிடித்துள்ளது
ஜிம்மி ஜார்ஜ் அறக்கட்டளை விருது
- நீளம் தாண்டுதல் வீரரான எம்.ஸ்ரீசங்கருக்கு 35வது ஜிம்மி ஜார்ஜ் அறக்கட்டளை விருதானது வழங்கப்பட்டுள்ளது.
- இவ்விருதானது கேரளாவின் ஜிம்மி ஜார்ஜ் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.
கொனேரு ஹம்பி
- ஆடவர் பிரிவில் மேக்னஸ் கார்ல்சன் (நார்வே) சாம்பியன் பட்டத்தை ஐந்தாவது முறையாக வென்றார்.
- மகளிர் பிரிவில் அனஸ்தாசியா (உக்ரைன்) முதலிடமும், கொனேரு ஹம்பி (இந்தியா இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.
December 27 Current Affairs | December 28 Current Affairs