Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 29-30th January 2023

Daily Current Affairs

Here we have updated 29-30th January 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தமிழக செய்தி

  • பிப்ரவரி 1-ல் அரசுத் திட்டங்கள் மக்களைச் சென்றடைந்திருக்கிறதா என்பதை நேரில் அறிய “கள ஆய்வில் முதல்வர்” என்ற புதிய திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
  • ஜனவரி 28ல் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் “13வது தாமிரவருணி நீர்ப் பறவைகள் கணக்கெடுப்பு” தொடங்கிறது.
  • ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பட்டியலில் முதுமலையில் குட்டி யானைகளை பற்றி எடுக்கப்ட்ட ஆவணப்படம் இடம் பிடித்த்துள்ளது

தேசிய செய்தி

  • ஜனவரி 30-31வரை ஜி20 மாநாட்டுப் பிரதிநிதிகள் கூட்டம் புதுச்சேரியில் நடைபெறுகிறது.
  • ஒட்டுமொத்த உலகின் அமைதி மற்றும் வளத்திற்கான திறவுகோல் இந்தியாவிடம் உள்ளது என ஜப்பான் தூதர் ஹிரோஷி கஸுகி தெரிவித்துள்ளார்.
    • குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் 11வது ஜப்பான் திருவிழா கண்காட்சியில் இக்கருத்தை தெரிவித்துள்ளார்.
  • பிப்ரவரி 1ல் மத்திய அரசின் 2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டினை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
    • இந்தியாவின் முதல் பட்ஜெட் ஏப்ரல் 7, 1860-ல் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தின் அதிகாரியும் ஸ்காட்லாந்தை சேர்ந்த பொருளாதார நிருபுணருமான ஜேம்ஸ் வில்சன் பிரிட்டன் அரசிடம் இந்தியாவிற்கான பஜ்ஜெட்டை சமர்பித்தார்.
    • சுதந்திர இந்தியாவின் பட்ஜெட் – நவம்பர் 26, 1947 (நிதியமைச்சர் ஆர்.கே. சண்முகம் செட்டி)
  • அதிகமுறை பட்ஜெட் தாக்கல் செய்தவர்கள்
    • மொரார்ஜி தேசாய் – 10 முறை
    • ப.சிதம்பரம் – 9 முறை
    • பிரணாப் முகர்ஜி – 8 முறை
    • யஷ்வந்த் சின்ஹா – 8 முறை
    • மன்மோகன் சிங் – 6 முறை
  • பட்ஜெட் தாக்கல் நேரம் மாற்றம் செய்தவர்
    • 1998-ம் ஆண்டு பிரிட்டன் காலணி கால வழக்கப்படி அந்நாட்டின் நண்பகல் நேரத்துக்கு தாக்கல் செய்யப்பட்டதை 1999-ல் வாஜ்பாய் பிரதமாக இருந்த காலத்தில் யஷ்வந்த் சின்ஹா பட்ஜெட் தாக்கல் நேரத்தை காலை 11 மணியாக மாற்றி அமைத்தார்.
  • பட்ஜெட் தாக்கல் செய்த பிரதமர்கள்
    • ஜவஹர்லால் நேரு (1958-59) – நிதியமைச்சர்  டி.டி.கிருஷ்ணமாச்சாரி ராஜினாமா
    • இந்திராகாந்தி (1970-71) – நிதியமைச்சர் மொரார்ஜி தேசாய் ராஜினாமா
    • ராஜீவ் காந்தி (1987-88) – நிதியமைச்சர் வி.பி. சிங் ராஜினாமா
  • பட்ஜெட் தாக்கல் செய்த பெண்கள்
    • இந்திராகாந்தி
    • நிர்மலா சீதாராமன்
  • பட்ஜெட் தாக்கல் செய்தா நிதியமைச்சர்கள்
    • கே.சி.நிதியோகி
      • சுதந்திர இந்தியாவின் 2வது நிதியமைச்சர்
      • 35நாட்கள் மட்டுமே பதவி வகித்தார்.
    • ஹெச்.என்.பகுகுணா
      • 1979-80ல் ஐந்தரை மாதங்கள் மட்டும் பதவி வகித்தார்
  • பட்ஜெட் தாக்கல் தேதி மாற்றம்
    • 2016 வரை பிப்ரவரி இறுதி நாட்களில் தாக்கல் செய்து வந்த பட்ஜெட்டை 2017ல் அருண்ஜெட்லி பிப்ரவரி 1ம் தேதிக்கு மாற்றினார்.
  • ரயில்வே பட்ஜெட் ஒருங்கிணைப்பு
    • 92 ஆண்டுகளாக ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் 2017ல் ரயில்வே பட்ஜெட் மத்திய பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டது.
  • முதல் காகிதமில்லா பட்ஜெட்
    • கரோனா தொற்று பரவல் காரணமாக பிப்ரவரி 1, 2021ல் நிர்மலா சீதாராமன் கையடக்க கணினி மூலம் தாக்கல் செய்தார்
  • குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள முகல் தோட்டம் “அமிருத தோட்டம்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • மத்திய பிரதேசத்தில் ஏழை மற்றும் நடுத்தர பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழஙகப்படும் என அந்த மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் தெரிவித்துள்ளார்.
  • வாடியா குழுமத்தை சேர்ந்த கோபர்ஸ்ட் நிறுவத்திற்கு மத்திய அரசு ரூ.210 கோடி கடன் உதவி வழங்க உள்ளது.
    • மத்திய அரசின் அவரசால கடன் உறுதித் திட்டத்தின் கிழ் ஏற்கனவே ரூ.600 கோடி கடன் பெற்றிருந்தது.
    • இந்நிறுவனம் 37 விமானங்களை இயக்கி வந்த நிலையில் 53 விமானங்களாக அதிகரிக்க உள்ளது.
  • இந்தியாவின் 3வது ஏற்றுமதி தளமாக நெதர்லாந்து உருவெடுத்துள்ளது.
    • முதலிடம் – அமெரிக்கா
    • இரண்டாவது இடம் – ஐக்கிய அரபு அமீரகம்
  • டெல்லி குடியரசு தின விழா அணி வகுப்பில் கடற்கரை அணிக்கு திஷா அம்ரித் என்ற பெண் விமானி தலைமை தாங்க உள்ளார்.
  • ரயில்வே மூலமாக நடப்பு நிதியாண்டில் ரூ.2.3லட்சம் கோடி வருவாய ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுச் செய்தி

  • ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் பெலாரஸின் அர்யனா சபரென்கா சாம்பியன் போட்டியை வென்று தனது முதல் கிராண்ட்ஸ் லாம் பட்டத்தை வென்றார்
  • ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் ஜோகோவிச் 10வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
    • இவர் நடாலின் சாதனையை சமன் செய்துள்ளார்.
  • 19வது உட்பட்டோர் மகளிருக்கான உலகோப்பை முதல் டி20 போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

முக்கிய தினம்

  • லாலா லஜிபதிராய் தினம் (ஜனவரி 29)
  • உலக தொழுநோய் தினம் (ஜனவரி 29)
    • கருப்பொருள் : “Act Now. End Leprosy@
  • தியாகிகள் தினம் (ஜனவரி 31)
    • மகாத்மா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

Jan 14 Current Affairs | Jan 15-16 Current Affairs

TNPSC Old Questions

Leave a Comment