Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 29th April 2025

Daily Current Affairs 

Here we have updated 29th April 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

நினைவு தினம்

Vetri Study Center Current Affairs - Thiyagarayar

  • 28.04.2025-ல் நீதிகட்சியின் தலைவரான சர் பிட்டி.தியாகராயரின் 100வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

சர் பிட்டி தியாராயர் பற்றி சில குறப்புகள்

  • காலம் 27.04.1852-28.04.1925
  • டி.எம்.நாயருடன் இணைந்து நீதிக்கட்சியை தொடங்கியவர்
  • 1909 – ராவ் பகதூர் பட்டம்
  • 1919 – திவான் பகதூர் பட்டம்
  • நீதிகட்சி தொடங்கப்பட்ட ஆண்டு – 1916

STEPS கணக்கெடுப்பு

  • தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் இரத்த அழுத்தத்திற்கு சிசிக்சை பெறுவர்களின் எண்ணிக்கை 62.4%மாக உயர்ந்துள்ளதென STEPS II அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
  • இது STEPS I விகிதமான 45.5%லிருந்து அதிகரித்துள்ளது.
  • 2023-24 காலகட்டங்களில் 54.1% பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளன.
  • இது கடந்த 2019-20 காலகட்டங்களில் 33.9%மாக இருந்துள்ளது.
  • STEPS கணக்கெடுப்பு தொற்றா நோயுடன் தொடர்படையது.

ஜிஎஸ்டி ஏற்பு

  • தமிழக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டிற்கு வழங்கபடும் ரூ.3 கோடிக்கான ஜிஎஸ்டி-யை தமிழக அரசே ஏற்குமென சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் – 1997-98

உறுதுணை கடன் திட்டம்

  • ஆதி திராவிடர், பழங்குடியின சிறு வணிகர்களுக்கு கடன் உதவி வழங்கிட உறுதுணை கடன் திட்டம் தொடங்கப்பட உள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே ரஃபேல்-எம்-ஜெட் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
  • இந்த ஒப்பந்தத்தின்படி ரூ.63,000 கோடி செலவில் 26 ரபேல் போர் விமானங்கள் வாங்கப்பட உள்ளது.

சிந்து நதி நீர் ஒப்பந்தம்

Vetri Study Center Current Affairs - Indus Waters

  • இந்தியா பாகிஸ்தான் இடையேயான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.
  • சிந்து நதி நீர் ஒப்பந்தம் – 19.09.1960
  • சிந்து நதியின் துணை நதிகள் – ஜீலம், சட்லெஜ், சினாப், ரவி, பியாஸ்

தொடர்புடைய செய்திகள்

  • மாநிலங்களுக்கிடையேயான நதி நீர் சிக்கலை தீர்க்கும் பிரிவு – 262
  • மாநிலங்களுக்கிடையேயான நதி நீர் சிக்கல் சட்டம் – 1956

சாசெட் செயலி

  • பேரிடர் மேலாண்மையை தெரிந்து கொள்ள சாசெட் செயலி (SACHET) உதவுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா

  • உலகளாவிய பாரத உச்சி மாநாடானது தெலுங்கானாவில் நடைபெற்றுள்ளது.

இலக்கு நிர்ணயம்

  • தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோயை 2026ஆம் ஆண்டுக்குள் ஒழிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஹூப்ளி விமான நிலையம்

  • பசுமை முயற்சிக்கான பிளாட்டினம் விருதினை கர்நாடகாவின் ஹூப்ளி விமான நிலையம் வென்றுள்ளது.

வைபவ் சூர்யவன்ஷி

Vetri Study Center Current Affairs - Vaibhav Suryavanshi

  • ராஜஸ்தான் ராயஸ் அணி வீரரான வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் போட்டியில் சதமடித்த இளம் வீரர் என்ற பெருமையை படைத்துள்ளார்.

முக்கிய தினம்

சர்வதேச நடன தினம் (International Dance Day) – ஏப்ரல் 29

சர்வதேச வானியல் தினம் (International Astronomy Day) – ஏப்ரல் 29

Related Links

Leave a Comment