Daily Current Affairs
Here we have updated 29th March 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
உயிரியல் பன்முகத்தன்மை சட்டம் 2002
- இந்தியாவிலுள்ள உயிரியல் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதற்காக உயிரியல் பன்முகத்தன்மை சட்டம் 2002 இயற்றப்பட்டது.
- இச்சட்டத்தின்படி 22.11.2022-ல் தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தளமாக அரிட்டாபட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
- அரிட்டாபட்டி மதுரையில் அமைந்துள்ளது.
- இந்தியாவில் தற்போது 36 பல்லுயிர் பாரம்பரிய தளங்கள் உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவில் உள்ள 18 உயிர்க்கோள காப்பகங்களில் 11 காப்பகங்கள் யுனெஸ்கோவின் (UNESCO) மனித மற்றும் உயிர்க்கோள காப்பக திட்டத்தின் கீழ் செயல்படுகின்றன.
காலநிலை முன்முயற்சி
- ஐக்கிய இராஜ்ஜியத்துடன் தமிழ்நாடு இணைந்து கார்பன் முன்முயற்சிகளை மேற்கொள்ள உள்ளது.
- இந்த முன்முயற்சியானது ஈரோடு, தூத்துக்குடியில் மேற்கொள்ளப்பட உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- தமிழ்நாடு காலநிலை மாற்றப்பிரிவு (TNSCCC) – 2014
சட்டமன்ற அறிவிப்புகள்
- ரூ.40 லட்சம் செலவில் கன்னியாகுமரி மாவட்டத்தின் அம்சியில் தேன் இரும்பு கொள்கலன் அமைக்கப்பட உள்ளது.
- மாநில, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கு வீரர்களுக்கு காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
- திடக்கழிவு மேலாண்மைக்காக தூய்மை இயக்கம் தொடங்கப்பட உள்ளது.
- குள்ளநரி பாதுகாப்பு திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.
- 6 வன உயரின புத்தாக வளர் காப்பகங்கள் அமைக்கபட உள்ளது.
இருவாச்சி பறவைகள் பாதுகாப்பு மையம்
- ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருவாச்சி பறவைகள் பாதுகாப்பு மையம் தொடங்கப்பட உள்ளது.
இடமாற்றம்
- தில்லி உயர்நீதிமன்றத்திலிருந்து அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதி யஷ்வந்த் வர்மா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- இவரை விதி 222(1)-ன் படி குடியரசுத்தலைவர் இடமாற்றம் செய்துள்ளார்.
கோசி ஆறு
- கோசி ஆற்றின் உபரிநீரை மகாபந்தா படுகைக்கு கொண்டு செல்ல பீகார் அரசிற்கு ரூ.3652.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- கிரிஷி சின்சாய் யோஜனா திட்டத்தின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- கிரிஷி சின்சாய் யோஜனா – 2015
- பீகாரின் துயரம் – கோசி
- இதன் நீளம் – 729 கி.மீ.
- கங்கை நதியின் துணையாறு
GFCI தரவரிசை
- உலகளாவிய நிதி நிறுவன தரவரிசையில் (GFCI) குஜராத்தின் கிப்ட் சிட்டி (GIFT City) 46வது இடத்தில் உள்ளது.
- மும்பை – 52வது இடம்
- டெல்லி – 60வது இடம்
- GFCI – Global Financial Company Ranking
குரிந்தர்வீர் சிங்
- பெங்களூரில் நடைபெறும் இந்தியன் கிராண் பிரிக்ஸ் தொடரின் 100மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
- இவர் இந்த தூரத்தினை 10.20 நொடிகளில் ஓடி இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளார்.