Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 29th September 2023

Daily Current Affairs

Here we have updated 29th September  2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

உலக தலைவர் விருது

Vetri Study Center Current Affairs - Mata Amritandamayi Devi

  • பாஸ்டன் குளோபல் ஃபோரம் மற்றும் மைக்கேல் டுகாகிஸ் இன்ஸ்டிடியூட் ஃபார் லீடர்ஷிப் அண்ட் இன்னோவேஷன் வழங்கும் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான உலக தலைவர் விருதானது மாதா அமிர்தானந்தமயி தேவிக்கு வழங்கபட்டுள்ளது.

குளோபல் இன்னோவேஷன் இன்டெக்ஸ் குறியீடு (Global Innovation Index)

Vetri Study Center Current Affairs - Global Innovation Index

  • 2023-ம் ஆண்டுக்கான உலகளாவிய புத்தாக்கப் பட்டியல் எனும் குளோபல் இன்னோவேஷன் இண்டெக்ஸ் குறியீட்டில் இந்தியா 40வது இடத்தை (132 நாடுகள்) பிடித்துள்ளது.
  • ஆண்டுதோறும் உலகளாவிய புத்தாக்கப் பட்டியலை உலக அறிவுசார் சொத்துரிமை நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
  • முதலிடத்தை சுவிட்சர்லாந்தும், இரண்டாம் இடத்தை ஸ்வீடனும், மூன்றாம் இடத்தை அமெரிக்காவும் பிடித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

  • G20 நாடுகளில் மிகக்குறைந்த GDP தனிநபர் வருமானம் கொண்ட நாடு பட்டியலில் இந்தியா   கடைசி இடமான 20வது இடத்தை பிடித்துள்ளது.
  • உலக பத்திரிக்கை சுதந்திர குறியீடு 2023-ல் இந்தியா 161வது இடத்தை பெற்றுள்ளது.
  • டிஜிட்டல் பரிவர்த்தனை 2022-ல் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
  • பிரசவத்தின் போது தாய் மற்றும் குழந்தைகள் இறப்பு பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது
  • உலகின் பரிதாபமிக்க நாடுகள் பட்டியலில் இந்தியா 103 வது இடம் பிடித்துள்ளது.
  • ராணுவத்துக்கு அதிகம் செலவிடும் நாடுகள் பட்டியலில் இந்தியா 4வது இடம் பிடித்துள்ளது.

டொவினோ தாமஸ் (Tovino Thomas)

Vetri Study Center Current Affairs - Tovino Thomas

  • நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச திரைப்படத் திருவிழாவில் வழங்கப்படும் செப்டிமியஸ் விருதுகளில் சிறந்த ஆசிய நடிகர் விருதானது டொவினோ தாமஸ்க்கு வழங்கப்பட்டுள்ளது.
  • 2018-எவ்ரி ஒன் இஸ் எ ஹீரோ என்ற திரைபடத்தின் கதாநாயகன் ஆவார்.

தொடர்புடைய செய்திகள்

  • 2023-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது தேர்வுக்கு இந்தியா சார்பில் 2018:எவ்ரிஒன் இஸ் எ ஹீரோ (2018: Everyone Is A Hero) திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
  • சத்யஜித்ரே திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்லூரி முதல்வராக சுரேஷ் கோபி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

எம்.எஸ்.சுவாமிநாதன்

Vetri Study Center Current Affairs - m.s. swaminathan

  • இந்திய பசுமைபுரட்சியின் தந்தையென அழைக்கப்படும் எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்.
  • அதிக மகசூல் தரும் அரிசி, கோதுமை வகைகளை அறிமுகப்படுத்தி விவசாய புரட்சிக்கு வித்திட்டவர்.
  • அரிசி தட்டுப்பாட்டை நீக்க நவீன வேளாண்முறைகளை கண்டறிந்தவர்.
  • ஆசியாவின் நேபால் பரிசான ராமன் மகசேசே விருது, பத்மவிபூஷன், எஸ்.எஸ்.பட்நாகர் உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.

நர்வாஸ் (Narwhal submarine)

Vetri Study Center Current Affairs - Narwhal submarine

  • தைவான் முதன் முதலாக உள்நாட்டில் நர்வாஸ் என்னும் நீர் மூழ்கி கப்பலை தயாரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • சீனாவில் இருந்து 1949-ல் தைவான் நாடு தனியாக பிரிந்துள்ளது.

ஆசிய கோப்பை போட்டி-சீனா

Vetri Study Center Current Affairs - Asian Games

  • துப்பாக்கி சுடுதல் போட்டியின் 10மீ ஏர் பிஸ்டல் ஆடவர் அணிகள் பிரிவில் சிவா நர்வாஸ், அர்ஜீன் சிங் சீமா, சரப்ஜோத் சிங் தங்கம் வென்றுள்ளனர்.
  • மகளிருக்கான 60 கிலோ சண்டை பிரிவில் ரோஷிபினா தேவி வெள்ளி வென்றுள்ளார்.
  • குதிரையேற்றம் டிரெஸ்ஸேஜ் தனிநபர் பிரிவில் அனுஷ் அகர்வல்லா வெண்கலம் வென்றுள்ளார்.

உலக இதய தினம் (World Heart Day) – Sep 29

Vetri Study Center Current Affairs - World Heart Day

  • கருப்பொருள்: “Use Heart, Know Heart”

உணவு இழப்பு மற்றும் கழிவுகள் பற்றிய சர்வதேச விழிப்புணர்வு தினம் (International Day of  Awareness of Food Loss and Waste) – Sep 29

Vetri Study Center Current Affairs - International Day of Awareness of Food Loss and WasteVetri Study Center Current Affairs - International Day of Awareness of Food Loss and Waste

  • கருப்பொருள்: “Reducing food loss and waste: Taking Action to Transform Food Systems”

September 27 Current Affairs | September 28 Current Affairs

Leave a Comment