Daily Current Affairs
Here we have updated 2nd and 3rd March 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தமிழ் செம்மல் விருது
- தமிழ்நாட்டில் தமிழ் செம்மல் விருது 38பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி
- 2022-23ஆம் ஆண்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) தமிழ்நாடு 3வது இடத்தை பிடித்துள்ளது.
- முதலிடம் – மகாராஷ்டிரா
- இரண்டாமிடம் – குஜராத்
சராசரி வளர்ச்சி விகிதம்
- 2021-22 முதல் தமிழ்நாட்டின் சராசரி வளர்ச்சி விகிதம் 8.08%மாக உள்ளது.
- இதனை தமிழ்நாடு மாநில திட்ட குழு தெரிவித்துள்ளது.
- தமிழ்நாடு திட்டக் குழு – 25.02.1971
தொடர்புடைய செய்திகள்
- இதன் தலைவராக முதல்வர் செயல்படுகிறார்.
- துணைத்தலைவராக ஜெ.ஜெயரஞ்சன் செயல்படுகிறார்.
அமுதா
- சென்னை மண்டல வானிலை மையத்தின் இயக்குநராக அமுதா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- சென்னை மண்டல வானிலை மையத்தின் முதல் பெண் இயக்குநர் இவராவார்.
தொடர்புடைய செய்திகள்
- இந்திய வானிலை ஆய்வுத் துறை – 1875
- இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தற்போதைய தலைமை இயக்குநர் – மிருத்யுஞ்சய் மொஹபத்ரா
- இந்தியாவின் முதல் வானிலை இயக்குநர் ஜெனரல் – H.E.பிளாண்டு ஃபோர்டு
தூய்மையான நகரம்
- இந்தியாவின் தூய்மையான நகரமாக மத்தியப்பிரதேசத்தின இந்தூர் தேர்வாகியுள்ளது.
பரபபரப்பான விமான நிலையம்
- இந்தியாவின் பரபபரப்பான விமான நிலையமாக டெல்லி விமான நிலையம் உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- உலகிலேயே பரபபரப்பான விமான நிலையமாக துபாயின் விமான நிலையம் உள்ளது.
HIV பாதிப்பு
- வயது வந்தோரில் HIV பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக மிசோரம் உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- உலக எய்ட்ஸ் தினம் – டிசம்பர் 1
உலக வங்கி கணிப்பு
- 2047-ல் இந்தியா உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்க ஆண்டுதோறும் 7.8% வளர்ச்சி தேவை என உலக வங்கி தெரிவித்துள்ளது.
சூரியன் ஒளி வெடிப்பு
- ஆதித்தியா எல்1-ன் SUIT என்ற பேலோடு சூரியன் ஒளி வெடிப்பு காட்சிப்படுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- ஆதித்தியா எல்1 கடந்த 2.9.2023-ல் PSLV G57 மூலம் விண்வெளியில் செலுத்தப்பட்டது.
- இது L1 பாயிண்டை 6.1.2024-ல் அடைந்தது.
ஜனெளஷதி தினம்
- ஜனெளஷதி தினம் மார்ச் 7-ல் கொண்டாடப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
பனிச்சரிவு
- உத்திரகாண்டின் சமோலி மாவட்டத்தின் மனா கிராமத்தில் பனிச்சரிவு நடைபெற்றுள்ளது.
டிஜிட்டல் பயனர்
- இந்தியா டிஜிட்டல் பயனர் பொருளாதார தரவரிசையில் 28வது இடம் பிடித்துள்ளது.
காலை உணவு திட்டம்
- இலவச காலை உணவு திட்டத்தினை இங்கிலாந்து அரசு தொடங்கியுள்ளது.
- இதற்கு முன்பு கனடா நாடானது இத்திட்டதினை செயல்படுத்தியது.
சுயசரிதை
- கைலாஷ் சத்யார்த்தி தன்னுடை சுயசரிதையை தியாஸ்லை என்ற பெயரில் எழுதியுள்ளார்.
- இவர் 2014-ல் அமைதிக்கான நோபல் பரிசினை வென்றுள்ளார்.
முக்கிய தினம்
உலக வனவிலங்கு தினம் (World Wildlife Day) – மார்ச் 3
உலக செவித்திறன் தினம் (World Hearing Day) – மார்ச் 3