Daily Current Affairs
Here we have updated 2nd December 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
நீயே உனக்கு ராஜா திட்டம்
- டிசம்பர் 01-ல் தமிழகத்தின் பாரம்பரிய கலைகளை காக்கவும், அழிந்து வரும் மரபுசார் கைவினைகளுக்கு புத்துயிர் அளிக்கவும் நீயே உனக்கு ராஜா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.
- இத்திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி மர வேலைப்பாடு கலைத்திறன் பயிற்சி, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் பொம்மை, ராமநாதபுரத்தின் பனை ஒலை கலைத்திறன், தூத்துக்குடியில் கடல் சிப்பி கலைத்திறன், மதுரையில் களிமண் மற்றும் காகிதம், மட்பாண்டம், கைகாட்டுச் சாயம், திருநெல்வேலியில் பத்தமடை பாய் மற்றும் மட்பாண்டம் கலைத்திறன் பயிற்சி வழங்கப்படுகின்றன.
இணையதளம் தொடக்கம்
- தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் நான் முதல்வன் திட்ட இணையதளத்தின் சாட்பாட் இளையா (Ilaya) என்னும் பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.
மணிமண்டபம் திறப்பு
- சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் திராவிடப்போராளி பண்டிதர் அயோத்திதாசருக்கு சிலையுடன் கூடிய மணி மண்டபம் தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
- ஆதிதிராவிடர் குடியிருப்புகளை மேம்படுத்த பண்டிதர் அயோத்திதாசர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கயல்விழி செல்வராஜ்
- தமிழ்நாடு பழங்குடி ஆன்றோர் மன்றத்தின் தலைவராக ஆதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
பிரசிடென்ஸ் கலர் விருது
- புனேவில் உள்ள ஆயுதப்படை மருத்துவக்கல்லூரியின் 75 ஆண்டு கால சிறந்த சேவையை அங்கீகரிக்கும் வகையில் பிரசிடென்ஸ் கலர் விருதினை குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார்.
- இவ்விருதானது ராணுவப்படை பிரிவுகளுக்கான உயரிய விருதாகும்.
ஹான்பில் திருவிழா (Hornbill Festival)
- நாகலாந்தில் டிசம்பர் 1 முதல் 10 நாட்கள் வரை நடைபெற உள்ளது.
மாநில தினம்
- நாகலாந்தின் 61-வது மாநில தினம் டிசம்பர் 1ம் தேதி கொண்டாடப்பட்டது.
- 1963-ஆம் ஆண்டு 13வது சட்டத்திருத்தத்தின் கீழ் 16வது மாநிலமாக உருவாக்கப்பட்டது.
உலக பேரிடர் மேலாண்மை மாநாடு
- உத்திரகாண்ட் மாநிலத்தில் 6வது உலக பேரிடர் மேலாண்மை மாநாடு நடைபெறுகிறது.
- இதனை உத்திரகாண்ட் முதல்வர் தாமி தொடங்கி வைத்துள்ளார்.
ஆயுர்வேத திருவிழா
- டிசம்பர் 1-5 வரை கேரளாவில் 5வது உலகளாவிய ஆயுர்வேத திருவிழா (GAF-2023) நடைறுகிறது.
நைட் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் லெட்டர் விருது (Knight of the Order of Arts and Letters Award)
- அர்ஷியா சத்தாருக்கு (Arshia Sattar) பிரெஞ்சு நாட்டின் நைட் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் லெட்டர் விருது வழங்கப்பட்டுள்ளது.
- 2022-ம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான சாகித்திய விருதானது குழந்தைகளுக்கான மகாபாரதம் என்ற நூலுக்காக வழங்கப்பட்டது.
ஒபெக் பிளஸ் (OPEC Plus)
- பிரேசில் நாடானது ஒபெக் பிளஸ் கூட்டமைப்பில் இணைய உள்ளது.
- Organization of the Petroleum Exporting Countries – 1965
- இதன் தலைமையகம் ஆஸ்திரியாவின் வியன்னாவில் அமைந்துள்ளது.
- உறுப்பு நாடுகள் : 13
- தொடக்கம் : 1960 (ஈரானின் பாக்தாத் நகர்)
- கூட்டமைப்பை நிறுவிய நாடுகள் – சவுதி அரேபியா, ஈரான், ஈராக், குவைத், வெனிசூலா
வைஷாலி
- சர்வதேச செஸ் ரேட்டிங்கில் 2500 புள்ளிகளை கடந்து இந்தியா 84வது கிராண்ட் மாஸ்டரானார் தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி.
- தமிழ்நாட்டின் முதல் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறும் முதல் வீராங்கனை ஆவார்
தேசிய மாசுக் கட்டுப்பாட்டு தினம் (National Pollution Control Day) – Dec 2
உலக கணினி எழுத்தறிவு தினம் (World Computer Literacy Day) – Dec 2
அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் (International Day for the Abolition of Slavery) – Dec 2
- கருப்பொருள்: Fighting Slaver’s Legacy of Racism through Transformative Educaction
November 30 Current Affairs | December 1 Current Affairs