Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 2nd March 2024

Daily Current Affairs

Here we have updated 2nd March 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

மின்னணு பொருட்கள் ஏற்றுமதி

  • நாட்டின் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.

உர ஆலை திறப்பு

Vetri Study Center Current Affairs - Hindustan Urvarak & Rasayan Limited

  • ஜார்க்கண்ட், சிந்திரி பகுதியில் ஹிந்துஸ்தான் உர்வரக் ரசயான ஆலை திறக்கப்பட்டுள்ளது.
  • நாட்டின் 3வது மிகப்பெரிய உர ஆலை ஆகும்.
  • முதல் ஆலை – (உத்திரப்பிரதேசம் 2021)
  • இரண்டாவது ஆலை – (தெலுங்கானா 2022)
  • ஜார்க்கண்ட் மாநிலத்தின் வடக்கு கரன்புரா பகுதியில் சூப்பர் அனல்மின் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தாவி பண்டிகை 

  • தாவி பண்டிகையானது ஜம்மு & காஷ்மீரில் நான்கு நாட்கள் நடைபெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • துலிப் மலர்த்திருவிழா – ஜம்மு-காஷ்மீர்
  • ஹார்ன்பில் திருவிழா – நாகலாந்து

தல்ஜித் சிங் சௌத்ரி

Vetri Study Center Current Affairs - Daljit Singh Chaudhary

  • தேசிய பாதுகாப்பு படையின் தலைமை இயக்குநராக தல்ஜித் சிங் சௌத்ரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • தேசிய பாதுகாப்பு படை – 1986

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

சுயச்சார்பு திட்டத்தின் மூலம் தயாரிக்கப்படும் பாதுகாப்பு தளவாடங்களை கொள்முதல் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

  • பிரமோஸ் ஏவுகணைகளை வாங்க பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • ஆர்.டி 33 ஏரோ என்ஜின்கள் (மிக் 29 விமானம்) வாங்க ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • அதிக சக்தி கொண்ட ரேடார்கள் வாங்க லார்சன் & டூப்ரோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சமுத்ரா லக்ஸ்மனா

  • விசாகப்பட்டினத்தில் இந்தியா மற்றும் மலேசியா இடையேயான கூட்டு கடற்படை பயிற்சியானது சமுத்ரா லக்ஸ்மனா எனும் பெயரில் நடத்தப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பேரவைக் கூட்டம்

  • கென்யா, நைரோபியில் 6வது சுற்றுச்சூழல் பேரவைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
  • இக்கூட்டத்தில் சுற்றுச்சூழலுக்காக இந்தியா தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

பிஏஆர்எஸ் செயற்கைக்கோள் (PARS)

  • ஈரான் தனது பிஏஆர்எஸ் செயற்கைக்கோளினை ரஷ்யாவின் சோயஸ் லாஞ்சர் மூலம் விண்ணில் ஏவி உள்ளது.

அஸ்வகோஷ்

Vetri Study Center Current Affairs - Ashwagosh

  • அஸ்வகோஷ் (எ) இராசேந்திர சோழன் தன்னுடைய 79 வயதில் காலமானார்.
  • இவர் தமிழிய சிந்தனையாளரும், மண்மொழி இதழின் ஆசிரியரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும் ஆவார்.

ப்ரோ கபடி லீக் 

  • ஹைதரபாத்தில் நடைபெற்ற 10வது ப்ரோ கபடி லீக்கில் புனேரி பஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளளது.
  • 2வது இடத்தினை ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி பிடித்துள்ளது.

சர்வதேச பூனை மீட்பு தினம் (International Cat Rescue Day) – Feb 02

Vetri Study Center Current Affairs - International Cat Rescue Day

கருப்பொருள்: Save The ‘Meow’ To Guard ‘Voice’ of Co-Existence

February 29 Current Affairs | March 1 Current Affairs

Related Links

Leave a Comment