Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 2nd November 2023

Daily Current Affairs

Here we have updated 2nd November 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

நம்ம சாலை செயலி

Vetri Study Center Current Affairs - Namma Saalai

  • தமிழகத்தில் சாலைகளில் ஏற்படும் பாதிப்புகளை மக்கள் நெடுஞ்சாலைத் துறைக்கு தெரிவிக்க நம்ம சாலை செயலியை தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

  • மணற்கேணி (Manarkeni App) (25.07.2023) – 1-12 மாணக்கர்களுக்கு பாடங்களை காணொலி வடிவத்தில் அளிக்க தொடங்கப்பட்டது.
  • டி.டி.எஸ் நண்பன் – நாட்டில் முதல் AI மூலம் இயங்கும் சாட்பாட் இணைய தள செயலி
  • இ சரஸ் (e SARAS) செயலி – மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய
  • COOP BAZAAR செயலி (06.07.2023) – கூட்டுறவு நிறுவனங்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்தல்

நந்தினி தாஸ்

Vetri Study Center Current Affairs - Nandini Das - Courting India

  • 11வது பிரிட்டிஷ் அகாதெமி புத்தகப் பரிசானது நந்திதாஸ்-க்கு வழங்கப்பட்டுள்ளது.
  • கோர்டிங் இந்தியா (Courting India) என்ற புத்தகத்திற்காக இப்பரிசானது வழங்கப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடி

  • சென்னை ஐஐடி மற்றும் இஸ்ரேலின் டெல் அவிவ் நிறுவனத்துடன் இணைந்து கழிவுநீரிலிருந்து மாசுக்களை அகற்றுவதற்காக ஏரோஜெல் உறிஞ்சுகளை உருவாக்கியுள்ளது.

ஐயன் கார்த்திகேயன்

Vetri Study Center Current Affairs - Ayan Karthikeyan

  • தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு பிரிவு (Fact Check Unit) தலைவராக ஐயன் கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மாநில துறைமுக மேம்பாட்டுக் கொள்கை 2023

Vetri Study Center Current Affairs - Tamil Nadu State Port Development Policy

  • தொழில் வளர்ச்சிக்கு மிகச் சிறந்த துறைமுக உட்கட்டமைப்பு அவசியமாக உள்ள நிலையில் தமிழ்நாடு மாநில துறைமுக மேம்பாட்டுக் கொள்கை 2023  உருவாக்கபட்டுள்ளது.
  • கடல்சார் வணிகத்தில் தனியார் துறைகளின் முதலீட்டினை ஈர்க்கும் வகையில் இக் கொள்கையானது உருவாக்கபட்டுள்ளது.
  • தமிழ்நாட்டின் கடற்கரையானது 1,076 கி.மீ. நீளம் கொண்டுள்ளது.
  • 4 பெரிய துறைமுகங்கள், 17 சிறிய துறைமுகங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.

நூல் வெளியீடு

  • விடுதலை போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு குறித்த சிறப்பு மலர்களை தமிழக முதல்வர் வெளியிட்டுள்ளார்.
  • இந்நூலினை மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி பெற்றுக்கொண்டார்.
  • இப்புத்தக தயாரிப்பிற்காக லயோலா கல்லூரி முன்னாள் தலைவர் பெர்னாட்டி சாமி தலைமையில் குழுவானது அமைக்கப்பட்டது.

மாநிலங்கள் உருவான தினம்

Vetri Study Center Current Affairs - States Formation Day

  • நவம்பர் 1-ல் ஆந்திரம், மத்தியபிரதேசம், கர்நாடகம், கேரளம், லட்சத்தீவு, பஞ்சாப், ஹரியானா, சத்திஸ்கர் உருவான தினமானது கொண்டாடப்பட்டது.
    1. ஆந்திரம், மத்தியபிரதேசம், கர்நாடகம், கேரளம், லட்சத்தீவுகள் 1956 நவம்பர் 1-ல் உருவாக்கப்பட்டன.
    2. பஞ்சாப், ஹரியானா மாநிலங்கள் 1966 நவம்பர் 1-ல் உருவாக்கப்பட்டன.
    3. மத்திய பிரதேசத்திலிருந்து சத்திஸ்கர் மாநிலம் 2006 நவம்பர் 1-ல் உருவாக்கப்பட்டன.

யுனஸ்கோ

Vetri Study Center Current Affairs - Kozhikode & Gwalior

  • யுனஸ்கோவால் (UNESCO) இந்தியாவின் இலக்கிய நகரமாக  கோழிக்கோடு (கேரளா) அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் இசை நகரமாக  குவாலியர் (மத்திய பிரதேசம்) அறிவிக்கப்பட்டுள்ளது.
  • UNESCO – United Nations Educational, Scientific and Cultural Organization – 16.11.1945

மேரா ஹூ சாங்பா (Mera Hou Chongba)

Vetri Study Center Current Affairs - Hallmark Center

  • மணிப்பூர் மாநிலத்தில் மேரா ஹூ சாங்பா திருவிழாவானது நடைபெறுகிறது.

சாங் தியோ

  • உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) காசநோய்க்கான தொழில் நுட்ப ஆலோசனை குழு உறுப்பினராக சாங் தியோ (இந்தியர்) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • WHO – World Health Origination – 17.4.1948

சைமா வாஸித்

Vetri Study Center Current Affairs - Saima Wasid

  • தென்கிழக்காசிய பிராந்திய அமைப்பின் அடுத்த இயக்குநராக மனநல மருத்துவ நிபுணரான சைமா வாஸித் (வங்தேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகள்) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • தென்கிழக்காசிய பிராந்திய அமைப்பானது உலக சுகாதார அமைப்பின் கீழ் செயல்படுகின்ற ஓர் அமைப்பாகும்.

தேசிய விளையாட்டு போட்டி – கோவா

  • ஆடவருக்கான கம்பு ஊன்றித் தாண்டுதல் பரிவில் தேவ் மீனா (மத்திய பிரதேசம்) தங்கம் வென்றுள்ளார்

ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி – தென்கொரியா

  • 50மீ ரைஃபிள் 3 பொசிஷன் ஆடவர் தனிநபர் பிரிவில் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் தங்கம் (இந்தியா) வென்றுள்ளார்.
  • 50மீ ரைஃபிள் 3 பொசிஷன் ஆடவர் அணிகள் பிரிவில் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், ஸ்வப்னில் குசேல், அகில் ஷியோரன் ஆகியோர் வெண்கலம் வென்றுள்ளனர்.

International Day to End impunity for Crimes against journalists – Nov 2Vetri Study Center Current Affairs - International Day to End impunity for Crimes against journalists

September 31st Current Affairs | November 1st Current Affairs

Related Links

Leave a Comment