Daily Current Affairs
Here we have updated 02nd October 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
காந்தியடிகள் காவலர் விருது
- 26.01.2024-ல் தமிழகத்தில் மதுவிலக்கு அமலாக்க பணியில் சிறப்பாக பணியாற்றிய 5 காவல் துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவலர் விருது வழங்கப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
காவலர் | பிரிவுகள் |
1. கோ.சசாங்சாய் | விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் |
2. ப.காசிவிஸ்வநாதன் | சென்னை தெற்கு மத்திய நுண்ணறிவுப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் |
3. கா.மு.முனியசாமி | ஆவடி காவல் ஆணையரக செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் |
4. அ.பாண்டியன் | மதுரை மண்டல மத்திய நுண்ணறிவுப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் |
5. ஜெ.ரங்கநாதன் | ராணிப்பேட்டை காவல் நிலைய தலமைக் காவலர் |
14 நிமிடங்களில் தூய்மை பணி
- வந்தே பாரத் ரயில்களை 14 நிமிடத்தில் தூய்மை செய்யும் திட்டத்தினை இந்தியன் ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.
- ஜப்பானில் புல்லட் ரயில்களை 7 நிமிடத்தில் தூய்மை செய்யும் திட்டத்தினை முன்னோடியாக வைத்து செயல்படுத்தப்பட்டுள்ளது.
தூய்மையே சேவை
- தூய்மை இந்தியா திட்டத்தினை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த அக்டோபர் 1-ல் தூய்மையே சேவை நிகழ்வானது நாடு முமுவதும் 9.2 லட்சம் இடங்களில் மேற்கொள்ளப்பட்டது.
தெலுங்கானா
- ரூ.13,500 கோடி திட்டங்கள் தொடக்க விழாவில் தெலுங்கானாவில் தேசிய மஞ்சள் வாரியம் அமைக்கபட உள்ளதாக மோடி தெரிவித்துள்ளார்.
- தெலுங்கானாவின் மொலுகு மாவட்டத்தில் ரூ.900 கோடியில் மத்திய பல்கலைக்கழகமானது சம்மக்கா-சாரக்கா எனும் பெயரில் அமைய உள்ளது.
- தெலுங்கானாவின் ஹஸ்மகொண்டாவில் ஜவுளி பூங்காவானது அமைய உள்ளது.
ஜிஎஸ்டி வசூல்
- 2023 செப்டம்பர் மாத சரக்கு மற்றும் சேவை வரியானது (GST) 1.62 லட்சம் கோடி வசூலாகியுள்ளது.
- 2022 செப்டம்பர் மாத சரக்கு மற்றும் சேவை வரியை (GST) விட 10% அதிகமாகும்
நிதின் குப்தா
- நேரடி வரிகள் வாரியத் தலைவரான நிதின் குப்தாவின் பதவிக்காலம் மேலும் 9 மாதம் நீட்டிக்கப்பட்டது.
பிரசாந்த் ஹெலிகாப்டர்
- இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடமிருந்து 156 இலகு ரக பிரசாந்த் ஹெலிக்காப்டர் வாங்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
- இந்த ஹெலிக்காப்டர்களை பாகிஸ்தான் மற்றும் சீனாவை ஒட்டிய இந்திய எல்லையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.
மழைப்பொழிவு
- ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவ மழையானது 94.4% கிடைத்துள்ளது.
- நீண்ட கால மழைப்பொழிவு சராசரி (868.6 மி.மீ) விட குறைவாக (820 மி.மீ) பெய்துள்ளது.
சங்கல்ப் சப்தா
- லட்சிய வட்டாரங்கள் திட்டத்திற்கு உத்வேகம் அளிக்கும் வகையில் சங்கல்ப் சப்தா (Sankalp Saptaah) எனும் பெயரில் ஒரு வார கால பிரச்சாரத்தை பிரதமர் மோடி துவங்கி வைத்துள்ளார்.
- இப்பிரச்சாரமானது அக்டோபர் 3 முதல் அக்டோபர் 9 வரை நடைபெற உள்ளது.
- 2023 ஜனவரியில் லட்சிய வட்டாரங்கள் திட்டமானது நாட்டிலுள்ள 329 மாவட்டங்களில் உள்ள 500 வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது
தொடர்புடைய செய்திகள்
- லட்சிய மாவட்டங்கள் திட்டமானது நாட்டில் பின்தங்கிய 112 மாவட்டங்களை திறமையாக மாற்ற 2018-ல் தொடங்கப்பட்டது.
ஆசிய விளையாட்டு
- கோல்ப் விளையாட்டில் மகளிர் தனிநபர் பிரிவல் அதிதி அசோக் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். ஆசிய போட்டியின் மகளிர் கோல்ப் பிரிவின் முதல் பதக்கம் இதுவாகும்.
- ஆடவர் 3,000மீ ஸ்டீபிள்சேஸில் அவினாஷ் சாப்லே தங்கப் பதக்கம் வென்றுள்ளார். ஆசிய போட்டியின் ஸ்டீபிள்சேஸில் முதல் சாம்பியன் ஆவார்.
- ஆடவர் நீளம் தாண்டுதல் முரளி ஸ்ரீசங்கர் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
- ஆடவர் குண்டு எறிதலில் தஜிந்தர்பால் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
- மகளிர் 1,500மீ ஓட்டத்தில் ஹர்மிலன் பெயின்ஸ் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
- மகளிர் வட்ட எறிதல் சீமா புனியா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
- மகளிர் 100மீ தடை தாண்டும் ஓட்டத்தில் ஜோதி யாராஜி வெண்கலம் பதக்கம் வென்றுள்ளார்.
- ஆடவர் பாட்மின்டன் பிரிவில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
- துப்பாக்கி சுடுதல் டிராப் 50 ஆடவர் அணிகள் பிரிவில் கினான், செனாய், ஜோராவர் சந்து, பிருத்விராஜ் தொண்டைமான் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர்.
- துப்பாக்கி சுடுதல் டிராப் 50 மகளிர் அணிகள் ராஜேஷ்வரி குமார், மனீஷா கீர், பீரித்திரஜன் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளனர்.
- மகளிர் குத்துச்சண்டை 50 கிலோ பிரிவில் நிகர்த் ஜரின் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
சர்வதேச அகிம்சை தினம் (International Day of Non-Violence) – Oct 02
காந்தி ஜெயந்தி (Gandhi Jayanti) – Oct 02
உலக வாழ்விட தினம் (World Habitat Day) – Oct 02
- கருப்பொருள்: “Resilient Urban Economies Cities as Drivers of Growth and Recovery”
- ஆண்டுதோறும் அக்டோபரின் முதல் திங்கள்