Daily Current Affairs
Here we have updated 30th November 2022 current affairs notes. This notes will helpful for those who are preparing competative exams like TNPSC, TRB and Police Exams.
தமிழக செய்தி
- ராஜேந்திர சோழனுக்கு அரியலூர் மாவட்டத்தின் கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
- கங்கைகொண்ட சோழபுரத்தை தலைமை இடமாக கொண்டு ஆட்சி செய்த ராஜேந்திர சோழன் பல நாடுகளை கடந்து வென்றதுடன், கிழக்கிந்திய தீவுகள், சீனா போன்ற நாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தார்.
- கங்கை கொண்ட சோழன், மும்முடிச் சோழன், உத்தமச் சோழன், பண்டிதச் சோழன், வீரசோழன் போன்ற பட்டங்களுக்கு சொந்தமானவர்.
- பெரம்பலூர் மாவட்டத்தின் எறையூரில் அமைக்கப்பட்ட சிப்காட் தொழிற்பூங்காவினை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.
- இப்பூங்கா 49 பரப்பினை கொண்டுள்ளது.
- துறையூரின் அருகே உள்ள பகளாவாடி மலைத்தொடரில புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்த தொன்மை சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
- இதில் சிவப்பு மண்பானைகள், முதுமக்கள் தாழியின் பாங்கள், உடைந்த கைக்கோடாரி ஒன்று கிடைத்துள்ளது.
தேசிய செய்தி
- “பிரதான் மந்திரி ஸ்வஸ்திய சுரக்ஷா யோஜனா” (PMSSY) திட்டத்தினை குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு ஹரியானாவில் தொடங்கி வைத்தார்.
- PMSSY – Pradhan Mantri Swasthya Suraksha Yojana (2003)
- பம்பாய் பங்குச் சந்தையின் புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக (BSE) சுந்தரராமன் ராமமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
- SEBI-யின் ஒப்புதலுக்கு பிறகு நியமனம் செய்யப்பட்டார்.
- நவம்பர் 19-ல் தில்லியில் நடைபெற்ற முப்படைகளின் கொடிநாள் மாநாட்டில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.
- “தேசிய பாதுகாப்பு வலுவாக இல்லாத எந்த ஒரு நாட்டிலும் தொழில் வர்த்தகம் செழிக்காது” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
- பாதுகாப்புப் படை வீரர்கள் நலனில் சிறந்த பங்களிப்பிற்கான பரிசினை இந்தியன் ஆயில் நிறுவனத் தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்தியாவுக்கு வழங்கினார்.
- நடப்பாண்டில் நெல் கொள்முதல் 9% அதிகரித்துள்ளது என மத்திய உணவுத் துறை அறிவித்துள்ளது.
- நடப்பு காரீப் பருவத்தில் (அக்டோபர் முதல் செப்டம்பர்) 7.75 கோடி கோடி டன் நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
- நடப்பாண்டு நெல் கொள்முதலில் பஞ்சாம் (1.81 கோடி டன்) ஹரியானா (58.96 லட்சம் டன்) சத்தீஸ்கர் (16.88 லட்சம் டன்) என அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன.
- இஸ்ரோ தலைவர் சோம்நாம் ஸ்ரீஹரிகோட்டாவில் விண்வெளி தொழில்நுட்பத் துறையினைச் சேர்ந்த அக்னிகுல் புத்தாக்க நிறுவனம் உருவாக்கிய இந்தியாவின் முதல் தனியார் எவுதளத்தை திறந்து வைத்தார்.
- புதுதில்லியின் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அதிகாரியாக ஆந்திரபிரதேசத்தினை சேர்ந்த முன்னாள் சுகாதாரச் செயலாளர் ப்ரீத்தி சுதன் பதவியேற்றுள்ளார்.
- புதுதில்லியில் நவம்பர் 29 முதல் டிசம்பர் 1-வரை புவி-தொழில்நுட்பம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் இணைந்து நடத்து உலகளாவிய தொழில்நுட்ப உச்சிமாநாட்டின் ஏழாவது பதிப்பு நடைபெறுகிறது.
- கருப்பொருள் : தொழில்நுடப்பத்தின் புவிசார் அரசியல்
- போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள இந்திய டாப் 10 பணக்காரர் பட்டியிலில் கவுதம் அதானி முதலிடமும் முகேஷ் அம்பானி 2வது இடமும் பிடித்துள்ளனர்.
- உத்தரகாண்ட் மாநிலத்தின் செளஸ்லா கிராமத்தில், R-Hab (Reducing Human Attacks using Honey Bees) மறுவாழ்வுத்திட்டத்தை KVIC தலைவர் மனோஜ்குமார் தொடங்கி வைத்தார்.
- இத்திட்டத்தில் தேனீ மூலம் வேலி அமைக்கப்பட்டு காட்டு யானைகள் விவசாயிகளின் பயிர்களை அழிப்பதிலிருந்து தடுக்க உதவுகிறது.
- மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் அவர்களால் “டாக்டர் அப்கே துவார்” (Doctor Apke Dwar) திட்டத்தினை பீகாரில் தொடங்கி வைத்தார்.
- உத்தரகாண்ட் மாநிலத்தின் செளஸ்லா கிராமத்தில், R-Hab மறுவாழ்வுத்திட்டத்தை KVIC தலைவர் மனோஜ்குமார் தொடங்கி வைத்தார்.
உலக செய்தி
- நவம்பர் 27-ல் உலகின் மிகப் பெரிய எரிமலையான ஹவாயின் மெளனா லோவா 40 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்தது.
- இம்மலையானது 1984 -ல் வெடித்திருந்தது.
- உலக சுகாதார நிறுவனம் குரங்கு அம்மை நோய்க்கு M-POX (எம்-அம்மை) என பெறர் மாற்றம் செய்துள்ளது.
- விலங்குகளிலிருந்து மனிதனுக்கு பரவும் வைரஸ் தொற்றான குரங்கம்மை காங்கோ நாட்டில் முதன் முதலில் 1970 கண்டுபிடிக்கப்பட்டது.
முக்கிய தினம்
- இரசாயனப் போரில் பாதிக்கப்ட்டவர்களுக்கான நினைவு தினம்