Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 30-31st March 2023

Daily Current Affairs

Here we have updated 30-31st March 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தமிழகச் செய்தி

  • மின் நுகர்வோர்களும் தங்களது மின் இணைப்பில் ஆர்சிடி (RCD) எனும் கருவியை கட்டாயம் பொருத்த வேண்டும் என தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • RCD – ரெசிடுயல் கரண்ட் டிவைஸ்
  • கன்னியாகுமரியில் கடற்கரை முகப்பு பகுதி மேம்பாட்டுப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு மத்திய அரசு விருது வழங்கியுள்ளது.
    • சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் மத்திய சுற்றுலா அமைச்சகம் சுற்றுலாத் தலங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த “சுவதேஷ்தர்ஷன்” என்ற திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • மார்ச் 30-ல் தொடங்கி வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா ஓராண்டு முழுவதும் நடத்தப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
    • வைக்கம் போராட்டம் 1924 மார்ச் 30 முதல் 1925-ம் ஆண்டு நவம்.23-ல்  முடிவுக்கு வந்தது.
    • பழ.அதியமான் எழுதிய “வைக்கம் போராட்டம்” என்ற தமிழ்நூலின் மலையாள மொழிபெயர்ப்பு வெளியிடப்படுகிறது.
    • பெரியாரின் பிறந்த தினமான செப்.17-ல் தமிழக அரசால் “வைக்கம் விருது” வழங்கப்படும்.
    • பெரியார் கைது செய்யப்பட்டு முதல் முதலாக சிறை வைக்கப்பட்டிருந்த அருவிக்குட்டி கிராமத்தில் பெரியார் நினைவிடம் உருவாக்க முயற்சிக்கப்படுகிறது.
  • சுய உதவிக் குழு பெண்களால் நடத்தப்படும் 7,500 நுண் மற்றும் சிறு குறு தொழில்கள் அடையாளம் காணப்பட்ட அவர்களின் நிதி மற்றும் இதர தேவைகளின் அடிப்படையில் உதவிகள் வழங்க “வாழ்ந்து காட்டுவோம் திட்டம்” மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் ரூ.50கோடி நிதி ஒதுக்கப்படும்.
    • சுய உதவிக்குழுக்களின் பொருள்களை விற்பனை மற்றும் காட்சிப்படுத்த “மதி அங்காடிகள்” ரூ.5 கோடி செலவில் அமைக்கப்படும்.
    • சர்வதேச சிறுதானிய ஆ்ண்டை முன்னிட்டு 37 மாவட்ட பெருந் திட்ட வளாகங்களில் “மதி  சிறுதானிய உணவங்கள்” ரூ.1.85 கோடி செலவில் அமைக்கப்படும்.
  • அஞ்சலக சேமிப்புத் திட்டத்தில் 3கோடி கணக்குகளைத் தொடங்கி இந்தியாவில் தமிழகம் முதல் இடம் பிடித்துள்ளது.
    • செல்வமகள் திட்டத்தின்கீழ் அதிக கணக்குகள் தொடங்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது.
    • தமிழகத்தில் மாநில, மாவட்ட, நகர அளவில் 11,858 அஞ்சலகங்களும், 926 கிளை அஞ்சலகங்களும் இயங்கி வருகின்றன.

தேசிய செய்தி

  • மே 10-ல் கர்நாடக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
    • தலைமைத் தேர்தல் ஆணையர்ராஜீவ் குமார்
    • பதவிக்காலம் – 15-05-2022 முதல் 2025 பிப்ரவரி
  • “இரண்டாவது ஜனநாயக உச்சிமாநாடு-2023” காணொலி காட்சி மூலமாக நடைபெற்றது.
  • கரோனா பெருந்தொற்று காலத்தில் “வாசின் மைத்ரி” என்ற உலகாளாவிய தடுப்பூசி வழங்கும் திட்டத்தை இந்திய அரசு நடத்தியது.
  • மார்ச் 29-ல் ஓவியம், சிற்பம், புகைப்படம், வீடியோ உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னோடி கலைஞராக திகழ்ந்த விவன் சுந்தரம் (79) காலமானர்.
  • தேசிய அரிய வகை நோய்கள் கொள்கையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து வகை அரிய நோய்களின் சிறப்பு மருத்துவ சிகிக்சைக்கான மருந்துப் பொருள்களுக்கு இறக்குமதி வரியில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது.
    • ஏப்ரல் 1-ம் தேதி முதல் இவ்வரி விலக்கு அமலுக்கு வருகிறது.
  • ஏப்ரல் 8-ல் சென்னை-கோவை இடையிலான வந்தே பாரத் இரயில் சேவையை பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளார்.
    • முதல் வந்தேபாரத் இரயில் சேவை தில்லி-வாரணாசி இடையே இயக்கப்பட்டது.
      • இந்த ரயில்கள் இயக்கப்படும் வழித்தடங்கள்
        1. சென்னை – மைசூரு
        2. தில்லி – வாரணாசி
        3. தில்லி – காத்ரா
        4. காந்திநகர் – மும்பை
        5. தில்லி – யுனா (ஹிமாசல பிரதேசம்)
        6. பிலாஸ்பூர் – நாக்பூர்
        7. மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம் – சாய்நகர் ஷீரடி
        8. ஹவுரா – நியூ ஜல்பைகுரி
        9. செகந்திராபாத் – விசாகப்பட்டினம்
        10. சோலாப்பூர் – மும்மை சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம்
  • இந்தியாவின் ஃப்ளைபியேளடு இந்தியா நிறுவனம் 150 பறக்கும் டாக்ஸிகள் வாங்க அமெரிக்காவின் ஏரோ குருப் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
    • இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பறக்கும் டாக்ஸிகள் (2028-க்குள்) பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
    • இந்த டாக்ஸிகள் மின்சாரத்தில் இயங்குகின்றன.
  • பிரதமரின் வேளாண் நீர்திட்டத்தின் கீழ் (PMKSY) 22 மாவட்டங்களில் 123 கண்மாய்களில் புனரமைப்புப் பணிகள் ரூ.180 கோடிகளில் மேற்கொள்ளப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.
    • PMKSY – Pradhan Mantri Krishi Sinchai Yojana (பிரதம மந்திரி கிருஷி சின்சாயி திட்டம்)
    • PMKSY – 2015
    • ஒரு துளி நீரில் அதிக விளைச்சல் இதன் குறிக்கோள் ஆகும்.
  • தேசிய கல்விக் கொள்கை (NEB) 2020ன் படி 5ம் வகுப்பு வரையிலான புத்தகங்கள் 22 இந்திய மொழிகளில் வழங்கப்பட உள்ளன.

உலகச் செய்தி

  • உலக வங்கியின் தலைவராக இந்திய-அமெரிக்கரான அஜய் பங்கா தேர்வாகிறார்.
    • உலக வங்கியின் தலைவராக உள்ள டேவிட் மால்பாஸ் வரும் ஜூன் மாதத்துடன் இப்பதவியில் இருந்து விலக உள்ளார்.
    • சர்வதேச நிதி அமைப்பான உலக வங்கியின் தலைமை பொறுப்பை வகிக்க உள்ள முதல் இந்திய-அமெரிக்கர், சீக்கிய-அமெரிக்கர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
    • 2016-ல் “பத்மஸ்ரீ” விருதினை (இந்திய அரசின் 4வது உயரிய விருது) பெற்றுள்ளார்

 

Mar 27 Current Affairs  |  Mar 28-29 Current Affairs

Leave a Comment