Daily Current Affairs
Here we have updated 30th January 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
நூல் வெளியீடு
- மேலும் விருதுநகர் மாவட்டம் ஒரு வரலாற்று கண்ணோட்டம் – ஒரு வரலாற்றுப் பயணம் என்ற நூலினை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ளார்.
- சிந்து சமவெளியினர் செம்பினை பயன்படுத்தியபோதே நாம் இரும்பினை பயன்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
- தமிழக தொல்லியில் துறை சார்பாக இரும்பின் தொன்மை என்னும் நூல் வெளியிடப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்
- டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- காவிரி நதிநீர் பிரச்சனை தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆளுகைக்குட்பட்ட நான்கு மாநில பிரச்சனை ஆகும்.
- மைசூர் அரசாங்கமும், மெட்ராஸ் மாகணமும் 1924-ல் காவிரி நீரை பயன்படுத்த ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
- 1974-ல் இந்த ஒப்பந்தம் காலவதியானது.
- நதி நீர் சிக்கல் திட்டம் 1956-ன் படி காவிரி நதி நீர் நடுவர் மன்றம் 1991 மத்திய அரசால் அமைக்கப்பட்டது.
- நடுவர் மன்றம் தீர்ப்பு 2007-ல் வழங்கப்பட்டது.
- காவிரி நீர் ஒழுங்குபடுத்தும் குழுவும் உருவாக்கப்பட்டது.
வைரவிழா
- பாரத சாரணர் மற்றும் வழிகாட்டிகளின் வைர விழா திருச்சியிலுள்ள மணப்பாறையில் நடைபெற்றது.
அணிவகுப்பு விருது
- உத்திரபிரதேசத்தின் அலங்கார ஊர்தி அணிவகுப்பு விருதில் முதலிடம் பிடித்துள்ளது.
- 2வது இடம் – திரிபுரா
- 3வது இடம் – ஆந்திரப்பிரதேசம்
- இவ்விருது குடியரசு தின விழாவில் வழங்கப்பட்டது.
சர்வதேச சரஸ்வதி திருவிழா
- ஹரியானாவில் சர்வதேச சரஸ்வதி திருவிழா நடைபெற்றுள்ளது.
ஷைலேஷ் குமார் டேவி
- சோகோவின் (Zoho) தலைமை நிர்வாக அதிகாரியாக ஷைலேஷ் குமார் டேவி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஜஸ்பிரித் பும்ரா
- 2024ஆம் ஆண்டின் ICC சிறந்த கிரிக்கெட் வீரர் விருதினை இந்திய வீரரான ஜஸ்பிரித் பும்ரா வென்றுள்ளார்.
ICC மகளிர் சாம்பியன் ஷிப் கோப்பை
- மகளிருக்கான ICC மகளிர் சாம்பியன் ஷிப் கோப்பையை ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது.
முக்கிய தினம்
முப்படை பாசறை திரும்பும் நிகழ்வு – ஜனவரி 29
தியாகிகள் தினம் (Martyrs Day) – ஜனவரி 30