Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 30th July 2024

Daily Current Affairs

Here we have updated 30th July 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

இதயம் காப்போம் திட்டம்

Vetri Study Center Current Affairs - Idhayam kappom thittam

  • தமிழக அரசின் இதயம் காப்போம் திட்டத்தின் கீழ் 98.7% பேர் பயனடைந்துள்ளனர்.
  • இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் 6090 நபர்களில் 6011 நபர்கள் நலமுடன் உள்ளன.
  • இதயம் காப்போம் திட்டம் – 27.06.2023

வைகை இல்லம்

  • புதுதில்லியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்ல வளாகத்தில் கட்டப்பட உள்ள கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

அக்ரி-பாட்

  • தமிழ்மொழியில் வேளாண்மைக்கென அக்ரி-பாட் என்னும் செயற்கை நுண்ணறிவு இணையதளம் உருவாக்கப்பட உள்ளது.
  • இந்த செயலி மூலம் வேளாண் தொழில் நுட்பங்களையும் வேளாண் சார்ந்த தகவல்களையும் விவசாயிகள் அறிந்து கொள்ளலாம்.

ஒருங்கிணைந்த வேளாண் ஏற்றுமதி நிலையம்

  • இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த வேளாண் ஏற்றுமதி நிலையம் மும்பையிலுள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

சிம்ஸ் 2.0 (SIMS 2.0)

  • எஃகு இறக்குமதிக்காக சிம்ஸ் 2.0  என்னும் கண்காணிப்பு தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
  • மத்திய எஃகு துறை அமைச்சர் – குமாரசாமி
  • SIMS – Steel Import Monitoring System

ஒரு அகதி விஞ்ஞானி

  • இமாச்சலப்பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு ஒரு அகதி விஞ்ஞானி (Ek Refugee Scientist) எனும் நூல் வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்நூல் எம்.கே.சிங்காரி என்பவரின் சுயசரிதை பற்றிய நூலாகும்.

பசியால் பாதிப்பு

  • உலக மக்களில் 9%பேர் பசியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

SearchGPT

Vetri Study Center Current Affairs - SearchGPT

  • Open AI அமைப்பால் SearchGPT தொடங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நிறுவனம்GPT
கூகுள் நிறுவனம்பார்டு, ஜெமினி
மெட்டா நிறுவனம்லாவா

மானஸ் உதவி மையம்

  • மத்திய அரசானது போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களின் உதவிக்காக மானஸ் என்னும் பெயரில் உதவி மையத்தினை திறந்துள்ளது.
  • மேலும் போதை பயன்பாடு பற்றி தெரிவிக்க 1933 என்ற உதவி என்னும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மனோதர்பரன்

  • மாணவர்கள் தற்கொலைகளை தடுக்க மனோதர்பன் எனும் முன்னெடுப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறதாக மத்திய கல்வித்துறை இணையமைச்சர் மஜும்தார் தெரிவித்துள்ளார்.
  • தேசிய குற்றவியல் ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 1.2%பேர் தேர்வுகளில் தோல்வி அடைவதால் தற்கொலை செய்வதாக தெரிவித்துள்ளது.

இடஒதுக்கீடு

  • பீகாரில் வழங்கப்பட்ட 65% இட ஒதுக்கீட்டினை ரத்து செய்த உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • மாநில அரசு இட ஒதுக்கீட்டில் 50% மீறக்கூடாது என்று இந்திரா சாவ்னி வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டாம் க்ருஸ்

Vetri Study Center Current Affairs - Tom Cruise

  • பிரான்ஸ் நாட்டின் உயரியன விருதான செவாலியே விருதானது டாம் க்ருஸிற்கு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இதுவரை செவாலியே விருது பெற்ற தமிழர்கள்

  • கவிஞர் வாணிதாசன்
  • கண்ணன் சுந்தரம்
  • அஞ்சலி கோபாலன்
  • மதன கல்யாணி
  • சிவா இராமநாதன்
  • நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
  • நடிகர் அலெக்ஸ்
  • ஷெரீன் சேவியர்
  • நாகநாதன் வேலுப்பிள்ளை
  • நடிகர் கமல்ஹாசன்
  • அருணா சாயிராம்
  • கிரண் நாடார்
  • என் சந்திரசேகரன்

பிரெஞ்சு அரசானது சசிதரூர்-க்கு செவாலியர் விருது வழங்கியுள்ளது.

ஆசிய டி20 கிரிக்கெட்

  • பெண்களுக்கான ஆசிய கிரிக்கெட் டி20 கோப்பையை முதன் முறையாக இலங்கை அணி வென்றுள்ளது.

Related Links

Leave a Comment