Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 30th November 2023

Current Affairs

Here we have updated 30th November 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

 சிலை திறப்பு

Vetri Study Center Current Affairs - Ayothidasar statue

  • சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் திராவிடப்போராளி என போற்றப்படு அயோத்திதாசரின் சிலையுடன் கூடிய மணிமண்டபத்தினை தமிழக முதல்வர் திறந்து வைக்கிறார்.
  •  திராவிடப்போராளி என போற்றப்படுகிறார்.
  • ஒரு பைசா தமிழன் (1907),  திராவிட பாண்டியன் போன்ற இதழை நடத்தியவர்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டம்

Vetri Study Center Current Affairs - Chief Minister's Comprehensive Health Insurance Scheme

  • முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தில் புதிய பயனாளிகள் சேர்க்கப்படுகிறன.
  • 1.45 கோடி குடும்பங்கள் மருத்துவக்காப்பீடு அட்டை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டம் – 23.07.2009

கல்வெட்டியல்-தொல்லியல் அகழாய்வு பட்டிய படிப்பு

  • 2024 ஜனவரி முதல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வெட்டியல்-தொல்லியல் அகழாய்வு பட்டிய படிப்பு பிரிவு தொடங்கப்பட உள்ளது.
  • இப்படிப்பின் காலம் ஓராண்டு ஆகும்.
  • இதில் கல்வெட்டியல், தொல்லியல் வழி தமிழக வரலாறு, மொழி பண்பாடு, கலை, இலக்கியம் குறித்து அறிந்து கொள்வதற்கும், கல்வெட்டுப் படியெடுத்தல் போன்றவற்றிற்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

சாம்சங் ஆராய்ச்சி நிறுவனம்

  • சாம்சங் ஆராய்ச்சி நிறுவனம் (இந்தியா) தனது புதிய மற்றும் நவீன ஆய்வகத்தை வேலூர் விஐடி பல்கலைக்கழத்தில் நிறுவியுள்ளது.

நூல் வெளியீடு

Vetri Study Center Current Affairs - Translation Book

  • வைக்கம் போராட்டத்தின் கன்னட மொழிபெயர்ப்பு நூலினை தமிழக முதல்வர் வெளியிட்டுள்ளார்.
  • இந்நூலினை எழுத்தாளர் பழ.அதியமான் எழுதியுள்ளார்.
  • வைக்கம் போராட்டம் மார்ச் 1923-ல் தொடங்கியது.
  • 29.11.1925-ல் வைக்கம் பேராட்டத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது.

உயரிய விருது

Vetri Study Center Current Affairs - Legion of Honor Award

  • இஸ்ரோவின் சுகன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவிற்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான லெஜியன் ஆஃப் ஹானர் விருது வழங்கப்பட்டுள்ளது.
  • பிரான்ஸ்-இந்தியா இடையிலான விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான கூட்டு நடவடிக்கையில் முக்கிய பங்காற்றியதற்காக வழங்கப்பட்டுள்ளது.

விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் திட்டம்

Vetri Study Center Current Affairs - Special Fast Track Courts

  • 2023 மார்ச் 31-ல் நிறைவடைந்த விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் திட்டமானது 3 ஆண்டுகள் நீட்டிக்க மத்திய அமைச்சரை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • பாலியல் வன்கொடுமை வழக்கில் விரைவாக தீர்ப்பு, போக்கேசா சட்டத்தின் கீழ் வழக்குகளை விசாரிக்க ஏற்படுத்தப்பட்டது.
  • நாட்டில் 1,023 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் (FDSC) உள்ளன

சூரிய மின் உற்பத்தி

Vetri Study Center Current Affairs - Solar power generation

  • கடந்த ஜனவரி-செப்டம்பர் மாதங்களில் இந்தியாவின் சூரிய மின் உற்பத்தித்திறன் வளர்ச்சியில் 47% சரிவானது ஏற்பட்டுள்ளது.
  • சூரிய மின் உற்பத்தித்திறன் வளர்ச்சியானது 2022 ஜனவரி-செப்டம்பர் வரை 10.5 ஜிகாவாட்டாக இருந்துள்ளது.
  • 2023 னவரி-செப்டம்பர் வரை 5.6 ஜிகாவாட்டாக குறைந்துள்ளது.
  • இவ்வறிக்கையை சந்தை ஆய்வு நிறுவனமான மெர்காம் இந்தியா வெளியிட்டுள்ளது.

பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டம்

Vetri Study Center Current Affairs - Prime Minister's Food Program for the Poor

  • பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தினை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் கீழ் 5 லட்சத்திற்கும் அதிகமான நியாய விலைக் கடைகளின் மூலம் அரிசி, கோதுமை, சிறுதானியங்கள் ஆகியவை வழங்கப்படுகின்றன.
  • இத்திட்டத்தில் 81.35 கோடி பேர் பயனடைந்துள்ளனர்
  • பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டம் – 2020

குளர்கால கூட்டத் தொடர்

Vetri Study Center Current Affairs - Winter Session Of Parliament

  • நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 4-22 வரை நடைபெற உள்ளது.
  • 19 நாட்களில் 15 அமர்வுகள் நடைபெற உள்ளன.
  • 18 மசோதாக்கள் கொண்டு வர மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.

இந்தியா சார்பில் வீடுகள்

Vetri Study Center Current Affairs - House

  • இலங்கை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு இந்தியா சார்பில் 10,000-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியா சார்பில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீட்டு வசதித் திட்டத்தின் 4வது கட்டமாக தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டித் தரப்பட உள்ளன.

பால் உற்பத்தி

Vetri Study Center Current Affairs - Milk production

  • இந்தியாவில் 2021-22 வரை 22.1 கோடி டன் பால் உற்பத்தி செய்யப்பட்டதாக ஐ.நா. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் என்ற திட்டதின் வாயிலாக செயற்கை கருவூட்டலை தேசிய அளவில் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
  • இத்திட்டத்தின் மூலம் அனைத்து இன மாடுகளின் மரபணு மேம்பபாட்டை ஊக்குவித்து பால் உற்பத்தியை அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
  • இந்தியாவின் அதிக பால் உற்பத்தி செய்யும் மாநிலாக உத்திரபிரதேசம் இராஜஸ்தான், மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்கள் திகழ்கிறன.

எட்டாவது அதிசயம்

Vetri Study Center Current Affairs - Angkor Wat

  • உலகின் எட்டாவது அதிசயமாக கம்போடியாவின் அங்கோர் வாட் சேர்க்கப்பட்டுள்ளது.
  • 500 ஏக்கர் அளவிலான கோயில் வளாகம்.
  • உலகின் மிகப்பெரிய மத நினைவுச் சின்னமாகும்.
  • 12-ம் நூற்றாண்டில் இரண்டாம் சூரியவர்மானால் விஷ்ணு என்ற கடவுளுக்காக கட்டப்பட்டது.

திரும்ப ஒப்படைப்பு

  • பழமை வாய்ந்த 6 கைவினைப் பொருட்களை நெதர்லாந்து இலங்கையிடம் ஒப்படைத்துள்ளது.
  • இந்த கைவினைப் பொருள்கள் காலனி ஆதிக்கத்தின்போது இலங்கையிலிருந்து கடத்தி செல்லப்பட்டதாகும்.
  • 1658-1769 வரை இலங்கையில் நெதர்லாந்து காலனி ஆட்சி நடைபெற்றது.

இரசாயன போரால் பாதிக்கப்பட்ட அனைவரையும் நினைவு கூறும் தினம் (Day of Remembrance for all Victims of Chemical Warfare) – Nov 30

Vetri Study Center Current Affairs - International Jaguar Day

November 28 Current Affairs | November 29 Current Affairs

Related Links

Leave a Comment