Daily Current Affairs
Here we have updated 30th October 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
முத்துராமலிங்க தேவர் அரங்கம்
- இராமநாதபுரம் மாவட்டதில் முத்துராமலிங்க தேவர் அரங்கம் திறக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- காலம் – 30.10.1908 – 30.10.1968
- நேதாஜி என்னும் இதழை நடத்தியுள்ளார்.
- தேசியமும், தெய்வீகமும் நமதிரு கண்கள் என்று கூறினார்.
சிறப்பு பெயர்கள்
- தேசியம் காத்த செம்மல்
- வித்யா பாஸ்கர்
- பிரவசன கேசரி
- சன்மார்க்க சண்டமாருதம்
- இந்து புத்தசமய மேதை
பெரியாரை பாராட்டியவர்கள்
- தேசியம் காத்த செம்மல் – திரு.வி.க
- சுத்தத் தியாகி – தந்தை பெரியார்
பாதம் பாதுகாப்போம் திட்டம்
- தமிழகத்தின் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனையில் பாதம் பாதுகாப்போம் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- பாதம் பாதுகாப்போம் திட்டம் – 15.07.2024
பொருளாதார இலக்கு
- தமிழ்நாடு 2030ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதிகமான வெப்பநிலை
- 40oc அதிகமாக வெப்பநிலை ஈரோட்டில் 31 நாட்கள் உருவாகியுள்ளது.
- இதன் மூலம் 40oc அதிகமாக வெப்பநிலை அதிக நாட்கள் உருவாகியுள்ள மாவட்டங்களில் ஈரோடு முதன்மையாக உள்ளது.
- கரூர், திருப்பத்தூர், தர்மபுரி ஆகிய அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
ஒட்டகத் திருவிழா
- சர்வதேச ஒட்டகத் திருவிழா ராஜஸ்தானின் புஷ்கரியில் நடத்தப்பட்டுள்ளது.
மிருதுஞ்சய் குமார் நாராயண்
- இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையரான மிருதுஞ்சய் குமார் நாராயண் உள்ளார்
- இவரது பதவிக்காலம் 2024 முடிவடைந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.
- சுதந்திரத்திற்கு பிறகு முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு – 1951
- சுதந்திரத்திற்கு கடைசி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2021
- ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு – 1881
இயற்கை பாதுகாப்பு குறியீடு 2024
- உலகாளவிய இயற்கை பாதுகாப்பு குறியீடு 2024 பட்டியிலில் இந்தியா 176வது இடத்தில் உள்ளது.
தங்க பூனை
- அசாமிலுள்ள மானாஸ் தேசிய பூங்காவில் ஆசிய தங்கப் பூனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அணுசக்தி திட்ட தந்தை
- இந்திய அணுசக்தி திட்டத்தின் தந்தையாக போற்றப்படும் ஹோமிபாபாவின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
நகர்ப்புற நடமாடும் இந்தியா மாநாடு
- 17வது நகர்ப்புற நடமாடும் இந்தியா மாநாடானது குஜராத் மாநிலத்தின் காந்திநகரில் நடைபெற்றுள்ளது.
சிம்பெக்ஸ் 2024
- சிங்கப்பூர்-இந்தியா நாடுகள் பங்கேற்கும் கடல்சார் இருதரப்பு பயிற்சியானது சிம்பெக்ஸ் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் கடற்படை பயிற்சியான மலபார் பயிற்சி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றுள்ளது.
- ஜப்பான்-இந்தியா இடையே 8வது கடல்சார் பயிற்சியானது ஜிமெக்ஸ் (Jimex 2024) எனும் பெயரில் நடைபெற்றுள்ளது.
இனவெறி எதிர்ப்பு விருது
- நேபாளத்தினை சேர்ந்த ஊர்மிளா சவுத்திரி உலக இனவெறி எதிர்ப்பு விருதினை வென்றுள்ளார்.
பாலன் டி ஓர் விருது 2024 (Ballon d Or)
- ஸ்பெயினின் கால்பந்து வீரரான ரோட்ரி 2024ஆம் ஆண்டிற்கான பாலன் டி ஓர் விருதினை வென்றுள்ளார்.
குஸ்டாவோ குட்டிரெஸ்
- சமீபத்தில் காலமான குஸ்டாவோ குட்டிரெஸ் நாங்கள் எங்கள் சொந்த கிணற்றிலிருந்து குடிக்கிறோம் மற்றும் விடுதலை இறையியல் என்னும் நூல்களை எழுதியுள்ளார்.
ஷென்ஷு ராக்கெட்
- ஷென்ஷு ராக்கெட் மூலம் சீனா 3 விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பியுள்ளது.
- சீன விண்வெளி ஆய்வு நிலையமான டியோங்கோங்கில் 6 மாதம் தங்கி கட்டுமான பணியை மேற்கொள்ள உள்ளனர்.
முக்கிய தினம்
உலக சேமிப்பு தினம் (World Saving Day) – அக்டோபர் 30
தேசிய ஆயுர்வேத தினம் (World Ayurveda Day) – அக்டோபர் 30
தமிழக அரசின் திட்டங்கள்
புதுமைப் பெண் திட்டம் – 05.09.2022
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் – 01.02.2023