Daily Current Affairs
Here we have updated 30th September 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
கடல் வாழ் டார்டிகிரேட் (Tardigrade)
- தமிழ்நாட்டின் மண்டபம் பகுதியில் கடல் வாழ் டார்டிகிரேட் இனத்தின் புதிய இனத்தினை கடல் வாழ் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளன.
- இந்த புதிய இனத்திற்கு பாட்டிலிப்ஸ் கலாமி என பெயரிடப்பட்டுள்ளது.
தேசிய தூய்மை காற்றுத்திட்டம் (National Clean Air Programme)
- தேசிய தூய்மை காற்றுத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி நகரங்கள் வரிசையில் தமிழ்நாட்டின் திருச்சி நகரமானது 6வது இடத்தை பிடித்துள்ளது.
- இந்தூர் முதலிடமும், ஆக்ரா இரண்டாமிடமும், தானே மூன்றாவது இடமும் பிடித்துள்ளன.
- சென்னை மாநகராட்சி 37வது இடமும், மதுரை மாநகராட்சி 44வது இடத்தையும் பிடித்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
- 2023-ஆம் ஆண்டுக்கான சிறந்த சுற்றுலா கிராமமாக நீலகிரியின் உல்லாடா கிராமம் தேர்வாகியுள்ளது.
குடியரசுத்தலைவர் ஒப்புதல்
- 33% மகளிர் இட ஒதுக்கீடு (நாரி சக்தி வந்தன் அதிநியம்) மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
- மகளிர் இட ஒதுக்கீடு மசோதா சட்டமாகியுள்ளது.
- 128வது சட்டத்திருத்தமாக அறிவிக்கப்பட்டது.
- இது அரசமைப்பு 106வது திருத்தச் சட்டமென குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிம்பெக்ஸ் 2023 (SIMBEX)
- இந்தியா-சிங்கப்பூர் இடையேயான கடல் சார் இரு தரப்பு 30வது கூட்டு ராணுவப் பயிற்சி நடைபெற்றுள்ளது.
- இப்பயிற்சியானது தென் சீனக்கடலில் சிங்கப்பூர் நாட்டினால் நடத்தப்பட்டுள்ளது.
- 1994 முதல் நடைபெற்று வருகிறது.
- இந்தியா சார்பில் ஐஎன்எஸ் ரன் விஜய், ஐஎன்எஸ் சிந்துக கேசரி, ஐஎன்எஸ் கவரட்டி கலந்து கொண்டன.
தொடர்புடைய செய்திகள்
- இந்தியா-அமெரிக்கா இடையேயான கூட்டு 19வது இராணுவப் பயிற்சியானது அலாஸ்காவில் நடைபெறுகிறது.
சர்வதேச மாநாடு
- இராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் அணை பாதுகாப்பு தொடர்பான சர்வதேச மாநாடு (International Conference on Dam Safety) நடைபெற்றுள்ளது.
- இம்மாநாடானது ஜல்சக்தி அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்டுள்ளது.
- ஜல்சக்தி அமைச்சகமானது 2019-ல் உருவாக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
- 2023-ம் ஆண்டுக்கான இந்திய பொலிவுறு நகரங்கள் மாநாடானது மத்திய பிரதேசத்தின் இந்தூரில் நடைபெற்றுள்ளது.
உலகின் சுந்திரமான பொருளாதார அறிக்கை
- கனடாவின் ப்ரேசர் நிறுவனத்தால் வெளியிட்டுள்ள உலகின் சுந்திரமான பொருளாதார அறிக்கையின் 165 நாடுகள் பட்டியிலில் இந்தியா 97வது இடம் பிடித்துள்ளது.
- முதலிடம் – சிங்கப்பூர், இரண்டாம் இடம் – ஹாங்காங், மூன்றாம் இடம் – சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் பிடித்துள்ளன.
- கடைசி இடத்தை வெனிசுலா பிடித்துள்ளது.
உலக நறுமணப் பொருள்கள் மாநாடு
- மகாராஷ்டிராவின் நவிமும்பையில் 14வது உலக நறுமணப் பொருள்கள் மாநாடானது நடைபெற்றது.
- இம்மாநாடானது இந்திய நறுமணப் பொருள்கள் வாரியம் சார்பில் நடத்தப்பட்டுள்ளது.
ட்ரோன் கண்காட்சி
- உத்திரப்பிரதேசம், காஜியாபாத்திலுள்ள ஹிண்டன் விமானப்படை நிலையத்தில் பாரத் ட்ரோன் சக்தி 2023 (Bharat Drone Shakti-2023) என்ற பெயரில் நடைபெற்றுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- AI மூலம் இயங்கும் இந்தியாவின் முதல் ட்ரோன் எதிர்ப்பு தொழில் நுட்பம் (Anti Drone System) ஹைதரபாத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- இந்தியாவின் முதல் ட்ரோன் பொது சோதனை மையமானது ஸ்ரீபெரும்புதூர், வடகால் சிப்காட் தொழில் பூங்கா தொடங்கப்பட்டுள்ளது.
நிசார் செயற்கைக்கோள்
- 2024 பிப்ரவரியில் இஸ்ரோ (இந்திய விண்வெளி மையம்) மற்றும் நாசா (அமெரிக்க விண்வெளி மையம்) இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோளானது எஸ்எஸ்எல்வி டி3 ராக்கெட் உதவியுடன் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- கருந்துளை, தூசு மற்றும் வாயுக்களின் மேகக்கூட்டமான நெபுலா உள்ளிட்டவற்றை ஆராயும் எக்ஸ்போசாட் செயற்கைக்கோளானது பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
- 2023 நவம்பரில் பருவநிலை குறித்து ஆராயும் இன்சாட்-3டிஎஸ் செயற்கைகோளானது விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
ஆசிய கோப்பை போட்டி-சீனா
- துப்பாக்கி சுடுதல் போட்டியின் 50மீ ரைபிள் 3 பொசிஷன்ஸ் ஆடவர் அணிகள் பிரிவில் ஸ்வப்னில் சுரேஷ் குசேல், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், அகில் ஷியோரன் தங்கம் வென்றுள்ளனர்.
- 50மீ ரைபிள் 3 பொசிஷன்ஸ் ஆடவர் தனிநபர் பிரிவில் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் வெள்ளி வென்றுள்ளார்.
- 10மீ ஏர்பிஸ்டல் மகளிர் தனிநபர் பிரிவில் பாலக் குலியா தங்கமும், ஈஷா சிங் வெள்ளியும் வென்றுள்ளனர்.
- ஸ்குவாஷ் மகளிர் அணிகள் பிரிவில் தன்வி கன்னா, அனாகத் சிங், ஜோஸ்னா சின்னப்பா ஆகியோர் வெண்கலம் வென்றுள்ளனர்.
- டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் ராம்குமார் ராமநாதன் மற்றும் மைனேனி இணை வெள்ளி வென்றுள்ளது.
- தடகளத்தில் முதன் முறையாக குண்டு எறிதலில் கிரண் பலியான் வெண்கலம் வென்றுள்ளார்.
உலக மொழிபெயர்ப்பு தினம் (International Translation Day ) – Sep 30
- கருப்பொருள்: “Translation unveils the Many faces of Humanity”