Daily Current Affairs
Here we have updated 31st January 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தமிழகச் செய்தி
- தமிழகத்தில் முதற்கட்டமாக ஒரு கோடி வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட உள்ளது.
- சென்னை தியாகராய நகரில் 140கோடி செலவில் 1.45 மின் இணைப்பு வீடுகளில் ஸ்மார்ட்மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
தேசிய செய்தி
- ஜனவரி 31-ல் குடியரசுத்தலைவரின் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கிறது.
- பிப்ரவரி 1-ல் மத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்
- அகில இந்திய உயர்கல்வி கணக்கெடுப்பு (அய்ஷே 2020-21) அறிக்கையின்படி கடந்த 2014-15ஆம் ஆண்டிலிருந்து உயர்கல்வியில் பழங்குடியின (ST) மாணவர்கள் சேர்க்கை 47% வளர்ச்சி பெற்றுள்ளது என தெரியவந்துள்ளது.
- நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான கல்லூரிகளில் உத்திரப் பிரதேச மாநிலம் முதல் இடம் (8,144) பிடித்துள்ளது.
- மகாராஷ்டிரம் 2வது இடத்தையும் (4,532), கர்நாடகம் 3வது இடத்தையும் (4,233), ராஜஸ்தான் 4வது இடத்தையும் (3,694), தமிழகம் 5வது இடத்தையும் (2,667) பெற்றுள்ளது.
- பிப்ரவரி 5-7வரை பெங்களூரில் ஜி20 ஆற்றல் மாற்றக் குழு கூட்டம் நடைபெற உள்ளது.
- காற்று மாசுபாட்டின் ஆதாரங்களை கண்டறிய நிகழ்நேர மூல ஆய்வுக்காக “சூப்பர் சைட்” மற்றும் நடமாடும் காற்றின் தர கண்காணிப்பு நிலையம் டெல்லியில் துவங்கபட்டுள்ளது.
உலகச் செய்தி
- செக்குடியரசின் புதிய அதிபராக பீட்டர் பாவெல் தேர்வானார்.
விளையாட்டுச் செய்தி
- ஒடிசாவில் நடைபெற்ற உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் ஜெர்மனி சாம்பியன் பட்டம் வென்றது.