Daily Current Affairs
Here we have updated 31st December 2022 current affairs notes. This notes will helpful for those who are preparing competative exams like TNPSC, TRB and Police Exams.
தமிழக செய்தி
- திருச்சி மாவட்டத்தில் நவீன வன்மரக் கூழ் ஆலை மற்றும் முதல் சிப்காட் தொழிற்பூங்காவினை தமிழக முதல்வர் திறந்து வைத்துள்ளார்.
- செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.300 கோடி செலவில் தாவரவியல் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
தேசிய செய்தி
- நடப்பு 2022-2023-ம் நிதியாண்டின் இறுதி காலாண்டில் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் உள்ளிட்ட சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டிவிகிதம் 1.1 % வரை உயர்ந்துள்ளது.
- தேசிய நெடுஞ்சாலை எண்16-ல் போர் விமானங்களை தரையிறக்குவதற்கான சோதனை மேற்கொள்ளப்பட்டது.
- இந்தியாவின் பொருளாதார நிபுணரான சி.ரங்கராஜன் “Forks In the Road; My Days at RBI and Beyond” என்ற நூலினை எழுதியுள்ளார்.
- இவர் இந்திய ரிசர்வ் வங்கியின் 19வது ஆளுநராக செயல்பட்டுள்ளார்.
- எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் தங்குமிடம் மற்றும் மருத்துவ வசதிகளை அறிந்து கொள்ள பிரஹாரி மொபைல் செயலியினை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது
- இந்தியாவில் முறையாக ஹூக்ளி ஆற்றில் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது.
- கோவா மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பாலமான ஜூவாரியினை மத்திய அமைச்சர் நிதின்கட்கரி திறந்து வைத்துள்ளார்.
உலகச் செய்தி
- ஊழல் வழக்கில் மியான்ம்ர் ஜனநாயக் கட்சித் தலைவர் ஆங்சான் சூகிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
- இஸ்ரேல் நாட்டின் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு 6 முறையாக பொறுப்பேற்றுள்ளார்.
விளையாட்டு செய்தி
- கஜகஸ்தானில் நடைபெற்ற ஃபிடே உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பில் மகளிர் பிரிவில் இந்தியாவின் கோனேரு ஹம்பி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
முக்கிய தினம்
- உலக அமைதி தியான தினம் (டிசம் 31).