Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 31st August 2024

Daily Current Affairs

Here we have updated 31st August 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

வந்தே பாரத் ரயில் சேவை

  • புதிய 3 வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.
    1. மதுரை – பெங்களூரு
    2. சென்னை – நாகர்கோவில்
    3. மீரட் – லக்னோ

தொடர்புடைய செய்திகள்

  • 15.02.2019-ல் இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையானது புதுதில்லி முதல் வாரணாசி இடையே துவங்கப்பட்டுள்ளது

பணக்காரர்கள் பட்டியல்

Vetri Study Center Current Affairs - Mubai

  • அதிக பணக்காரர்கள் வாழும் நகரங்கள் பட்டியலில் மும்பை நகரம் முதலிடம் பிடித்துள்ளது.
  • 2வது இடம் – புதுதில்லி
  • 3வது இடம் – ஹைதரபாத்
  • 4வது இடம் – பெங்களூர்
  • 5வது இடம் – சென்னை
  • ஆசியாவின் கோடிஸ்வரர்களின் பட்டியில் மும்பை முதலிடம் பிடித்துள்ளது.
  • ஆசியாவின் கோடிஸ்வரர்களின் தலைநகரமாகவும் திகழ்கிறது.

திருமண வயது

  • குழந்தை திருமணங்களை தடுக்கும் வகையில் இமாச்சலப் பிரதேசத்தில் சட்டமசோதா இயற்றப்பட்டுள்ளது.
  • பெண்களின் திருமண வயது 18லிருந்து 21ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மாசு கட்டுப்பாட்டு கப்பல்

  • கோவாவில் உள்ள வாஸ்கோ துறைமுக நகரில் உள்நாட்டில் தயாரிக்கப்ப்பட்ட சமுத்திர பிரதாப் மாசுக் கட்டுப்பாட்டு கப்பலானது துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

A.G.நூரானி

Vetri Study Center Current Affairs - AG Noorani

  • மூத்த வழக்கறிஞரும், எழுத்தாளருமான A.G.நூரானி காலமானர்.
  • ஹைதரபாத் அழிவு, சட்டப்பிரிவு 370, ஜம்மு & காஷ்மீர் வரலாறு போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார்.

கட்டாயப் பதிவு மசோதோ

  • முஸ்லீம் திருமணம், விவகாரத்து கட்டாயப் பதிவு மசோதாவினை அசாம் மாநிலம் நிறைவேற்றியுள்ளது.

வத்வான் துறைமுகம்

  • இந்தியாவின் 13வது பெரிய துறைமுகமான வத்வான் துறைமுகத்திற்கு மகாராஷ்டிரா மாநிலத்தின் பால்கரில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

பணக்காரர்கள் பட்டியல்

  • இந்திய பணக்காரர்கள் பட்டியலில் அதானி முதலிடம் பிடித்துள்ளார்.
  • 2வது இடம் – அம்பானி
  • 3வது இடம் – சிவ் நாடார்
  • 4வது இடம் – சைரஸ் பூனாவாலா

சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகம்

  • தேசிய கல்விக் கொள்கை 2020ன் கீழ் சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகம் தன்னுடைய வளாகத்தை ஹரியானவின் குருகிராமில் அமைத்துள்ளது.
  • தன் வளாகத்தை அமைத்துள்ள முதல் வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் இதுவாகும்.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு

  • பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு (SCO) நடைபெற உள்ளது.
  • Shanghai Cooperation Organisation – 15.06.2001
  • இதன் உறுப்பினர்ளாக சீனா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், உருசியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகள் உள்ளன.

ஷான்ஷன் சூறாவளி

  • சமீபத்தில் ஜப்பான் ஷான்ஷன் சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளது.

பாரா ஒலிம்பிக்

  • பாரிஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியின் 10மீ துப்பாக்கி சுடுதல் ஸ்டேண்டிங் SH1 போட்டியில் இந்தியாவின் அவனி லேகரா தங்கம் வென்றுள்ளார்.
  • இதே போட்டியில் மேனா அகர்வால் வெண்கலம் வென்றுள்ளார்.
  • 10மீ துப்பாக்கி சுடுதல் போட்டியில் மணிஷ் நர்வால் வெள்ளி வென்றுள்ளார்.
  • பெண்களுக்கான டி35 100மீ போட்டியில் ப்ரீத்தி பால் வெண்கலம் வென்றுள்ளார்.

ஃபார்முலா-4 கார்பந்தயம்

  • சென்னையில் ஃபார்முலா-4 கார் பந்தயம் இன்று தொடங்கி இரு நாட்கள் நடைபெற உள்ளது.

SAFF U20 கால்பந்து போட்டி

  • நேபாளத்தில் நடைபெற்ற SAFF U20 கால்பந்து போட்டியின் சாம்பியன் பட்டத்தினை வங்கதேசம் வென்றுள்ளது.

கார்த்திக் வெங்கட்ராமன்

Vetri Study Center Current Affairs - Karthik Venkatraman

  • 61வது தேசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கார்த்திக் வெங்கட்ராமன் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்

முக்கிய தினம்

  • மலேசியா சுதந்திர தினம் (Malaysia Independence Day)
  • சர்வதேச திமிங்கல சுறா தினம் (International Whale Shark Day) – ஆகஸ்ட் 30
  • தெலுங்கு மொழி தினம் (Telugu Language Day) – ஆகஸ்ட் 29

Related Links

Leave a Comment