Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 31st January 2024

Daily Current Affairs

Here we have updated 31st January 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

அலங்கார ஊர்தி அணிவகுப்பு

Vetri Study Center Current Affairs - Kudavolai election

75வது குடியரசு தின விழாவில் நடைபெற்ற அலங்கார ஊர்தி அணிவகுப்பு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

  1. முதலிடம் – ஒடிசா
  2. இரண்டாவது இடம் – குஜராத்
  3. மூன்றாமிடம் – தமிழ்நாடு

மக்கள் கருத்துக்கணிப்பில்

  1. முதலிடம் – குஜராத்
  2. இரண்டாவது இடம் – உத்திரப்பிரதேசம்
  3. மூன்றாமிடம் – ஆந்திரா

கலைக்குழு சார்பில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.

சத்னம் சிங் சந்து

Vetri Study Center Current Affairs - Satnam Sandhu

  • குடியரசுத்தலைவர் திரெளபதி முர்முவால் சத்னம் சிங் சந்து மாநிலங்களுவைக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

  • 250 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவைக்கு (ராஜ்யசபா) இலக்கியம், அறிவியல், விளையாட்டு, கலை மற்றும் சமூக சேவை ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் 12 உறுப்பினர்களைக், குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார்.
  • இதனைக் கூறும் விதி 80(1)

பனிசிறுத்தைகள்

  • 2019 முதல் 2023 வரையிலான கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 718 பனிச்சிறுத்தைகள் உள்ளதாக மத்திய வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.
  • இமயமலையில் 477 பனிச்சிறுத்தைகளும், உத்திரகாண்டில் 124 பனிச்சிறுத்தைகளும் உள்ளன
  • உலகளவில் 7000 பனிச்சிறுத்தைகள் உள்ளன

லாபா திட்டம் (LABHA Scheme)

Vetri Study Center Current Affairs - LABHA Scheme

  • பழங்குடியினரின் மேம்பாட்டிற்கான லாபா திட்டம் (LABHA Scheme) ஒடிசாவில் தொடங்கப்பட்டுள்ளது.
  • LABHA – Laghu Bana Jatya Drabya Kraya

ரஞ்சன் கோகோய்

  • உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியான ரஞ்சன் கோகோய்க்கு பைபவ் விருதிற்கு தேர்வாகி உள்ளார்.
  • இவ்விருது அசாம் மாநிலத்தின் உயரிய விருதாகும்.

சாரதி செயலி

  • வறுமை ஒழிப்பு திட்டமான தீன்தயாள் அந்தியோதயா திட்டத்திற்கு சாரதி என்னும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு போட்டி

Vetri Study Center Current Affairs - Khelo India Winter Games

  • ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக்கில் 4வது கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு போட்டியானது நடைபெறுகிறது.
  • இதன் இலட்சினையாக SHAN (பனிச்சிறுத்தை) தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கேலோ இந்தியா

  • பளுதூக்குதல் மகளிர் 81 கி பிரிவில் கீர்த்தனா தங்கம் வென்றுள்ளார்.
  • மகளிர் 200மீ நீச்சல் பிரிவில் ஸ்ரீநிதி நடேசன் தங்கம் வென்றுள்ளார்.
  • ஆடவர் 200மீ பேக்ஸ்ட்ரோக் நீச்சல் பிரிவில் நித்திக் நாதெல்லா தங்கம் வென்றுள்ளார்.

ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்

Vetri Study Center Current Affairs - Vaibhav Suryavanshi

  • ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்டில் வைபவ் சூர்யவன்ஷி மிக இளம் வயதில் அறிமுகமாகி (12வயது 284 நாட்கள்) என்ற சாதனையை படைத்துள்ளா்.
  • யவராஜ்சிங் 15 வயது 57 நாட்களில் அறிமுகமானது சாதனையாக இருந்து வந்தது.

சர்வதேச வரிக்குதிரைகள் தினம் (International Zebra Day)  ஜனவரி 31

Vetri Study Center Current Affairs - International Zebra Day

January 28-29 Current Affairs January 30 Current Affairs 

Related Links

Leave a Comment