Daily Current Affairs
Here we have updated 3-4th March 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தாலூகா உருவாக்கம்
- புதியதாக திருவோணம் தாலுகா உருவாக்கப்பட உள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- காவளாப்பட்டி, சில்லத்தூர், திருநெல்லூர், வங்கரை ஆகிய குறுவட்டங்களையும், 45 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கி திருவோணம் தாலுகா உருவாக உள்ளது.
- மேலும் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்கள் சீரமைக்கப்படுகிறது.
தீர்மானம் நிறைவேற்றம்
- நாகலாந்து மாநிலமானது மியான்மர் மற்றும் இந்திய எல்லையில் வாழும் பழங்குடியின மக்களை எல்லையில் அனுமதிக்கும் சுதந்திர இயக்க ஆட்சி (FMR) குறித்தும், இரு நாடுகளுக்கிடையே வேலி அமைக்கும் மத்திய அரசினை எதிர்த்தும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
- முதன் முதலில் தீர்மானம் கொண்டு வந்துள்ள மாநிலம் – மிசோரம்
- FMR – Free Moment Regiment
தொடர்புடைய செய்திகள்
- இந்தியா & மியான்மர் இடையேயான எல்லை நீளம் : 1643
- எல்லையை பகிர்ந்து கொள்ளும் மாநிலங்கள்: அருணாச்சலப்பிரதேசம், நாகலாந்து, மிசோரம், மணிப்பூர்
சுமன் குமாரி
- எல்லையோர காவல் படையின் (BSF) முதல் ஸ்னைப்பர் வீராங்கனையாக தேர்வாகியுள்ளார்.
ஹைட்ரஜன் மின்னாற்பகுப்பு
- குஜராத்தின் காசிராவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் ஹைட்ரஜன் மின்னாற்பகுப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கானா
- பிரதமரின் விவசாய காப்பீட்டு திட்டமான பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனாவில் தெலுங்கானா மீண்டும் இணைய உள்ளதாக அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
- தெலுங்கானா கடந்த 2020-ல் இத்திட்டத்திலிருந்து விலகியிருந்தது.
- பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா – 2016
அனுராக் அகர்வால்
- அனுராக் அகர்வால் பாராளுமன்ற பாதுகாப்பு தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஐடாயு கடற்படை தளம்
- இந்தியப் பெருங்கடல் பகுதியை கண்காணிக்க லட்சத்தீவிலுள்ள மினிகாய் தீவில் அமைய உள்ள புதிய ஐடாயு கடற்படை தளமானது திறக்கப்பட உள்ளது.
கடற்படையில் இணைப்பு
- நீர் மூழ்கிக் கப்பல்களை தாக்கி அழிக்கும் திறன் வாய்ந்த எம்எச் 60 ஆர் ஹீ ஹாக் (MH 60 R He Hawk) ஹெலிக்காப்டர் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது.
- இந்த ஹெலிக்காப்டர் கொச்சியின் ஐஎன்எஸ் கருடா தளத்தில் இந்திய கடற்படையில் இணைய உள்ளது.
ஷாபாஸ் ஷெரீஃப்
- பாகிஸ்தானின் 24வது பிரதமராக ஷாபாஸ் ஷெரீஃப் பதவியேற்றுள்ளார்.
துபாய் ஆடவர் டென்னிஸ் சாம்பியன் போட்டி
- பிரான்ஸ் நாட்டினைச் சேர்ந்த யுகோ ஹம்பரட் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
கேலோ இந்தியா பல்கலைக் கழக விளையாட்டு
- 4வது கேலோ இந்தியா பல்கலைக் கழக விளையாட்டு போட்டியில் சண்டிகர் பல்கலைக்கழக அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
உலக செவித்திறன் தினம் (World Hearing Day) – Mar 03
- கருப்பொருள்: Changing Mindsets: Let’s make ear and hearing care a reality for all
உலக வனவிலங்கு தினம் (World Wildlife Day) – Mar 03
- கருப்பொருள்: Connecting People and Planet: Exploring Digital
தேசிய பாதுகாப்பு தினம் (National Security Day) – Mar 04
- 04.03.1966-ல் தேசிய பாதுகாப்பு ஆணையம் (|National Safety Council) உருவாக்கப்பட்டதன் நினைவாக கொண்டாடப்படுகிறது
March 1 Current Affairs | March 2 Current Affairs