Daily Current Affairs
Here we have updated 3rd April 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
அரங்கநாதன் விருது
- இலக்கியத்தில் புகழ்பெற்றவர்களுக்காக வழங்கப்படும் விருதான அரங்கநாதன் விருது தமிழவன், திருநாவுக்கரசு போன்றோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
- இவ்விருதானது 2018 முதல் வழங்கப்பட்டு வருகிறது.
ராணுவத் தளபதிகள் மாநாடு 2025
- ராணுவத் தளபதிகள் மாநாடு 2025-ஆனது புதுதில்லியில் நடைபெற்றது.
பூனம் குப்தா
- ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கிப்லி கார்ட்டூன்கள்
- சமீபத்தில் பிரபலமாகி வரும் கிப்லி கார்ட்டூன்கள் ஜப்பான் நாட்டினை சேர்ந்ததாக கருதப்படுகிறது.
- 1985-ல் ஹயாவ் மியாசாகி, இசாவோ தகாஹாட்டா ஆகியோரால் உருவாக்கப்பட்ட ஸ்டூடியோ ஜிப்லி என்ற பெயரில் ஒரு அனிமேஷன் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இந்த கார்ட்டூன்களை உருவாக்கியுள்ளது.
ஆயுதப்படைச் சிறப்பு சட்டம்
- மணிப்பூர், நாகலாந்து, அருணாச்சலப்பிரதேசத்தில் ஆயுதப்படைகள் சிறப்பு சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
- ஆயுதப்படைச் சிறப்பு சட்டம் – 1958
வாகனம் ஓட்டுதல்
- உலக அளவில் வாகனம் ஓட்டுவதற்கு ஆபத்தான நாடுகளின் பட்டியலில் தென் ஆப்பிரிக்கா முதலிடம் பிடித்துள்ளது.
- இப்பட்டியலில் இந்தியா ஐந்தாம் இடத்தில் உள்ளது.
ஷெர்லி போட்ச்வே
- காமன்வெல்த் பொதுச் செயலாளராகப் ஷெர்லி போட்ச்வே (Shirely Botchwe) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- இப்பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள முதல் ஆப்பிரிக்க பெண் ஆவார்.
வந்தனா கட்டாரியா
- இந்திய ஹாக்கி அணியின் வீராங்கனையான வந்தனா கட்டாரியா தனது ஓய்வினை அறிவித்துள்ளார்.
அரியனா சபலென்கா
- அமெரிக்காவில் நடைபெற்ற மியாமி ஓப்பன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் அரியனா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.