Daily Current Affairs
Here we have updated 3rd December 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
மிஷன் இயற்கை (Mission Nature)
- அரசு பள்ளிகளில் சுற்றுச்சூழலை மேம்படுத்த தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
- உயர் தொழில்நுட்ப ஆய்வக வசதி கொண்ட 6,029 அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ளது.
வீராணம் ஏரி
- உலக பாரம்பரிய நீர்ப்பாசன அமைப்பின அடையாளத்தினை வீராணம் ஏரி (கடலூர் மாவட்டம்) அடைந்துள்ளது.
- இது உலக பாரம்பரிய மாநிலங்களின் வரிசையில் நீர்பாசனம் மற்றும் வடிகால் தொடர்பான சர்வதேச ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டது.
சென்னை பல்கலைக்கழகம்
- யுஜிசியின் முதல்தர அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவன தகுதியை (ஏ பிளஸ் பிளஸ்) சென்னை பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.
- தேசிய தர மதிப்பீடு அங்கீகார குழுவாது (நாக்) இந்தியாவிலுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தரத்தை அவற்றில் செயல்பாடுகளின் அடிப்படையில் இத்தகுதியை வழங்குகிறது.
அந்நிய செலாவணி
- கடந்த நவம்பர் 24-ம் தேதியுடன் இந்திய அந்நியச் செலாவணி கையிருப்பு 59,793.5 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
- இவ்வறிக்கையை ரிசர்வ் வங்கி (RBI) தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- RBI ஆளுநர் – சக்திகாந்த்
- RBI – Reserve Bank of India
- RBI தொடங்கப்பட்ட ஆண்டு – 1935
- RBI நாட்டுடமையாக்கப்பட்ட ஆண்டு – 1949
- தலைமையகம் – 1935-ல் கல்கத்தா பின் 1937-லிருந்து மும்பைக்கு மாற்றப்பட்டது
மிஷன் தக்ஷ் (Daksh)
- பள்ளி இடைநிற்றலைக் குறைக்கும் விதமாக மிஷன் தக்ஷ் திட்டத்தினை பீகார் அரசு செயல்படுத்தியுள்ளது.
- 3-8 வரையிலான வகுப்புகளில் உள்ள நலிவடைந்த மாணவர்களுக்கு சிறப்பு இந்தி, கணிதம், ஆங்கில வகுப்புகளை வழங்குவதை நோக்கமாக கொண்டு துவங்கப்பட்டது.
ஸ்கோச் தங்க விருது
- 2023-ஆம் ஆண்டுக்கான ஸ்கோச் தங்க விருதானது பவர் கிரிட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
சுகன்யான் திட்டம்
- விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் சுகன்யான் திட்டம் 2025-ல் தொடங்கப்பட உள்ளது
- இத்திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் அனைவருக்கும் பயிற்சி முடிவடைந்து தாயார் நிலையில் உள்ளார்கள் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
- 2035-க்குள் இந்தியாவிற்கான விண்வெளி மையம் அமைக்கும் பிரதமரின் கனவினை நினைவாக்க எண்ணற்ற பணிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மகளிர் இடஒதுக்கீடு சட்டம்
- மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை புதுச்சேரி, ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசங்களில் அமல்படுத்த வழிவகை செய்யும் 2 மசோதாக்களானது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
- மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவானது 2023 செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஐ.நா. பொதுச்செயலாளர் – எச்சரிக்கை
- புவி வெப்பத்தாக்கத்தால் இமயமலையில் பனிப்பாறைகள் அபாய அளவில் உருகி வருவதாக ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.
- இக்கருத்தினை துபாயில் நடைபெற்ற ஐ.நா.பருவநிலை மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
- கடந்த 30 ஆண்டுகளில் நேபாளத்தில் பனி மூடிய மலைகள் 3-ல் 1பங்கு பனியை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
- பசுமை இல்ல வாயுக்களால் ஏற்படும் மாசுபாட்டால் புவி வெப்படைந்து வருவதனால் இவ்வகை பாதிப்பு ஏற்படுகிறது.
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் (International Day of People with Disabilities) – Dec 3
- கருப்பொருள்: “United in action to rescue and achieve the SDGs for, with and by persons with disabilities”
December 1 Current Affairs | December 2 Current Affairs