Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 3rd February 2024

Daily Current Affairs

Here we have updated 3rd February 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்

  • ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர், கோபிசெட்டிபாளையம்  வட்டங்களில் 80567 ஹெக்டேர் பரப்பளவில் தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
  • தமிழகத்தில் சரணாயலங்களின் எண்ணிக்கை 18 உயர்ந்துள்ளது.

உயர்கல்வி சேர்க்கை (GER)

  • இந்தியாவில் உயர்கல்வியில் அதிக மாணவர் சேர்க்கை கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
  • தமிழ்நாடு 5வது முறையாக முதலிடம் பிடித்துள்ளது.
  • உயர்கல்வியில் அதிக மாணவர் சேர்க்கை கொண்ட யூனியன் பிரதேச பட்டியலில் சண்டிகர் முதலிடம் பிடித்துள்ளது.
  • இந்தியாவில் உயர்கல்வியில் குறைந்த மாணவர் சேர்க்கை மாநிலங்கள் பட்டியலில் அசாம் முதலிடம் பிடித்துள்ளது.
  • உயர்கல்வியில் குறைந்த மாணவர் சேர்க்கை யூனியன் பிரதேச பட்டியலில் லட்சத்தீவு முதலிடம் பிடித்துள்ளது.
  • GER – Gross Enrolment Ratio

பாரத் அரிசி

Vetri Study Center Current Affairs - Bharat Rice

  • மத்திய அரசு ரூ.29க்கு 1 கிலோ அரிசி வழங்கும் பாரத் அரிசி திட்டத்தை வெளியிட்டுள்ளது.
  • இவ்வரிசியினை இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு, இந்திய தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பு, ஒன்றிய அரசின் விற்பனை மையங்களில் பெறலாம்.

தொடர்புடைய செய்திகள்

  • பாரத் ஆட்டோ – ரூ.27.50 (ஒரு கிலோ)
  • பாரத் பருப்பு (கொண்டக்கடலை) – ரூ.60 (ஒரு கிலோ)

தலபிரா அனல் மின் திட்டம்

  • NLC-ன் தலபிரா அனல் மின் திட்டம் ஒடிசாவில் அமைய உள்ளது.
  • NLC (நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசன்) – Neyveli Liginte Corporation – 1956

புதிய நீதிபதிகள் நியமனம்

Vetri Study Center Current Affairs - Vaidyanathan

  • சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் மேகாலய உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மனிந்திர மோகன்ஸ்ரீ வஸ்தவா இராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ரிதுபாஹரி உத்தரகண்ட் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்க்கரை மானியம்

  • அந்தியோதயா குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் சர்க்கரை மானியம் மேலும் இரண்டு ஆண்டு நீடிக்கப்பட்டுள்ளது.
  • அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம் – 25.12.2000

பாரத ரத்னா விருது

Vetri Study Center Current Affairs - LK Advani

  • இந்தியாவின் முன்னாள் உள்துறை அமைச்சரான எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மக்களவையின் எதிர்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார்.

விமானப்படை போர் பயிற்சி

  • இராஜஸ்தானின், பொக்ரானில் இந்திய விமானப்படையின் போர் பயிற்சியான எக்சர்சைஸ் வாயு சக்தி 2024 நடைபெற உள்ளது.
  • கருப்பொருள்: வானிலிருந்து மின்னல் தாக்குதல்

ஒப்புதல் வழங்குதல்

Vetri Study Center Current Affairs - MQ-9B drones

  • அமெரிக்கா இந்தியாவிற்கு 31 எம்கியு-9பி (MQ-9B) ட்ரோன்களை விற்பனை செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • 31 ட்ரோன்களில் 15 கடற்படையிடமும், இராணுவம் மற்றும் விமானப்படைக்கு தலா 8 ட்ரோன்கள் வழங்கப்பட உள்ளது.

கர்நாடகம்

  • டிஜிட்டல் உலகில் அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்க டிஜிட்டல் டிடாக்ஸ் (Digital Detox) திட்டத்தினை கர்நாடக மாநிலமானது தொடங்கியுள்ளது.

பேரறிஞர் அண்ணா நினைவு தினம் – பிப்ரவரி 03

  • பிறப்பு – 15.09.1909
  • 1967-ல் மதராஸ் முதல்வர் (தமிழக முதல்வர்) பதவி வகித்துள்ளார்
  • 14.04.1969 – மெட்ராஸ் மாகாணம் என்பதை தமிழ்நாடு என பெயர் மாற்றம்
  • அண்ணாவால் செக்ரேடரியட் என்பதனை தலைமை செயலகம் என பெயர் மாற்றம்
  • சத்யமேவ ஜெயதே என்ற வார்த்தைக்கு பதிலாக வாய்மையே வெல்லும் என பெயர் மாற்றம்
  • ஸ்ரீ, ஸ்ரீமதி, குமாரி என்ற சொற்களுக்கு பதிலாக திரு, திருமதி, செல்வி எனவும் மாற்றம் செய்துள்ளார்.

February 1 Current AffairsFebruary 2 Current Affairs 

Related Links

Leave a Comment