Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 3rd January 2024

Daily Current Affairs

Here we have updated 3rd January 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

புத்தக கண்காட்சி

Vetri Study Center Current Affairs - Chennai Book Fair

  • ஜனவரி 3-21 வரை பபாசி சார்பில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ள 47வது சென்னை புத்தக கண்காட்சி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைக்கிறார்.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு

  • ஜனவரி 7,8 தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
  • ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் இலக்கை கொண்டு நடைபெறுகிறது.

பாலிடெக்னிக் & பிஎச்.டி மாணவர் சேர்க்கை

  • இந்தியாவில் பாலிடெக்னிக் & பிஎச்.டி மாணவர்கள் சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது

மெட்டெக் மித்ரா (Medtech Mitra)

Vetri Study Center Current Affairs - Medtech Mitra

  • மருத்துவ தொழில் நுட்ப கண்டுபிடிப்பாளர்களை கண்டுபிடிக்கவும் சுகாதார நலத்தீர்வுகளை மேம்படுத்தவும் மெட்டெக் மித்ரா (Med Tech Mitra) வலைதளமும், செயலியும் தொடங்கப்பட்டுள்ளது.
  • சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்கம் சார்பில் அறிமுகம் செய்யப்படுகிறது.

தலை சிறந்த கல்லூரி, பல்கலைக்கழகங்கள்

  • இந்தியாவின் தலை சிறந்த 100 கலை அறிவியல் கல்லூரிகளில் 35 தமிழகத்தில் உள்ளன
  • இந்தியாவின் தலை சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 22 தமிழகத்தில் உள்ளன.
  • இந்தியாவின் தலை சிறந்த 100 பொறியியல் கல்லூரிகளில் 15 தமிழகத்தில் உள்ளன.

தேசிய தரவரிசைப்பட்டியல்

  • 2022, 2023ஆம் ஆண்டுகளுக்கான தேசிய தரவரிசைப் பட்டியிலில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.

எம்.எஸ்.சுவாமிநாதன் விருது

Vetri Study Center Current Affairs - PR Kamboj

  • பி.ஆர்.கம்போஜ் என்பவருக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் விருது வழங்கப்பட்டுள்ளது.
  • செளத்ரி சரண்சிங் ஹரியானா வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக செயல்படுகிறார்

இந்தியாவின் பெட்ரோலிய தலைநகரம்

  • இந்தியாவின் பெட்ரோலிய தலைநகரமாக குஜராத் மாறியுள்ளது.

இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு நகரம்

  • இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு நகரமாக உத்திரபிரதேசத்தின் லக்னோ அமைய உள்ளது.

இந்திய பெருங்கடல் கடற்படை கருத்தரங்கம்

  • இந்திய பெருங்கடல் கடற்படை கருத்தரங்கத்தின் 8வது தலைவர்கள் கூட்டத்தின் தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடத்தப்பட்டது.

புதிய விமான முனையம் திறப்பு

  • திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் கட்டப்பட்ட புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்.
  • ரூ.1,112 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
  • மேலும் 20,140 கோடி செலவிலான திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டியுள்ளார்.

நீதிபதி சஞ்சீவ் கண்ணா

Vetri Study Center Current Affairs - Sanjiv Khanna

  • தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் நிர்வாக தலைவராக நீதிபதி சஞ்சீவ் கண்ணா நியமிக்கப்பட்டுள்ளார்.

சைனிக் பள்ளி

  • இந்தியாவின் முதல் அனைத்து பெண்கள் சைனிக் பள்ளி உத்திரபிரதேசம் விருந்தாவனில் தொடங்கப்பட்டுள்ளது.
  • சைனிக் பள்ளி – இராணுவம், கடற்படையில் சேர்வதற்கான பயிற்சி அளிக்கும் பள்ளி
  • 1961-ல் பாதுகாப்புத்துறை அமைச்சராக பணியாற்றிய கிருஷ்ணன் மேனன் எனபவர் சைனிக் பள்ளி என்ற  யோசனையை கொண்டு வந்தார்.

ஹிட் அண்ட் ரன் வழக்கு

Vetri Study Center Current Affairs - Hit and Run

  • புதிதாக நிறைவேற்றப்பட்ட பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் ஹிட் அண்ட் ரன் (Hit and Run) வழக்கிற்கு வழங்கப்பட்ட தண்டணையை எதிர்த்து லாரி, கார், பேருந்து ஓட்டுநர்கள் பேராட்டம் நடத்துகின்றன.
  • Hit and Run வழக்கில் தண்டணையாக 10 ஆண்டுகள் சிறையும், 7 லட்சம் அபதாரமும் வழங்கபட உள்ளது.
  • பழைய சட்டமான IPC-1860 (Indian Penal Code-1860)-யின் படி 2 ஆண்டுகள் சிறை தண்டணை வழங்கப்பட்டு வந்தது.

ஹைதரபாத் விமான நிலையம்

  • கடந்த ஆண்டு சர்வதேச அளவில் சரியான நேரத்தில் இயக்கப்படும் முதல் 10 விமான நிலையங்களின் பட்டியலில் ஹைதராபாத் விமான நிலையம் (தெலுங்கானா) இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
  • முதலிடம் – மினியாபொலிஸ் செயின்ட் பால் சர்வதேச விமான நிலையம் (அமெரிக்கா)
  • மூன்றாவது இடம் – பெங்களூர் விமான நிலையம் (கர்நாடகம்)

பவர் கிரிட் தலைவர்

Vetri Study Center Current Affairs - Ravindra Kumar Tyagi

  • ரவீந்திர குமார் தியாகி பவர் கிரிட் நிறுவனத்தின்  (Power Grid Corporation) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்

புதிய அதிபர்

Vetri Study Center Current Affairs - Felix Tshisekedi

  • காங்காே ஜனநாயகக் குடியரசின் அதிபாராக மீண்டும் பெலிக்ஸ் சிசெகெடி (Felix Tshisekedi) தேர்வாகியுள்ளார்

January 1 Current Affairs | January 2 Current Affairs

Related Links

Leave a Comment