Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 4th April 2025

Daily Current Affairs 

Here we have updated 4th April 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தீர்மானம் நிறைவேற்றம்

  • அண்மையில் தமிழக சட்டப்பேரவையில் கட்சத்தீவினை திரும்ப பெற தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.
  • 1974-ல் பால்க் ஜலசந்தியில் காணப்படும் கட்சத்தீவினை நடுவண் அரசானது இலங்கைக்கு தாரை வார்த்தது.

கிக் தொழிலாளர்கள்

  • சென்னை மாநகராட்சியானது கிக் தொழிலாளர்களுக்காக குளிரூட்டப்பட்ட ஓய்வறைகளை அமைக்க உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • கிக் தொழிலாளர்கள் நலவாரியம் முதன் முதலில் அமைத்துள்ள மாநிலம் – தமிழ்நாடு

நினைவகம்

  • மூக்கையா தேவருக்கு நினைவகமானது மதுரையின் உசிலம்பட்டியில் அமைய உள்ளது.

இவரைப் பற்றிய சில செய்திகள்

  • 1963 – அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சி துணைத்தலைவர்
  • 1971 – அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சி தலைவர்
  • சட்டமன்ற உறுப்பினர் (உசிலம்பட்டி தொகுதி) – 1957, 1962, 1967, 1971, 1977
  • நாடாளுமன்ற உறுப்பினர் – இராமநாதபுரம் தொகுதி

தொடர்புடைய செய்திகள்

  • சமூக நீதி போராளி நினைவகம் – வழுதப்பட்டி (விழுப்புரம்)

சிலை அமைத்தல்

Vetri Study Center Current Affairs - Karl Marx

  • சென்னையில் கார்ல் மார்க்ஸ் சிலை நிறுவப்பட உள்ளது.

கயல் திட்டம்

  • மீன் உணவு பொருட்களை நியாயமான விலையில் வாங்குவதற்காக கயல் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
  • நேரடி கொள்முதல், தரம் மற்றும் பாதுகாப்பு சான்று ஆகியவற்றை உள்ளடக்கி தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகம் சார்பில் தொடங்கப்பட உள்ளது.

அலைகள் திட்டம்

  • மீனவ மகளிரின் பொருளாதார மேம்பாட்டிற்கு கடன் வழங்குவதற்காக அலைகள் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • வெண்நிதி திட்டம் – பால் உற்பத்தியாளர்களுக்கு கடன் வழங்கும் திட்டம்

கமல்ஹாசன்

  • FICCIஇன் ஊடக மற்றும் பொழுதுபோக்கு குழுவின் தெற்குத் தலைவராக கமல்ஹாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

புவிசார் குறியீடு

Vetri Study Center Current Affairs - GI TAG

  • தமிழகத்தில் மேலும் 6 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
  • இதன் மூலம் தமிழ்நாட்டில் புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்ற பொருள்களின் எண்ணிக்கை 69ஆக உயர்ந்துள்ளது.
  • புவிசார் குறியீடு பட்டியலில் உத்திரப்பிரதேசம் முதலிடமும், தமிழ்நாடு இரண்டாமிடமும் பிடித்துள்ளன.

தற்போது புவிசார் குறியீடு பெற்றுள்ள பொருட்கள்

  • செட்டிகுளம் சின்ன வெங்காயம்
  • பண்ருட்டி பலாப்பழம்
  • பண்ருட்டி முந்திரி
  • புளியங்குடி எலுமிச்சை
  • விருதுநகர் சம்பா வத்தல்
  • ராமநாதபுரம் சித்திரை கார் அரிசி

முக்கிய தினம்

  • சர்வதேச கேரட் தினம் (International Carrot Day) – ஏப்ரல் 4

Related Links

Leave a Comment