Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 4th January 2024

Daily Current Affairs

Here we have updated 4th January 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது

  • சென்னை, நந்தனத்தில் நடைபெற்ற 47வது சென்னைப் புத்தகக் காட்சியில் 6 பேருக்கு கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருதானது வழங்கப்பட்டுள்ளது.
    1. பேரா.ஆ.சிவசுப்பிரமணியன்
    2. உமா மகேஸ்வரி
    3. தமிழ்மகன்
    4. அழகிய பெரியவன்
    5. வேலு சரவணன்
    6. மயிலை பாலு

தொடர்புடைய செய்திகள்

  • கலைச்செம்மல் விருது – ஒவிய கலைஞர்கள் மற்றும் சிற்ப கலைஞர்கள் சிறந்து விளங்கியவர்களுக்கு வழங்கப்படுகிறது.

அரசிதழில் வெளியீடு

  • தமிழக அரசானது சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி கன்னியாகுமாரி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களை வெள்ளம் பாதித்த மாவட்டங்களாக அறிவித்து அரசிதழில் வெளியிட்டுள்ளது.

TNEB Safety செயலி

  • மின்சார வாரிய ஊழியர்களைப் பாதுகாக்க தமிழக அரசு சார்பில் TNEB Safety செயலியானது உருவாக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை

Vetri Study Center Current Affairs - Mayiladuthurai district

  • பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதியில் மயிலாடுதுறை மாவட்டம் சேர்க்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
  • ஏற்கனவே தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்ட பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • வேளாண் மண்டலம் அறிவிக்கப்பட்டதனால் அங்கு வேளாண் சார்ந்த திட்டங்கள் மட்டுமே செயல்படுத்த முடியும்.

பிரிவால் (Prevall)

Vetri Study Center Current Affairs - Pervall

  • இந்தியாவில் இரத்த புற்றுநோய்க்கான முதல் வாய் வழி மருந்தான பரிவால் என்ற மருந்து கண்டறியப்பட்டுள்ளது.
  • இம்மருந்தினை டாடா மெமோரியல் மருத்துவமனை கண்டுபிடித்துள்ளது.

K-Smart செயலி

Vetri Study Center Current Affairs - K-Smart

  • கேரள அரசு பிறப்பு, இறப்பு போன்ற சில சான்றிதழ்களை பெற K-Smart செயலியை அறிமுகம் செய்துள்ளது.

ராஜஸ்தான்

  • ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் நகரில் மாநில காவல் துறை  தலைவர்கள் (டிஜிபி), ஐஜிக்கள் மாநாடு நடைபெற்றுள்ளது.

ஜம்மு & காஷ்மீர்

  • பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டத்தினை செயல்படுத்திய யூனியன் பிரதேசமாக ஜம்மு & காஷ்மீர் திகழ்கிறது.
  • விஸ்வகர்மா திட்டம் – 17.09.2023

குடிநீர் இணைப்பு

  • இந்தியாவின் கிராமப்புற பகுதியில் 5.33 கோடி வீடுகளில் குடிநீர் இணைப்பு இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 2023 டிசம்பர் நிலவரப்படி 72.29% கிராமங்களில் குடிநீர் இணைப்பானது வழங்கப்பட்டுள்ளது.
  • புதுச்சேரி, தெலுங்கானா, குஜராத், கோவா, அந்தமான் நிக்கோபர், தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ, ஹரியானா, பஞ்சாப், ஹிமாச்சலப்பிரதேசம் ஆகியவை 100% குடிநீர் இணைப்பு பெற்றுள்ளன.
  • மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்கள் குடிநீர் இணைப்பு பெறுவதில் பின் தங்கியுள்ளன.
  • தமிழ்நாட்டில் 78.5% குடிநீர் இணைப்பு வழங்கப் பெற்றுள்ளன.

திட்டங்கள் தொடக்கம்

  • கொச்சி – இலட்சத்தீவு இடையே கடலுக்கடியில் கண்ணாடி இழை கேபிள் இணைப்பு திட்டத்தினை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.
  • கட்மாட் பகுதியில் உருவாக்கப்பட்ட கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தினையும் தொடங்கி வைத்துள்ளார்.

லூசி ட்ரோன் (LUCY)

  • பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களை ஒலியை கொண்டு கண்டறியும் விதமாக ஜெர்மெனி நாடானது லூசி என்ற ட்ரோனினை கண்டறிந்துள்ளது.
  • LUCY – Listening System Using a Crow’s nest arraY

பிரிக்ஸ் கூட்டமைப்பு

  • பிரிக்ஸ் உச்சி மாநாடு 2024-ல் ரஷ்யாவில் நடைபெற உள்ளது.
  • பிரிக்ஸ் கூட்டமைப்பில் புதிதாக 5 நாடுகள் இணைந்துள்ளன.
  • எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவூதி அரேபியோ, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் ஆகும்.
  • 2006-ல் பிரிக் (BRIC) கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் இருந்துள்ளன.
  • 2010-ல் இக்கூட்டமைப்பில் தென்னாப்பிரிக்கா உறுப்பு நாடாக இணைந்தால் பிரிக்ஸ் (BRICS) என மறுபெயரிடப்பட்டது.

அபுதாபி

  • 14.02.2024-ல் அபுதாபில் அமைக்கப்பட்ட முதல் இந்துக்கோயில் திறக்கப்பட உள்ளது.
  • இக்கோயிலுக்கு BAPS இந்து கோவில் என பெயரிடப்பட்டுள்ளது.

பச்சை ஹனி கிரிப்பர் பறவை

Vetri Study Center Current Affairs - Green honeycreeper

  •  பாதி ஆண், பாதி பெண் குணாதியங்கள் கலந்த பச்சை ஹனி கிரிப்பர் பறவை கேமராவில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

நதியா கால்வினோ

Vetri Study Center Current Affairs - inister Nadia Calvino

  • ஐரோப்பிய மூதலீட்டு வங்கியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இவ்வங்கியின் முதல் பெண் தலைவர் ஆவார்.

இளவரசர் ஃபிரடெரிக்

  • டென்மார்க்கின் அடுத்த மன்னராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உலக பிரெய்லி தினம் (World Braille Day) – Jan 4

Vetri Study Center Current Affairs - World Braille Day

  • கருப்பொருள்: “Empowering Through Inclusion and Diversity”

உலக ஹிப்னாடிசம் தினம் (World Hypnotism Day) – Jan 4

Vetri Study Center Current Affairs - World Hypnotism Day

  • கருப்பொருள்: “Discovering Tranquility: Unveiling the power of Hypnotic Wellness”

January 2 Current Affairs | January 3 Current Affairs

Related Links

Leave a Comment