Daily Current Affairs
Here we have updated 4th November 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
ஷிவ் நாடார்
- 2023-ம் ஆண்டின் இந்திய நன்கொடையாளர் பட்டியிலில் HCL நிறுவனர் ஷிவ் நாடார் முதலிடம் பிடித்துள்ளார்.
- 2வது இடம் அசிம்பிரேம்ஜி, 3வது இடம் – முகேஷ் அம்பானி ஆகியோர் பிடித்துள்ளன.
- ஹுருன் இந்தியா நிறுவனம் இப்பபட்டியலை வெளியிட்டுள்ளது.
உயரிய குடிமை விருது
- எழுத்தாளர் டி.பத்மநாபன் கேரளாவின் உயரிய குடிமை விருதான கேரள ஜோதி விருதுக்கு தேர்வாகியுள்ளார்.
- உயரிய குடிமை விருது – 2021
தமிழ்நாடு எண்மமயமாக்கல் வியூக ஆவணம்
- பொதுமக்களுக்கான கணினிவழிச் சேவைகளை திறம்பட வழங்க தமிழ்நாடு எண்மமயமாக்கல் வியூக ஆவணத்தினை தமிழக முதல்வர் வெளியிட்டுள்ளார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
- இந்தியா முழுவதும் கல்வி, கல்லூரி மாணக்கர்களுக்கு தேர்தல் பற்றிய விழிப்புணர்வு கொண்டு செல்ல தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய கல்வி அமைச்சகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
- மேல்நிலைப்பள்ளிகளில் ஜனநாயக அறைகளும், பாடப்புத்தகத்தில் தேர்தல் விழிப்புணர்வு குறித்த பாடங்களையும் NCERT வெளியிட உள்ளது.
எரிசக்தி திறன் செயல் திட்டம்
- 2023-ம் ஆண்டிற்குள் எரிசக்தி சேமிப்பை மேம்படுத்த எரிசக்தி திறன் செயல் திட்டத்தினை கேரள அரசு வெளியிட்டுள்ளது.
தேர்தல் நிதிப் பத்திரங்கள்
- அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் நிறுவனங்கள் பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் தேர்தல் நிதிப் பத்திரங்களை பெற்று கொண்டு நிதி அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டள்ளது.
- தேர்தல் நிதிப்பத்திரம் – 02.08.2018
ஆபரேஷன் சேஷா
- மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் ஆபரேஷன் சேஷாவின் (Operation Sesha) 4வது கட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார்.
- சிவப்பு மணல் உள்ளிட்ட மரங்களின் சட்டவிரோதமான வர்த்தககத்தை தடுப்பதற்காக தொடங்கப்பட்ட திட்டமாகும்.
- 2015-ல் முதன் முதலாக இத்திட்டமானது தொடங்கப்பட்டது.
கோவா கடல்சார் மாநாடு (GMC)
- இந்திய கடற்படையால் கோவா கடல் சார் மாநாட்டின் நான்காவது பதிப்பானது நடத்தப்பட்டுள்ளது.
நூல் வெளியீடு
- ரகுராம்ராஜன் (இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர்), ரோஹித் லம்பா (பொருளாதார நிபுணர்) இவருவரும் சேர்ந்து எழுதிய Breaking the Mould : Reimaging India’s Economcic Future என்னும் நூலானது டிசம்பர் மாதம் வெளியிடப்பட உள்ளது.
முகமது ஷமி
- உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரராக அதிக விக்கெட்டுகளை (45) வீழ்த்தி முகமது சமி சாதனை படைத்துள்ளார்
- 2015, 2019, 2023-ஆம் ஆண்டுகளுக்கான உலககோப்பை போட்டிகளில் பங்கேற்று இச்சாதனையை புரிந்துள்ளார்.
November 2 Current Affairs | November 3 Current Affairs