Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 04th October 2023

Daily Current Affairs

Here we have updated 04th October  2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

மாவட்ட ஆட்சியர்கள், வனத்துறை அமைச்சர்கள் மாநாடு

Vetri Study Center Current Affairs - District Collectors, Forest Ministers Conference

  • தமிழக முதல்வர் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், வனத்துறை அமைச்சர்கள் மாநாடு சென்னையில் நடைபெற்றது.
  • இவ்விழாவில் தீபக் ஜேக்கப் (தஞ்சாவூர்), ஆர்.வி. சஜீவனா (தேனி), பி.என்.ஸ்ரீதர் (கன்னியாகுமரி) ஆகியோருக்கு பசுமை விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
  • எஸ்.ஆனந்த் (ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர்), பகான் ஜெகதீஸ் (ராமநாதபுரம் வன உயிரின காப்பாளர்), எம்.இளையராஜா (கன்னியாகுமரி வன உயிரின காப்பாளர்) ஆகியோருக்கு வன மேலாண்மை விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
  • தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சனுக்கு முதலமைச்சர் விருதானது வழங்கப்பட்டுள்ளது.

சமத்துவ சிலை

Vetri Study Center Current Affairs - ambedkar Statue

  • அக்டோபர் 14-ல் அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தின் அக்கோகீக் நகரில் அம்பேத்கர் சர்வதேச மையம் திறக்கப்பட உள்ளது.
  • அம்பேத்கர் சர்வதேச மையத்தில் 19 அடி உயர அம்பேத்கர் சிலையானது  சமத்துவ சிலையாக நிறுவப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • இந்தியாவின் மிக உயரமான அம்பேத்கர் சிலை தெலுங்கானா, ஹைதரபாத்தில் அமைக்கப்பட்டுள்ளது .
  • உலகின் மிக உயர்ந்த சிலையான சர்தார் வல்லபாய் படேல் சிலை (182மீ உயரம் – ஒற்றுமைக்கான சிலை) குஜராத், கெவடியா நகரில் அமைக்கப்பட்டுள்ளது
  • ஹைதரபாத்தில் இராமானுஜர் சிலை (சமத்துவ சிலை) அமைக்கப்பட்டுள்ளது
  • பெங்களூருவில் கெம்பே கெளடா சிலை (வளமையின் சிலை) அமைக்கப்பட்டுள்ளது
  • மகாராஷ்டிராவின் லத்தூரில் அம்பேத்கர் சிலை (அறிவின் சிலை) அமைக்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசு (இயற்பியல்)

Vetri Study Center Current Affairs - Nobel Prize in Physics awarded

  • அணுக்களின் எலக்ட்ரான்களிள் இயக்கத்தை பற்றி ஆராய்ச்சியில் புதிய வழிமுறையை கண்டுபிடித்தற்கா ஒஹையோ பல்கலைக்கழகப் பேராசியர் பியர் அகஸ்டினி (பிரான்ஸ்), லுண்ட் பல்கலைக் கழக அணு இயற்பியல் துறை பேராசிரியர் ஆன்லூலியேர் (பிரான்ஸ்),  ஜெர்மெனியின் மேக்ஸ் ப்ளாங்க இன்ஸ்டிடியூர் பேராசிரியர் ஃபெரென்ஸ் க்ரெளஸ் (ஹங்கேரி) ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது

தொடர்புடைய செய்திகள்

  • மருத்துவத்திற்கான நோபல் பரிசு கரோனா பாதிப்புக்கு எதிராக திறன்மிக்க எம்ஆர்என்ஏ (MRNA) தடுப்பூசியை உருவாக்க உதவியதற்காக கேத்தின் கரிக்கோ, ட்ரூ வைஸ்மேன் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்

Vetri Study Center Current Affairs - Armenia

  • ஆர்மீனியா நாடனாது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இணைய அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றப்பட்டுள்ளது.

சச்சின் டெண்டுல்கர்

Vetri Study Center Current Affairs - Sachin Tendulkar

  • 13வது ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியானது இந்தியாவில் நடைபெற உள்ளது.
  • உலககோப்பை கிரிக்கெட் போட்டியின் உலக தூதராக சச்சின் டெண்டுல்கரை ஐசிசி (ICC) நியமித்துள்ளது.
  • ICC – International Cricket Council

தொடர்புடைய செய்திகள்

  • ஸ்வராஜ் டிராக்டரிகளுக்கான (Swaraj Tractors) தூதராக (Ambassador) மகேந்திரசிங் தோனி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) தேசிய தூதராக சச்சின் டெண்டுல்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • பாரத் பெட்ரோலியம் கார்பரேசன் லிமிடெட்-ன் ( BPCL) பிராண்ட் அம்பாசிடராக ராகுல் டிராவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளையின் விளம்பர தூதராக  மகேந்திர சிங் தோனி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • திரிபுரா மாநில சுற்றுலாத்துறையின் தூதராக  சவுரவ் கங்குலி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஆசிய விளையாட்டு

Vetri Study Center Current Affairs - Asian Games

  • சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டியில் தடகள 5000மீ மகளிர் ஸ்டீபிள் பிரிவில் பாருல் செளதரி தங்கப் பதக்கம் வென்றுள்ளார். (இப்பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை)
  • மகளிர் ஈட்டி எறிதலில் அன்னு ராணி தங்கப் பதக்கம் வென்றுள்ளார். (இப்பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை)
  • ஆடவர் 800 மீ ஓட்டத்தில் முகமது அஃப்சல் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
  • ஆடவர் மும்முறை தாண்டுதலில் தமிழ்நாட்டின் பிரவின் சித்ரவேல் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
  • மகளிர் 400மீ தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழ்நாட்டின் வித்யா ராம்ராஜ் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
  • கேனோ ஆடவர் இரட்டையர் 800 மீ பிரிவில் அர்ஜீன் சிங், சுனில் சிங் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
  • கேனோ ஆடவர் இரட்டையர் 800 மீ அர்ஜீன் சிங், சுனில் சிங் வெண்கலம் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர்.
    குத்துச்சண்டை மகளிர் 54 கிலோ பிரிவில் அர்ஜீன் சிங், சுனில் சிங் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
  • குத்துச்சண்டை ஆடவர் +92 கிலோ பிரிவில் நரேந்தர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

உலக விண்வெளி வாரம் (World Space Week)Oct 04 – Oct 10

Vetri Study Center Current Affairs - World Space Week

  • கருப்பொருள்: “Space and Entrepreneurship”

உலக விலங்குகள் தினம் (World Animal Day)Oct 04

Vetri Study Center Current Affairs - World Animal Day

  • கருப்பொருள்: “Great or Small Love them All”

 

October 01 Current Affairs | October 02 Current Affairs

Leave a Comment