Daily Current Affairs
Here we have updated 4th September 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
மாநில நல்லாசிரியர் விருது
- மாநில நல்லாசிரியர் விருதுக்கு 386 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
- தேசிய ஆசிரியர் தினம் செப்டம்பர் 05-ல் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தில் மாநில நல்லாசிரியர் விருதானது வழங்கப்பட உள்ளது.
தேசிய நல்லாசிரியர் விருது
- தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்திலிருந்து 4 பேர் தேர்வாகியுள்ளன.
- நாடு முழுவதும் 75 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தேர்வான தமிழக ஆசிரியர்கள் | |
1. டி. காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் | அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி – அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் |
2. எஸ். மாலதி | அரசு மேல்நிலைப் பள்ளி – வீரகேளம்புதூர், தென்காசி மாவட்டம் |
3. முனைவர் எஸ்.பிருந்தா | பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரி, கோவை மாவட்டம் |
4. எஸ். சித்திரகுமார் | திண்டுக்கல் குள்ளம்பட்டி அரசு மகளிர் தொழிலக பயிற்சி நிறுவன உதவி பயிற்சி அதிகாரி |
தொடர்புடைய செய்திகள்
- தமிழக அரசின் தகைசால் தமிழர் விருது கி.வீரமணி வழங்கப்பட்டுள்ளது.
- கல்பனா சாவ்லா விருதானது நா.முத்தமிழ் செல்விக்கு (எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் தமிழ் பெண்) வழங்கப்பட்டுள்ளது
- ஏ.பி.ஜே. அப்துல்கலாம் விருதானது வசந்தா கந்தசாமிக்கு (வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழக கணினி துறை பேராசிரியர்) வழங்கப்பட்டுள்ளது
கேரளா முன்னிலை
- விவசாயிகளுக்கான மத்திய அரசின் கெளரவ நிதி உதவித் திட்டதின் கீழ் 14-ஆவது தவணைத் தொகையில் கேரளம் 23.40 லட்சம் பயனாளிகளை பெற்று தமிழகத்தை (20.95 லட்சம்) விட முன்னிலை வகிக்கிறது.
நடராஜர் சிலை
- தில்லி பிரகதி மைதானத்திலுள்ள பாரத் மண்படத்தில் உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலையானது அமைய உள்ளது.
- கும்பகோணத்தில் சுவாமி மலையில் 28அடி உயரம், 21 அடி அகலம், 18டன் எடையுன் உருவாக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- மதுரையில் டி.எம்.செளந்தரராஜன் சிலையானது திறக்கப்பட்டுள்ளது.
- தமிழ் எழுத்துக்களால் ஆன வள்ளுவர் சிலையானது கோவையில் திறக்கப்பட்டுள்ளது
- 01.01.2000-ல் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையானது திறக்கப்பட்டது.
ஜி20 உச்சி மாநாடு
- செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் ஜி20 உச்சி மாநாடானது தில்லியில் நடைபெற உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- 2022 ஆண்டுக்கான னை ஏற்றது
- ஆண்டுக்கான ஜி20-யின் தலைமை பொறுப்பினை ஏற்று உள்ளது.
- ஆண்டுக்கான ஜி20-யின் தலைமை பொறுப்பினை ஏற்க உள்ளது.
ஜி20-யின் தலைமை பொறுப்பு | |
2022 | இந்தோனேஷியா |
2023 | இந்தியா |
2024 | பிரேசில் |
- ஜி20 என்பது 19 நாடுகளும் ஒரு யூரோப்பிய யூனியனும் சேர்ந்து 26.09.1999-ல் தொடங்கப்பட்ட அமைப்பாகும்.
ஜி20 மாநாட்டிற்கான 2023-ம் ஆண்டிற்கான கருப்பொருளாக One Earth One Family One Future என்பதாக கொடுக்கப்பட்டள்ளது.
விரைவு சக்தி திட்டம்
- நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் திட்டங்களுக்கான திட்டமிடலுக்கும், அமல்படுத்துவதற்கும் பிரதமர் விரைவு சக்தி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
ஐ.நா. பொது சபை
- செப்டம்பர் 5 ஐ.நா. பொது சபையின் 78வது ஆண்டுக் கூட்டம் நடைபெற உள்ளது.
- 26.06.1945-ல் ஐநா பொது சபை அமைப்பானது உருவாக்கப்பட்டது.
- இதன் பொதுச் செயலாளராக அன்டோனியோ குட்டரெஸ் பதவி வகிக்கிறார்
சர்மாட் ரக ஏவுகணை (Sarmar Nuclear Missile)
- கண்டம் விட்டு கண்டம் தாக்கும் சர்மாட் ரக ஏவுகணைகள் ரஷ்ய ராணுவத்தில் ஆர்-36 ரக ஐசிபிஎம் ஏவுகணைகளுக்கு மாற்றாக இணைக்கப்பட்டுள்ளது.
முருகப்பா தங்ககோப்பை ஹாக்கிப் போட்டி
- 94வது எம்சிசி முருகப்பா தங்ககோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்தியன் இரயில்வே சாம்பியன் பட்டம் வென்றது.
டியூரண்ட் கோப்பை கால்பந்து போட்டி
- கல்கத்தாவில் நடைபெற்ற டியூரண்ட் கோப்பை கால்பந்து போட்டியின் 132வது எடிசனில் மோகன் பகான் சூப்பர் ஜயனட் அணி சாம்பியன் ஆகியுள்ளது.
ஹீத் ஸ்ட்ரீக் (Heath streak)
- ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், பயிற்சியாளர் ஹீத் ஸ்ட்ரீக் காலமானார்.
கூடுதல் செய்திகள்
- 05.08.2019-ல் அரசமைப்பு சட்டம் 370-ஆவது பிரிவின் கீழ் ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தானது ரத்து செய்யப்பட்டது.