Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 4th September 2024

Daily Current Affairs

Here we have updated 4th September 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

உயர்வுக்கு படி-2024

  • பிளஸ் 2 தேர்வுக்கு செல்லாமல் தோல்வியடைந்த அல்லது தேர்ச்சி பெற்று உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணாக்கர்களுக்காக உயர்வுக்கு படி-2024 திட்டம் தொடங்கப்பட உள்ளது.
  • இத்திட்டமானது நான் முதல்வன் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது.

ஒருநபர் குழு

  • கள்ளக்குறிச்சி கள்ளச்சாரயம் தொடர்பான விசாரணைக்கு ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • கே.சந்துரு ஒருநபர் குழு – ஜாதிய பாகுபாடுகளை களைய ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • திருப்புகழ் குழு – வெள்ளத் தடுப்பு திட்டங்களுக்காக அமைக்கப்பட்ட குழு

மரண தண்டனை

  • பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கும் சட்டத்தை மேற்கு வங்க மாநிலம் இயற்றியுள்ளது.

பதவிக்காலம்

  • 23வது சட்ட ஆணையத்தின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகளாக உள்ளது.
  • இந்த சட்ட ஆணையம் 1 செப்டம்பர் 2024 முதல் 31 ஆகஸட் 2027 வரை செயல்படும்.

குறைகடத்தி ஆலை

  • இந்தியாவில் புதிய குறைக்கடத்தி ஆலை குஜராத்தில் நிறுவப்பட உள்ளது.

வருணா பயிற்சி

Vetri Study Center Current Affairs - Joint Naval Exercise Varuna

  • மத்திய தரைகடல் பகுதியில் இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையேயான கடற்படை பயிற்சியானது வருணா பயிற்சி என்ற பெயரில் நடத்தப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

  • போங்கோசாகர் – இந்தியா & பங்களாதேஷ் இடையேயான கூட்டு கடற்படை பயிற்சி
  • சமுத்ரா லக்ஸ்மனா – இந்தியா & மலேசியா இடையேயான கூட்டு கடற்படை பயிற்சி

புதுதில்லி

  • மாவட்ட நீதித்துறையின் தேசிய மாநாடு புதுதில்லியில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்திகள்

  • 233 – மாவட்ட நீதிபதி நியமனம்

ராமன் மகசேசே விருது 2024

  • ஆசியாவின் நோபல் பரிசு என அழைக்கப்படும் ராமன் மகசேசே விருது 2024 ஹயவோ மியாசாகிக்கு வழங்கப்பட்டுள்ளது.

பெய்ஜிங்

  • சீனா-ஆப்பிரிக்கா ஒத்துழைப்பு பற்றிய கருத்துகளம் பெய்ஜிங் நகரில் நடைபெற்றது.

பாராலிம்பிக்

Vetri Study Center Current Affairs - mariyappan thangavelu

  • பேட்மிண்டன் (பெண்கள் பிரிவு) – நித்தியஸ்ரீ சிவன் (தமிழ்நாடு) –  வெண்கலம்
  • பேட்மிண்டன் (பெண்கள் பிரிவு) – சுகாஸ் யதிராஜ் –  வெள்ளி
  • வில்வித்தை (கலப்பு அணி) – ராகேஷ் குமார், ஷீத்தல் தேவி – வெண்கலம்
  • உயரம் தாண்டுதல் – மாரியப்பன் தங்கவேலு (தமிழ்நாடு) – வெண்கலம்
  • ஈட்டி எறிதல் (F48 பிரிவு) – அஜித் சிங் – வெள்ளி
  • ஈட்டி எறிதல் (F48 பிரிவு) – சுந்தர் குர்ஜார் – வெண்கலம்
  • 100 மீ டி20 – தீப்தி ஜீவன்ஜி – வெண்கலம்

Related Links

Leave a Comment