Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 5th and 6th January

Daily Current Affairs

Here we have updated 5th and 6th January 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

கன்னியாகுமரி

  • தமிழ்நாடு பல்லுயிர் அருங்காட்சியம் மற்றும் பாதுகாப்பு மையம் கன்னியாகுமரியில் அமைக்கப்பட உள்ளது.

நூற்றாண்டு விழா

  • சிந்து சமவெளி நாகரிக (IVC) நூற்றாண்டு சர்வதேச மாநாடு சென்னையில் நடைபெற்றது.

முழு உருவ சிலை

Vetri Study Center Current Affairs - John Marshall

  • சிந்து சமவெளி நாகரிக வரலாற்றின் ஆய்விற்கு காரணமான சர் ஜான் மார்ஷல்-க்கு சென்னை அருங்காட்சியகத்தில் முழு உருவ சிலை நிறுவப்பட உள்ளது.

சி.டி.செல்வம்

  • தமிழகத்தின் 5வது காவல் ஆணையத்தின் தலைவராக சி.டி.செல்வம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • காவல்துறையில் மாற்றங்களை உருவாக்கவும், குறைகளை களையவும் உருவக்கப்பட்டது.

விருதுகள்

அண்ணல் அம்பேத்கர் விருது 2024 – ரவிக்குமார்

  • 1998முதல் வழங்கப்பட்டு வருகிறது.

அய்யன் திருவள்ளுவர் விருது 2025 – மு.படிக்கராமு

  • 1986முதல் வழங்கப்பட்டு வருகிறது.

பேரறிஞர் அண்ணா விருது 2024 – எல்.கணேசன்

  • 2006முதல் வழங்கப்பட்டு வருகிறது.

மகாகவி பாரதியார் விருது 2024 – கபிலன்

  • 1997முதல் வழங்கப்பட்டு வருகிறது.

தந்தை பெரியார் விருது 2024 – விடுதலை ராஜேந்திரன்

  • 1995முதல் வழங்கப்பட்டு வருகிறது.

பாவேந்தர் பாரதிதாசன் விருது 2024 – கபிலன்

  • 1978முதல் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்தென்றல் திருவிக விருது 2024 – ஜி.ஆர்.ரவீந்திரநாத்

  • 1979முதல் வழங்கப்பட்டு வருகிறது.

கி.ஆ.விசுவநாதம் விருது 2024 – வெ.மு.பொதிய வெற்பன்

  • 2000முதல் வழங்கப்பட்டு வருகிறது.

முத்தமிழறிஞர் கலைஞர் விருது 2024 – முத்து வாவாசி

  • 2024முதல் வழங்கப்பட்டு வருகிறது.

முபாரக் முன்சில்

Vetri Study Center Current Affairs - Mubarak Manzil Palace

  • 17-ம் நூற்றாண்டில் ஆக்ராவின் யமுனை நதிக்கரையில்  ஓளரங்கசீப்பால் கட்டப்பட்ட முபாரக் மன்சில் அரண்மனை தற்போது இடிக்கப்பட உள்ளது.
  • 1902-ல் ஆங்கிலேயர்கள் இந்த அரண்மனையை புதுபித்து தாரா நிவாஸ் என்ற பெயரில் அலுவக கட்டிடமாக மாற்றினர்.

தொடர்புடைய செய்திகள்

  • ஓளரங்கசீப் ஆலம்கீர் (உலகைக் கைப்பற்றியவர்) என்னும் பட்டத்தை சூட்டிக் கொண்டார்.
  • இந்துக்களின் மீது மீண்டும் ஜிஸ்யா வரியை விதித்தார்.
  • இவரின் ஆட்சிகாலத்தில் ஆங்கிலேயர்கள் மதராஸ் (சென்னை), கல்கத்தா, மும்பை ஆகிய இடங்களில் வணிக மையங்களை நிறுவினர்.
  • பிரெஞ்சுக்காரர்கள் தங்களின் முதன்மை வணிக மையத்தை பாண்டிச்சேரியில் நிறுவினர்.
  • இவரின் உத்தரவாலே சீக்கியர்களின் குருவான தேஜ்பகதூர் கொல்லப்பட்டார்.

பேரிடர் அறிவிப்பு

  • ஒடிசா மாநிலம் பருவமழையை இயற்கை பேரிடராக அறிவித்துள்ளது.

பசுமை GDP

  • முதன் முறையாக சத்திஸ்கர் மாநிலம் பசுமை GDP-யை ஏற்றுக் கொண்டுள்ளது.

நைட்ரேட் அளவு

  • CGWB வெளியிட்ட அறிக்கையின்படி இந்தியாவில் 440 மாவட்டங்களில் நைட்ரேட் அளவுகள் அதிகமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.
  • தண்ணீரில் அனுமதிக்கப்பட்ட நைட்ரேட் அளவு = 45 மி.கி./லி

முதியாேர் பராமரிப்பு குறியீடு

Vetri Study Center Current Affairs - Aging Index

  • முதியோர் பராமரிப்பு குறியீட்டில் (Aging Index) இந்தியா 123வது இடத்தை பிடித்துள்ளது.
  • முதலிடத்தை சுவிட்சர்லாந்து பிடித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • மனித வளக்குறியீடு – 134 வது இடம்
  • உலக மகிழ்ச்சி குறியீடு – 126 வது இடம்
  • உலக பட்டினி குறியீடு – 105 வது இடம்

ஃபைஸ் அகமது கித்வாய்

  • DGCA-ன் தலைவராக ஃபைஸ் அகமது கித்வாய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • Directorate General of Civil Aviation

HMPV வைரஸ்

  • சீனாவில் HMPV வைரஸ் பரவி வரும் தொற்றுக்கு தடுப்பூசி இல்லை.
  • இத்தொற்று 2001-ல் முதல் முறையாக கண்டறியப்பட்டது.

புதிய மாவட்டங்கள்

  • சீனா தனது இரண்டு புதிய மாவட்டங்களை லடாக் பகுதியில் அமைக்க உள்ளது.

முக்கிய தினம்

குரு கோவிந்த் சிங் ஜெயந்தி (Guru Gobind Singh Jayanthi Day) – ஜனவரி 6

உலக போர் அனாதைகள் தினம் (World day of war Orphans) – ஜனவரி 6

 

Related Links

Leave a Comment