Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 5th April 2025

Daily Current Affairs 

Here we have updated 5th April 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தூய்மை மிஷன்

  • தமிழ்நாடு அரசு நிலையான கழிவு மேலாண்மைக்காக தூய்மை மிஷன் என்ற தலைப்பில் மாநில அளவிலான இயக்கத்தை உருவாக்க உள்ளது.

வெம்பக்கோட்டை அகழாய்வு

Vetri Study Center Current Affairs_Vembakkottai

  • விருதுநகரின் வெம்பக்கோட்டை அகழாய்வில் செம்பிலான அஞ்சன கோலும், தங்கத்திலான மணியும் கண்டெடுக்கப்பட்டது.

பாறு கழுகுகள்

  • தமிழ்நாடு, கேரளா, கர்நாடாகா ஆகிய மூன்று மாநிலங்களிலும் பாறு கழுகுகளின் எண்ணிக்கை 390ஆக உள்ளது.
  • தமிழ்நாட்டில் 157 பாறு கழுகுகள் உள்ளன.
  • தமிழ்நாட்டில் பாறு கழுகுகளின் இனப்பெருக்கத்திற்கு முக்கியமான இடம் – முதுமலை புலிகள் காப்பகம்

ஒப்புதல்

  • ஸ்ரீஹரிகோட்டாவில் 3வது ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பரஸ்பர வரி

  • அண்மையில் அமெரிக்கா பல நாடுகளின் மீது பரஸ்பர வரியை விதித்துள்ளது.
  • இந்தியாவின் மீது 27% பரஸ்பர வரியை விதித்துள்ளது.
  • இந்த வரி ஏப்ரல் 9 முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
  • இந்தியா அமெரிக்காவின் மீது 52% பரஸ்பர வரியை விதித்துள்ளது.

அசாம்

  • இந்தியாவின் முதல் குப்பை கண்காணிப்பு ரேடார் அசாமின் சந்திராபூரில் அமைய உள்ளது.

மனோஜ் குமார்

Vetri Study Center Current Affairs_Manoj Kumar

  • அண்மையில் பழம்பெரும் இந்திநடிகர் மனோஜ்குமார் காலமானார்.
  • இவருக்கு 1992-ல் பத்மஸ்ரீ விருதும், 2015-ல் தாதா சாகேப் பால்கே விருதும் வழங்கப்பட்டிருந்தது

தொடர்புடைய செய்திகள்

  • இந்தியத் திரைப்படத் துறையின் தந்தை எனக் கருதப்படும் தாதாசாகேப் பால்கே அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டான 1969ஆம் ஆண்டு இவ்விருது வழங்கும் அமைப்பு நிறுவப்பட்டது.
  • 1969முதல் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.
  • 1969-ல் முதன்முதலில் தேவிகா ராணி இவ்விருதைப் பெற்றார்.

இவ்விருதினை தமிழகத்தில் பெற்றவர்கள்

  • 1996 – சிவாஜி கணேசன்
  • 2010 – கே. பாலச்சந்தர்
  • 2019 – ரஜினிகாந்த்

Related Links

Leave a Comment