Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 5th January 2024

Daily Current Affairs

Here we have updated 5th January 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தென்னை நார் கொள்கை

Vetri Study Center Current Affairs - Coir principle

 • ஜனவரி 04-ல் தமிழ்நாடு அரசானது தென்னை நார் கொள்கை வெளியிட்டுள்ளது.
 • 2030-க்குள் 3000 கோடி முதலீடு கொண்டு வரவும் 60,000 பேருக்கு வேலை அளிக்கவும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

 • தென்னை அறுவடை மற்றும் தாவர மேலாண்மை நடவடிக்கையை மேற்கொள்ள  ஹலோ நாரியல் அழைப்பு மையத்தினை தென்னை வளர்ச்சி வாரியம் (12.01.1981) அறிமுகம் செய்துள்ளது.

மலைத்தேன்

Vetri Study Center Current Affairs - Khadi Craft Mountain Honey

 • தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியமானது காதி கிராப்ட் மலைத் தேனை அறிமுகம் செய்துள்ளது.

75வது குடியரசு தின விழா

Vetri Study Center Current Affairs - Rajalakshmi - Jayapal

 • வால்பாறை கல்லாகுடி பகுதியைச் சேரந்த பழங்குடி தம்பதி ராஜலட்சுமி – ஜெயபால் 75வது குடியரசு தினவிழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.
 • அறவழியில் போராடி நில உரிமைகளை பெற்று தந்து தனது கிராமத்தை இந்தியாவில் மிகச்சிறந்த முன்மாதிரி கிராமமாக மாற்றியதற்காக கெளரவப்படுத்தும் வகையில் குடியரசு தின விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

 • இந்திய-நேபாள கூட்டு ஆணைய 7வது கூட்டத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் நேபாளத்திலிருந்து 10,000 மெகாவாட் மின்சாரத்தினை வாங்க இந்தியா ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 • இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் நேபாள எரிசக்தி, நீர்வளம், பாசனத்துறை அமைச்சர் சக்திபகதூர் பஸ்னேத் முன்னிலையில் இவ்வொப்பந்தம் கையெழுத்தானது.

தேசிய இளையோர் விழா

Vetri Study Center Current Affairs - National Youth Festival

 • ஜனவரி 12-16 வரை மகாராஷ்டிரா, நாசிக்-கில் தேசிய இளையோர் விழா 2024 நடைபெற உள்ளது.
 • 1995 முதல் ஜனவரி 12-ல் தேசிய இளையோர் தின விழாவானது (விவேகானந்தர் பிறந்த நாள் விழா) கொண்டாடப்பட்டு வருகிறது
 • இவ்விழாவினை முன்னிட்டு ஒன்றிய இளையோர் நலத்துறை மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில் தேசிய இளையோர் விழா நடத்தப்படுகிறது.

இணையதளம் தொடக்கம்

 • துவரம் பருப்பு கொள்முதலுக்கான இணையதளத்தினை மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்துள்ளார்.
 • 2027ஆம் ஆண்டுக்குள் துவரம்பருப்பில் தன்னிறைவு பெற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்திர மணி பாண்டே

Vetri Study Center Current Affairs - Indra Mani Pandey

 • பிம்ஸ்டெக் (BIMSTEC) அமைப்பின் 4-வது பொதுச்செயலாளராக இந்தியாவைச் சேர்ந்த இந்திர மணி பாண்டே பதவியேற்றுள்ளார்.
 • இப்பொறுப்பினை ஏற்கும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
 • BIMSTEC – வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார கூட்டமைப்பு
 • BIMSTEC கூட்டமைப்பு நாடுகள் – இந்தியா, வங்கதேசம், இலங்கை, மியான்மர், தாய்லாந்து, நேபாளம், பூடான்

புவிசார் குறியீடு

 • ஒடிசாவின் 7 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஒடிசாவில் 25 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
  1. லாஞ்சியா சவுரா பெயிண்டிங்
  2. டோங்கிரியா கோந்த் எம்பிராய்டரி சால்வை
  3. கஜுரிகுமா (பனை வெல்வம்)
  4. தேன்கல் மாஜி
  5. சிமிலி பால் காய் சட்னி
  6. நாயகர் கண்டேமுண்டி கத்தரிக்காய்
  7. கோராபுட் காலா ஜீரா அரிசி

நிலம் வாங்க தடை

 • உத்திரகாண்ட் மாநிலத்தில் வெளிமாநிலத்தவர் விவசாய நிலம் வாங்க தடைவிதித்து உத்திரகாண்ட மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

GSAT-20

Vetri Study Center Current Affairs - GSAT-20

 • ISROவின் GSAT-20 என்னும் தொலைத்தொடர்பு செயற்கைக்கோளானது ஸ்பேஸ் எக்ஸ் (Space-X) நிறுவனத்தின் பால்கன்-9 (Falcon-9) ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளது.

மெக்சியாங் கப்பல்

 • சீனா தனது முதல் கடல்சார் எண்ணெய் கிணறுகள் துளையிடும் கப்பலான மெக்சியாங் கப்பல் தொடங்கியுள்ளது.
 • புவியின் கண்ட மேலோட்டினை ஆராயும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மிகு குறுகிய டெஸ்ட் போட்டி

Vetri Study Center Current Affairs - Ind Vs SA Test

 • இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளுடன் (642 பந்துகள்) டெஸ்ட் போட்டி முடிவடைந்துள்ளது
 • இதற்கு முன் 1932-ல் மெல்பனில் ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் போட்டியில் 656 பந்துகளில் முடிந்துள்ளது.
 • நியூலேண்ட்ஸ் மைதானத்தில் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையை பெற்றுள்ளது.

 

January 3 Current Affairs | January 4 Current Affairs

Related Links

Leave a Comment