Daily Current Affairs
Here we have updated 5th July 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
காலை உணவுத்திட்டம்
- காமராஜர் பிறந்த நாளான (கல்வி வளர்ச்சி திருநாள்) ஜூலை 15-ல் காலை உணவுத் திட்டமானது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படுகிறது.
- இத்திட்டத்தினை தமிழக முதல்வர் திருவள்ளுவர் மாவட்டத்தில் வைத்து தொடங்கி வைக்க உள்ளார்.
- காலை உணவுத் திட்டம் (அண்ணாவின் பிறந்த நாள்) – 15.09.2022
திட்டம் விரிவாக்கம்
- மக்களுடன் முதல்வர் திட்டத்தின் விரிவாக்கத்தை ஜூலை 11-ல் தர்மபுரியில் தொடங்கி வைக்க இருப்பதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
- 18.12.2023-ல் மக்களுடன் முதல்வர் திட்டம் கோவையில் தொடங்கப்பெற்றது.
தொடர்புடைய செய்திகள்
- நான் முதல்வன் திட்டம் – 01.03.2022
- நான் முதல்வன் ஒலிம்பியாட் திட்டம் – 20.02.2024
- கள ஆய்வில் முதல்வர் திட்டம் – 01.02.2023
யுனெஸ்கோ உலக பாரம்பரிய குழு அமர்வு
- யுனெஸ்கோ உலக பாரம்பரிய குழுவின் 46வது அமர்வு இந்தியாவில் நடைபெறுகிறது.
மகேசன் காசிராஜன்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவராக மகேசன் காசிராஜன் பதவியேற்றுள்ளார்.
- இவர் ஆளுநரால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
- Tamilnadu Local Bodies Ombudsman Act 2014 கீழ் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது
- பதவிக்காலம் – 3 ஆண்டுகள்
ராஜீந்தர் கண்ணா
- கூடுதல் தேசிய பாதுகாப்பு ஆலோகராக ராஜீந்தர் கண்ணா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கூட்டு இராணுவப் பயிற்சி
- இந்தியாவிற்கும் தாய்லாந்திற்கும் இடையே மைட்ரீ கூட்டு இராணுவ பயிற்சி நடத்தப்படுகிறது.
குளோபல் இந்தியா AI உச்சி மாநாடு
- புதுதில்லியில் குளோபல் இந்தியா AI உச்சி மாநாடு (Global Partnership on Artificial Intelligence) நடைபெறுகிறது.
சாந்தாராம் வாழ்நாள் சாதனையாளர் விருது
- வனவிலங்கு திரைப்பட தயாரிப்பாளரான சுப்பையா நல்ல முத்துவிற்கு 18வது வி.சாந்தாராம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
- 18வது மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் இவவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
விஸ்வ ஹிந்தி சம்மான் விருது
- பிஜியில் நடைபெற்ற உலக ஹிந்தி மாநாடு 2023-ல் டாக்டர் உஷா தாக்கூருக்கு 12வது விஸ்வ ஹிந்தி சம்மான் விருது வழங்கப்பட்டுள்ளது.
- ஹிந்தி இலக்கிய மேம்பாட்டில் சிறப்பாக பங்களித்தற்காக இவ்விருதானது வழங்கப்பட்டுள்ளது.
ஜென்னி கரிக்னன்
- கனடாவின் முதல் பெண் முப்படை தளபதியாக ஜென்னி கரிக்னன் (Jenny Carignan) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.