Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 5th March 2024

Daily Current Affairs

Here we have updated 5th March 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

நத்தம் இணைய வழி பட்டா மாறுதல் திட்டம்

  • மயிலாடுதுறையில் நத்தம் நிலங்களுக்கு எளிதாக பட்டா பெறுவதற்காக நத்தம் இணைய வழி பட்டா மாறுதல் திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்
  • நத்தம் இணைய வழி பட்டா மாறுதல் திட்டம் – 04.03.2024
  • மேலும் மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தையும் திறந்து வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

  • இ-அடங்கல் – 2018

நீங்கள் நலமா

Vetri Study Center Current Affairs neengal nalama scheme

  • முதலமைச்சர் உள்பட அமைச்சர்கள், தலைமை செயலாளர்கள், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மக்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கருத்துகளை கேட்க நீங்கள் நலமா எனும் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
  • நீங்கள் நலமா – 06.03.2024

பேராசிரியர் அன்பழகன் விருது

  • பேராசிரியர் அன்பழகன் விருது 76 பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
  • பேராசிரியர் அன்பழகன் விருது: கற்றல், கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, மாணவர் வளர்ச்சி, தலைமைத்துவம் ஆகியவற்றில் பன்முக வளர்ச்சி சிறந்து விளங்கியதற்காக வழங்கப்படுகிறது.

சோழர் கால சிற்பம்

  • அரக்கோணம், நெமிலியை அடுத்த கீழ்வீதி ஊராட்சியின் பெரிய ஏரிக்கரையில் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால சோழர் கால துர்கை சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முக்கிய மந்திரி மஹிளா சம்மன் யோஜனா

  • 18 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டமானது டெல்லியில் தொடங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் – 15.09.2023

ADITI திட்டம்

  • பாதுகாப்பு துறைகளில் தொழில் நுட்பத்தை மேம்படுத்த ADITI திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
  • தில்லியில் நடைபெற்ற பாதுகாப்பு இணைப்பு 2024 நிகழ்ச்சியில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.

சென்னை ஐஐடி

  • தேசிய ஆராய்ச்சியாளர்கள் உச்சி மாநாடு 2024 சென்னை ஐஐடி-யில் நடைபெறுகிறது.

திரைப்பட விருதுகள்

Vetri Study Center Current Affairs Film Awards

  • சிறந்த திரைப்படம் – தனிஒருவன்
  • சிறந்த நடிகர் – ஆர்.மாதவன் (இறுதி சுற்று)
  • சிறந்த நடிகை – ஜோதிகா (38 வயதினிலே)
  • சிறந்த இயக்குநர் – சுதா கொங்கரா (இறுதி சுற்று)

உர ஆலை தொடக்கம்

  • ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிந்திரி உர ஆலையை பிரதமர் மோடி துவங்கி வைத்துள்ளார்.

ஆயுஷ்மான் திட்டம்

Vetri Study Center Current Affairs Ayushman Bharat Health Card

  • 5கோடி ஆயுஷ்மான் கார்டுகளை உத்திரப்பிரதேச மாநிலம் வழங்கியுள்ளது.
  • பிரதமரின் ஆயுஷ்மான் திட்டம் (மக்கள் ஆரோக்கிய திட்டம்) – 2018

சட்ட பாதுகாப்பு விதி

  • நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் வாக்களிக்கவோ அல்லது குறிப்பிட்ட தகவலை பேசவோ உறுப்பினர்கள் லஞ்சம் பெறுவது குற்றத்தண்டனை என உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது. மேலும் சட்ட பாதுகாப்பு கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றவியல் சட்ட பாதுகாப்பு விதி – 105(2)
  • சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றவியல் சட்ட பாதுகாப்பு விதி – 194(2)

இந்திரம்மா வீட்டுத் திட்டம்

  • தெலுங்கானாவில் வீடுகட்ட இந்திரம்மா வீட்டுத் திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் 2030க்குள் 8 லட்சம் வீடுகள் கட்டப்பட உள்ளது.

பச்சை ஹைட்ரஜன் ஆலை

  • துருப்பிடிக்காத எஃகு துறையில் இந்தியாவின் முதல் பச்சை ஹைட்ரஜன் ஆலையாது ஹரியானாவில் தொடங்கப்பட்டுள்ளது.

கேமிங் AI தளம்

  • கூகுள் நிறுவனமானது ஜீனி என்னும் கேமிங் AI தளத்தினை உருவாக்கியுள்ளது.

நீரஜ் சோப்ரா

Vetri Study Center Current Affairs Neeraj Chopra

  • நீரஜ் சோப்ரா ஸ்பீட் பெட்ரோலின் விளம்பர தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நீரஜ் சாய் பிரணீத் 

  • இந்திய பாட்மிண்டன் வீரரான சாய் பிரணீத் சர்வதேச பாட்மிண்டன் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.

நிராயுதபாணியாக்கம் மற்றும் பரவல் தடுப்பு விழிப்புணர்வுக்கான சர்வதேச தினம் (International Day for Disarmament and Non-Proliferation Awareness) – Mar 05

March 2 Current Affairs | March 3-4 Current Affairs

Related Links

Leave a Comment