Daily Current Affairs
Here we have updated 05th October 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தனிபெருங் கருணை தினம்
- அக்டோபர் 05-ல் வள்ளலாரின் 200வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.
- தமிழக அரசானது வள்ளலாரின் பிறந்த நாளான அக்டோபர் 5-ஐ தனிப்பெருங்கருணை தினமாக அறிவித்துள்ளது.
- இராமலிங்க அடிகளார் எனவும் அழைக்கப்படுகிறார்.
- கடலூர் மாவட்டத்தின் வடலூரில் சத்திய ஞான சபை நிறுவினார்
டாடா இலக்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது
- டாடா நிறுவனம் வழங்கும் டாடா இலக்கிய வாழ்நாள் சாதனையாளர் விருதானது அம்பை (சி.எஸ்.லெட்சுமி)-க்கு வழங்கப்பட்டுள்ளது.
- இவ்விருதினை பெறும் முதல் பெண் எழுத்தாளர் ஆவார்.
- சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை (2021-சாகித்திய அகாதமி விருது), வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு முதலிய நூல்களை எழுதியுள்ளார்.
அரசாணை வெளியீடு
- தெலுங்கானவில் தேசிய மஞ்சள் வாரியம் அமைக்க ஒன்றிய வர்த்தகம், தொழில் துறை அமைச்சகம் அரசாணை வெளியிட்டுள்ளது.
- தெலுங்கானாவில் மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- 2030-க்குள் ரூ.8,300 கோடி மதிப்புள்ள மஞ்சள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா முதலிய மாநிலங்கள் மஞ்சள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கின்றன.
- சர்வதேச அளவில் இந்தியா மஞ்சள் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது.
தேஜஸ் இலகுரக போர்விமானம் – ஒப்படைப்பு
- ஹிந்துஸ்தான் விமானவியல் நிறுவனம் தயாரித்த இரட்டை இருக்கை இலகுரக போர் விமானமானது இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நோபல் பரிசு (வேதியியல்)
- நுண் குவாண்டம் புள்ளிகளின் கண்டுபிடிப்பு மற்றும் தொகுப்பிற்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் லூயிஸ் புரூஸ் (அமெரிக்கா), நானோகிரிஸ்டல்ஸ் டெக்னாலஜி நிறுவனத்தில் பணியாற்றும் அலெக்ஸி எகிமோன் (ரஷ்யா), அமெரிக்காவின் மஸாசுசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் மெளங்கி பவெண்டி (பிரான்ஸ்) ஆகியோருக்கு வேதியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது.
- குவாண்டம் புள்ளிகள் சில அணுக்களின் விட்ட அளவை கொண்ட நுண்ணிய கூறுகளாகும். மிகப் பிரகாசமான வண்ண ஒளியை வெளியிடும் இப்புள்ளிகள் மின்னணுவியல் மற்றும் மருத்துவப் படிமவியலில் பயன்டுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
- அணுக்களின் எலக்ட்ரான்களிள் இயக்கத்தை பற்றி ஆராய்ச்சியில் புதிய வழிமுறையை கண்டுபிடித்தற்காக பியர் அகஸ்டினி, ஆன்லூலியேர், ஃபெரென்ஸ் க்ரெளஸ் ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது.
- கரோனா பாதிப்புக்கு எதிராக திறன்மிக்க எம்ஆர்என்ஏ (MRNA) தடுப்பூசியை உருவாக்க உதவியதற்காக கேத்தின் கரிக்கோ, ட்ரூ வைஸ்மேன் ஆகியோருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது.
ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை
- 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியானது இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெற உள்ளது.
ஆசிய விளையாட்டு
- தடகள ஆடவர் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கமும் , கிஷோர் ஜெனா வெள்ளியும் வென்றுள்ளனர்.
- ஆடவர் 4 x 400மீ தொடர் ஓட்டப் பிரிவில் முகமது அனஸ், அமோஜ் ஜேக்கப், அஜ்மல் முகமது, ராஜேஸ் ரமேஷ் தங்கம் வென்றுள்ளார்.
- மகளிர் 4 x 400மீ தொடர் ஓட்டப் பிரிவில் வித்யா ராம்ராஜ், ஐஸ்வர்யா மிஷ்ரா, பிரச்சி, சுபா வெங்கேடசன் வெள்ளி வென்றுள்ளனர்.
- மகளிர் 800மீ ஓட்டப் பிரிவில் ஹர்மிலன் பெயின்ஸ் வெள்ளி வென்றுள்ளார்.
- 5000மீ நீண்ட தூர ஓட்டப் பிரிவில் அவினாஷ் சாப்லே வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
- 35கி.மீ நடை ஓட்டம் கலப்பு பிரிவில் பாபுராம், மஞ்சு ராணி ஆகியோர் வெண்கலம் வென்றுள்ளனர்.
- வில்வித்தை காம்பவுண்ட் கலப்பு பிரிவில் ஜோதி சுரேகா, ஓஜாஸ் பிரவின் டியோஸ் தங்கம் வென்றுள்ளனர்.
- குத்துச் சண்டை மகளிர் 75கிலோ பிரிவில் லவ்வினா போரோகைன் வெள்ளி வென்றுள்ளார்.
- ஆடவர் மல்யுத்தம் – கிரேக்கா ரோமன் 87கிலோ பிரிவில் சுனில் குமார் வெண்கலம் வென்றுள்ளார்.
- ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் அனாஹத் சிங், அபய்சிங் வென்கலம் வென்றுள்ளனர்.
உலக ஆசிரியர் தினம் (World Teacher’s Day) – Oct 05
- கருப்பொருள்: “The Teachers we need for the education we want; The global imperative to reverse the teacher Shorage”
- செப்டம்பர் 5 – தேசிய ஆசிரியர் தினம்